வியாழன் (கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வியாழன் - Jupiter  வியாழனின் வானியல் குறியீடு
Jupiter by Cassini-Huygens.jpg
வியாழனனின் காசினி படம். படத்தின் கருச் சிறு நிழல் வியாழன் யுரேபா(நிலா)நிலாவாகும்.]].
தகுதி நிலை
பலுக்கல் கேட்கi/ˈpɪ-tər/[1]
பெயரடை Jovian
காலகட்டம் J2000
ஞாயிற்று தொலைவீச்சு 816,520,800 km (5.458104 AU)
ஞாயிற்றண்மை வீச்சு 740,573,600 km (4.950429 AU)
அரைப்பேரச்சு 778,547,200 km (5.204267 AU)
வட்டவிலகல் 0.048775
சுற்றுக்காலம் 4,332.59 நாட்கள்
11.8618 ஆண்டு
10,475.8 வியாழன் ஞாயிற்று நாள்கள்[2]
மையமிடச் சுற்றுக்காலம் 398.88 days[3]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 13.07 km/s[3]
சராசரி நெறிப் பிறழ்வு 18.818°
சாய்வுக் கோணம் 1.305° to Ecliptic
6.09° to Sun's equator
0.32° to Invariable plane[4]
நெடுவரை இறங்கு கணு 100.492°
இறங்கு கணு சிறும வீச்சுக் கோணம் 275.066°
துணைக்கோள் 64
இயற்பியல் பண்புகள்
சராசரி ஆரம் 69,911 ± 6 km[5][6]
நடுவரை ஆரம் 71,492 ± 4 km[5][6]
11.209 Earths
சமதளமாக்கல் 0.06487 ± 0.00015
நீள்கோள மேற்பரப்பளவு 6.1419×1010 km2[6][7]
121.9 Earths
கனஅளவு 1.4313×1015 km3[3][6]
1321.3 Earths
நிறை 1.8986×1027 kg[3]
317.8 புவி
1/1047 ஞாயிறு[8]
சராசரி அடர்த்தி 1.326 g/cm3[3][6]
நடுவரை நில ஈர்ப்பு 24.79 m/s2[3][6]
2.528 g
விடுபடு திசைவேகம் 59.5 km/s[3][6]
உடு சுழற்சிக் காலம் 9.925 h[9] (9 h 55 m 30 s)
நடுவரை சுழற்சி திசைவேகம் 12.6 km/s
45,300 km/h
கவிழ்ப்பச்சு 3.13°[3]
வடபுல வல எழுச்சிக் கோணம் 268.057°
17 h 52 min 14 s[5]
வடபுல சாய்வு 64.496°[5]
ஒளிமறைப்புத் துருவ அட்சக்கோடு 66,854 ± 10 km[5][6]
10.517 Earths
எதிரொளிதிறன் 0.343 (Bond)
0.52 (geom.)[3]
மேற்பரப்பு வெப்பம்
   1 bar level
   0.1 bar
குறை நடு மிகை
தோற்றப்பருமன் -1.6 to -2.94[3]
கோணவிட்டம் 29.8" — 50.1"[3]
வளிமண்டலம்
மேற்பரப்பு அழுத்தம் 20–200 kPa[10] (cloud layer)
அளவுத்திட்டவுயரம் 27 km
பொதிவு
89.8±2.0% ஐதரசன் (H2)
10.2±2.0% ஹீலியம்
~0.3% மீதேன்
~0.026% அமோனியா
~0.003% ஐதரசன் டியூட்ரைட் (HD)
0.0006% ஈத்தேன்
0.0004% நீர்
Ices:
அமோனியா
நீர்
அம்மோனியம் ஐடிரோசல்பைட்(NH4SH)

வியாழன் (Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

சூரிய சுற்றுப்பாதையில்(Solar Orbit), சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. சூரிய ஒளியை எதிரொளிக்கும் திறமையில், பூமியின் நிலவு, வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி்யாக வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை[Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.

இந்த வளியரக்கனின் நடுவரை விட்டம் (Equatorial Diameter) சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் (Polar Diameter) சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் (Asteroids'), வால் விண்மீன்கள் (Comets) போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும்(core) கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம்(Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jupiter, entry in the Oxford English Dictionary, prepared by J. A. Simpson and E. S. C. Weiner, vol. 8, second edition, Oxford: Clarendon Press, 1989. ISBN 0-19-861220-6 (vol. 8), ISBN 0-19-861186-2 (set.)
  2. Seligman, Courtney. "Rotation Period and Day Length". பார்த்த நாள் 2009-08-13.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; fact என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter" (2009-04-03). மூல முகவரியிலிருந்து 2009-04-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-10. (produced with Solex 10 written by Aldo Vitagliano; see also Invariable plane)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Seidelmann, P. Kenneth; Archinal, B. A.; A’Hearn, M. F.; et al. (2007). "Report of the IAU/IAGWorking Group on cartographic coordinates and rotational elements: 2006". Celestial Mechanics and Dynamical Astronomy 90 (3): 155–180. doi:10.1007/s10569-007-9072-y. Bibcode2007CeMDA..98..155S. http://adsabs.harvard.edu/doi/10.1007/s10569-007-9072-y. பார்த்த நாள்: 2007-08-28. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 Refers to the level of 1 bar atmospheric pressure
  7. "Solar System Exploration: Jupiter: Facts & Figures". NASA (7 May 2008).
  8. "Astrodynamic Constants". JPL Solar System Dynamics (2009-02-27). பார்த்த நாள் 2007-08-08.
  9. Seidelmann, P. K.; Abalakin, V. K.; Bursa, M.; Davies, M. E.; de Burgh, C.; Lieske, J. H.; Oberst, J.; Simon, J. L.; Standish, E. M.; Stooke, P.; Thomas, P. C. (2001). "Report of the IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites: 2000". HNSKY Planetarium Program. பார்த்த நாள் 2007-02-02.
  10. Anonymous (March 1983). "Probe Nephelometer". Galileo Messenger (NASA/JPL) (6). http://www2.jpl.nasa.gov/galileo/messenger/oldmess/2Probe.html. பார்த்த நாள்: 2007-02-12. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=வியாழன்_(கோள்)&oldid=1667122" இருந்து மீள்விக்கப்பட்டது