புதன் (கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதன்
Mercury in color - Prockter07.jpg
விளக்கத்துடனான பெரிய படிமம்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
அச்சுச்சாய்வு
Albedo 0.10-0.12
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.

புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.

உட்கட்டமைப்பு[தொகு]

புவிநிகர் கோள்கள்: புதன், வெள்ளி, புவி, செவ்வாய்
புதனின் உட்கட்டமைப்பு:
1. மேலோடு: 100–300 கிமீ தடிப்பு
2. மூடகம்: 600 கிமீ தடிப்பு
3. உட்புறம்: 1,800 கிமீ ஆரை

புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கிமீ.[1] புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது.[2] சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ3.[1] ஐ விட சிறிது குறைவாகும்.

புவியில் இருந்து[தொகு]

புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளி படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளி படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும்.

புதனில் மானிடக் குடியேத்தின் சாத்தியங்கள்[தொகு]

நிலவை ஒத்த புதன்[தொகு]

மானிடர் புதனில் ஒருவேளைக் குடியேறினால் இப்படத்தில் ஒளிபடும் இடங்களின் விளிம்புகளை ஒட்டியே நகர்ந்து கொண்டிருப்பது போல் நகரங்களை உருவாக்க வேண்டும்

மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க)

இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும்.

நீராதாரம்[தொகு]

புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில்ல் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.

தடைகள்[தொகு]

இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன.

மேற்கோள்களும் உசாத்துணையும்[தொகு]

  1. 1.0 1.1 "Mercury Fact Sheet". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் Goddard Space Flight Center (நவம்பர் 30, 2007). பார்த்த நாள் 2008-05-28.
  2. Strom, Robert G.; Sprague, Ann L. (2003). Exploring Mercury: the iron planet. Springer. ISBN 1-85233-731-1. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=புதன்_(கோள்)&oldid=1667531" இருந்து மீள்விக்கப்பட்டது