தனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயற்கையில் காணப்படும் தனிமங்களையும் செயற்கையாக உருவாக்கிய தனிமங்களையும் சீரான ஒரு முறைப்படி அடுக்கப்பட்ட தனிம அட்டவணை

வேதியியலில் தனிமம் (இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஓவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் ஹைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: ஐதரசன்), ஆக்ஸிஜன் (இலங்கைத் தமிழ்: ஒட்சிசன்), நைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: நைதரசன்), தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.

நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், குளோரின் என்னும் தனிமமும் சேர்ந்த சோடியம் குளோரைடு என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.

தனிமங்கள் என்பது புவிக்கேளில் மட்டும் அல்லாது சூரியன் நிலவு , நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திலும் இருப்பவை ஆகும்.

2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளோட்டோனியம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே அணுச்சிதைவு உற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.

முதன் முதலாக தனிமங்களை அட்டவணைப்படுத்திய டிமித்திரி மெண்டலீவின் 1869 ஆம் ஆண்டுப் பட்டியல்

அண்டத்தில் மிகுந்து இருக்கும் தனிமங்கள்[தொகு]

அண்டத்தில் மிகுந்து இருக்கும் முதல் பத்து தனிமங்கள் இங்கு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன.

தனிமம் Parts per million
by mass
ஹைட்ரஜன் 739,000
ஹீலியம் 240,000
ஆக்ஸிஜன் 10,700
கரிமம் 4,600
நியான் 1,340
இரும்பு 1,090
நைட்ரஜன் 970
சிலிக்கான் 650
மக்னீசியம் 580
கந்தகம் 440

தனிமங்களின் குணங்கள்[தொகு]

ஹய்ட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியன மிகவும் லேசான ரசாயன தனிமங்கள் ஆகும்.மற்ற தனிமங்களை ஒப்பிடும் போது இதன் நிறை 3:1 பகுதியே ஆகும்.தனிமங்கள் இயற்கையாகவும், அணுக்கரு சிதைவின் மூலமும், காஸ்மிக் கதிர்களின் மூலமும் கிடைக்கப்படுகின்றது.ஒவ்வோரு தனிமத்திற்கும் அதன் அணு எண் , அடர்த்தி, உருகுநிலை, மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும்.

Hydrogen discharge tube.jpg Barium unter Argon Schutzgas Atmosphäre.jpg Copper.jpg HEUraniumC.jpg

Bromine vial in acrylic cube.jpg                            HeTube.jpg

அணு எண்[தொகு]

ஒரு தனிமத்தின் அணு எண் அதன் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்து வரையறுக்கப்படுகிறது.உதாரணமாக, அனைத்து கார்பன் அணுக்களின் கருவிலும் 6 புரோட்டான்கள் இருக்கும். எனவே கார்பனின் அணு எண் 6 .ஆனால் நியூட்ரான்கள் வெவ்வேறு எண்களில் இருக்கும்; நியூட்ரான்களின் எண்ணிக்கையை வேறுவேறாக கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ' ஓரிடத்தான்கள்' (isotope) என்று அழைக்கப்படுகின்றன . அணு கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கையே எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.அந்த எலக்ட்ரான்களே அந்த தனிமத்தின் மின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. எலக்ட்ரான்கள் அணுவின் பல்வேறு இரசாயன பண்புகளை தீர்மானிக்க, அந்த அணு அதற்கான சுற்றுப்பாதையில்(orbitals) வைக்கப்படுகின்றது. ஒரு கருவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை இரசாயன பண்புகளை தீர்மானிக்கிறது.

பண்புகள்[தொகு]

தணிமத்தின் பகுப்புகளில் பல்வேறு வகை உள்ளன. பொதுவாக தனிமத்தின் நிறம், மற்றும் இரசாயன பண்புகள், உருகுதல் மற்றும் கொதிநிலை, அவற்றின் அடர்த்தி,படிக கட்டமைப்புகள், மற்றும் தோற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உறுப்புகளின் பண்புகள் பிரிக்கப்படுகிறது.

தனிமத்தின் வகைகள்[தொகு]

ஆக்டினைடுகள், கார உலோகங்கள், கார மண் உலோகங்கள்,ஹாலஜன்கள், லாந்தனைடுகள், அரிய உலோகங்கள்; உலோகப்போலிகள் (மெட்டலாய்டுகள்), மந்த வாயுக்கள், பல்லணுவுள்ள அலோகங்கள் (நான்மெட்டல்கள்), ஈரணு உள்ள அலோகங்கள், மற்றும் இடைநிலை உலோகங்கள் ஆகியன தனிமத்தின் வகைகள் ஆகும்.

