பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்
Sugar 2xmacro.jpgStilles Mineralwasser.jpg
Gasfas.pngPlasma-lamp 2.jpg
பொருளானது பொதுவாக திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்பட்டாலும் நான்காவது நிலையாக பிளாஸ்மா அறிவியல் விடயங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இடமிருந்து வலமாக: சுத்திகரிக்கப்பட்ட சீனி (ஒரு திண்மம்), [நீர்]] (ஒரு திரவம்),வாயு நிலைத் துணிக்கைகளின் படம், பிளாஸ்மா.

இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பொருட்களால் (Matter) ஆனவை. பொருள் அல்லது பொருட்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் தனிமங்களாலும்ம் அவற்றின் சேர்வைகளாலும் ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட அணுக் கட்டமைப்புக்களைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள் இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள் குவார்க் எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு விசை அரங்கு செயற்படுகின்றது.

பொருளடக்கம்

தத்துவ பின்னணி [தொகு]

  • பொருள் என்றால் என்ன?
  • வலு ஒரு பொருளா?
  • பொருள் அல்லாத ஒன்று உண்டா?
  • அப்படி இருந்தால், பொருள் அல்லாதது என்ன?
  • அப்படி இருந்தால், பொருள் அல்லாத ஒன்றுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு யாது?
  • உயிர், எண்ணம் போன்ற எண்ணக்கருக்களுக்கு பின் அமைவது மூளையில் உள்ள அமிலங்களின் செயற்பாடா? அல்ல அவை பொருள் அல்லாத இருப்புக்களின் எடுத்துகாட்டுக்களா?

மேலே சுட்டப்பட்ட கேள்விகள் போன்று பிற பல கேள்விகளுக்கு விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் பிறரும் விடைகாண முயல்கின்றார்கள். இம்முயற்சியும், அதன் விளைவான சமய, இலக்கிய, விஞ்ஞானப் படைப்புக்களும் பொருள் பற்றிய தத்துவப் பின்னணியை குறித்து நிற்கின்றன.

விஞ்ஞான விளக்கம் [தொகு]

எதற்குத் திணிவும் கனவளவும் இருக்கின்றதோ அது பொருள். பொருளை அணுக்களாகவும், அணுவை அணுக் கூறுகளாகவும், அணுக் கூறுகளை விசையாகவும் பகுத்தாயலாம். பொருளும் வலுவும் ஒன்றையே வெவ்வேறு நிலைகளிற் சுட்டி நிற்கின்றன. ஐன்சுரைனின் சமன்பாடு அவற்றின் ஒற்றுமைப் பண்பை பின்வருமாறு விளக்குகின்றது. E = mC^2

E = வலு
m = பொருளின் திணிவு
c = ஒளியின் கதி

விஞ்ஞான நிலைப்பாட்டிற் பொருள் அல்லாத ஒன்று இல்லை. அப்படி இருந்தாலுல் பொருள் அடிப்படையிலேயே அதை நாம் அறிய முடியும்.

நுட்பியல் சொற்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்&oldid=1386504" இருந்து மீள்விக்கப்பட்டது