தனிமத்தின் மூன்று நிலைகள்[தொகு]

தனிமங்கள் மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலான தனிமங்கள் திட நிலையிலேயே இருக்கின்றன. சில தனிமங்கள் வாயுக்களாக கிடைக்கின்றன.ஆனால்,புரோமின் மற்றும் பாதரசம் மட்டும் சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் இருக்கும் போது திரவங்கள் ஆகும். சீசியம் மற்றும் கால்லியம் இரண்டும் திட தனிமங்களாகும். ஆனால், முறையே 28.4° C (83.2 ° F), 29.8 ° C (85.6 ° F) வெப்பநிலையில் உருக ஆரம்பித்துவிடும்.


தண்ணீரின் இரு நிலைகள்


தனிமங்களின் பெயர்கள்[தொகு]

தனிமங்களுக்கு முறையான பெயர் வைக்கும் முன்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் வழங்களாயிற்று.ஆனால் பின் சர்வதேச தொடர்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக , பண்டைய மற்றும் மிக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்களில் பயன்படுத்த தொடங்கினர். தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலிற்கான சர்வதேச ஒன்றியம் ( ஐ.யு.பி.ஏ. ) தனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டனர்.இவர்களே புதிய தனிமங்களுக்கும் பெயர் சூட்டுவர்.பொதுவாக தனிமங்களின் பெயர்கள் கண்டுபிடிப்பாளர்களின் பெயரையே சார்ந்து இருக்கும்.

சல்பர் தனிமம்

தனிமமும் அதன் அடையாளமும்[தொகு]

தனிமம் அடையாளம் தனிமத்தின்
வகை
ஹைட்ரஜன் H ஈரணு உள்ள அலோகங்கள்
ஹீலியம் He மந்த வாயு
போரான் B (உலோகப்போலிகள் ) மெட்டலாய்டு
பெர்லியம் Be கார மண் உலோகங்கள்
கரிமம் C பல்லணுவுள்ள அலோகங்கள் ( நான்மெட்டல்கள் )
நியான் Ne மந்த வாயு
இரும்பு Fe இடைநிலை உலோகம்
நைட்ரஜன் N ஈரணு உள்ள அலோகங்கள்
சிலிக்கான் Si மெட்டலாய்டு
மக்னீசியம் Mn இடைநிலை உலோகம்
பொலோனியம் Po அரிய உலோகம்

ஐசோடோப்புகளின் குறியீடுகள்[தொகு]

SolarSystemAbundances.png

ஓரிடத்தான்களுக்கும் ஏற்புடைய உறுப்பு சின்னங்கள் உள்ளன. ஐசோடோப்புகள் அணுவின் நிறை எண் (மொத்த புரோட்டான்களும் நியூட்ரான்களும்), மூலம் வேறுபடுகின்றன.ஓரிடத்தான்கலின் குறியீட்டிற்கு தனிமத்தின் குறியீடு எழுதப்பட்டு பின்னர் அணு எண்னை சூப்பர்ஸ்கிரிப்ட்டாக பயன்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக 12c மற்றும் 235U . எனினும், கார்பன்-12 மற்றும் யுரேனியம் -235, அல்லது C-12, U-235 போன்ற மற்ற குறியீடுகளையும், பயன்படுத்தலாம்.

அறியப்பட்ட 118 தனிமங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு[தொகு]

தனிமங்களின் பட்டியல்
அணு எண் பெயர் குறியீடு கூட்டம் ஆவர்த்தனம் தொகுதி சாதாரண நிலை கிடைப்பனவு விபரம்
1 நீரியம் H 1 1 s வாயு ஆரம்ப காலத்தான் Non-metal
2 ஈலியம் He 18 1 s வாயு ஆரம்ப காலத்தான் Noble வாயு
3 லித்தியம் Li 1 2 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkali metal
4 பெரிலியம் Be 2 2 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkaline earth metal
5 போரான் B 13 2 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
6 கரிமம் C 14 2 p திண்மம் ஆரம்ப காலத்தான் Non-metal
7 நைதரசன் N 15 2 p வாயு ஆரம்ப காலத்தான் Non-metal
8 ஆக்சிசன் O 16 2 p வாயு ஆரம்ப காலத்தான் Non-metal
9 புளோரின் F 17 2 p வாயு ஆரம்ப காலத்தான் Halogen
10 நியான் Ne 18 2 p வாயு ஆரம்ப காலத்தான் Noble வாயு
11 சோடியம் Na 1 3 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkali metal
12 மக்னீசியம் Mg 2 3 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkaline earth metal
13 அலுமீனியம் Al 13 3 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
14 சிலிக்கான் Si 14 3 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
15 பாசுபரசு P 15 3 p திண்மம் ஆரம்ப காலத்தான் Non-metal
16 கந்தகம் S 16 3 p திண்மம் ஆரம்ப காலத்தான் Non-metal
17 குளோரின் Cl 17 3 p வாயு ஆரம்ப காலத்தான் Halogen
18 ஆர்கான் Ar 18 3 p வாயு ஆரம்ப காலத்தான் Noble வாயு
19 பொட்டாசியம் K 1 4 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkali metal
20 கல்சியம் Ca 2 4 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkaline earth metal
21 இசுக்காண்டியம் Sc 3 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
22 டைட்டேனியம் Ti 4 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
23 வனேடியம் V 5 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
24 குரோமியம் Cr 6 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
25 மாங்கனீசு Mn 7 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
26 இரும்பு Fe 8 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
27 கோபால்ட் Co 9 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
28 நிக்கல் Ni 10 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
29 செப்பு Cu 11 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
30 துத்தநாகம் Zn 12 4 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
31 காலியம் Ga 13 4 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
32 செர்மானியம் Ge 14 4 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
33 ஆர்செனிக் As 15 4 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
34 செலீனியம் Se 16 4 p திண்மம் ஆரம்ப காலத்தான் Non-metal
35 புரோமின் Br 17 4 p திரவம் ஆரம்ப காலத்தான் Halogen
36 கிருப்டான் Kr 18 4 p வாயு ஆரம்ப காலத்தான் Noble வாயு
37 ருபீடியம் Rb 1 5 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkali metal
38 இசுட்ரோன்சியம் Sr 2 5 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkaline earth metal
39 இயிற்றியம் Y 3 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
40 சிர்க்கோனியம் Zr 4 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
41 நையோபியம் Nb 5 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
42 மாலிப்டினம் Mo 6 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
43 டெக்னீசியம் Tc 7 5 d திண்மம் நிலைத்தில்லாதது Transition metal
44 ருத்தேனியம் Ru 8 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
45 ரோடியம் Rh 9 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
46 பல்லேடியம் Pd 10 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
47 வெள்ளி Ag 11 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
48 காட்மியம் Cd 12 5 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
49 இண்டியம் In 13 5 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
50 வெள்ளீயம் Sn 14 5 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
51 ஆண்ட்டிமனி Sb 15 5 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
52 டெலூரியம் Te 16 5 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metalloid
53 அயோடின் I 17 5 p திண்மம் ஆரம்ப காலத்தான் Halogen
54 செனான் Xe 18 5 p வாயு ஆரம்ப காலத்தான் Noble வாயு
55 சீசியம் Cs 1 6 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkali metal
56 பேரியம் Ba 2 6 s திண்மம் ஆரம்ப காலத்தான் Alkaline earth metal
57 லாந்த்தனம் La 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
58 சீரியம் Ce 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
59 பிரசியோடைமியம் Pr 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
60 நியோடைமியம் Nd 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
61 புரோமித்தியம் Pm 3 6 f திண்மம் நிலைத்தில்லாதது Lanthanide
62 சமேரியம் Sm 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
63 யூரோப்பியம் Eu 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
64 கடோலினியம் Gd 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
65 டெர்பியம் Tb 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
66 டிசிப்ரோசியம் Dy 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
67 ஓல்மியம் Ho 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
68 எர்பியம் Er 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
69 தூலியம் Tm 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
70 இட்டெர்பியம் Yb 3 6 f திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
71 லியுதேத்தியம் Lu 3 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Lanthanide
72 ஆஃபினியம் Hf 4 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
73 டாண்ட்டலம் Ta 5 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
74 டங்க்ஸ்டன் W 6 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
75 இரேனியம் Re 7 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
76 ஓசுமியம் Os 8 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
77 இரிடியம் Ir 9 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
78 பிளாட்டினம் Pt 10 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
79 தங்கம் Au 11 6 d திண்மம் ஆரம்ப காலத்தான் Transition metal
80 பாதரசம் Hg 12 6 d திரவம் ஆரம்ப காலத்தான் Transition metal
81 தாலியம் Tl 13 6 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
82 ஈயம் Pb 14 6 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
83 பிசுமத் Bi 15 6 p திண்மம் ஆரம்ப காலத்தான் Metal
84 பொலோனியம் Po 16 6 p திண்மம் நிலைத்தில்லாதது Metal
85 அசுட்டட்டைன் At 17 6 p திண்மம் நிலைத்தில்லாதது Halogen
86 ரேடான் Rn 18 6 p வாயு நிலைத்தில்லாதது Noble வாயு
87 பிரான்சியம் Fr 1 7 s திண்மம் நிலைத்தில்லாதது Alkali metal
88 ரேடியம் Ra 2 7 s திண்மம் நிலைத்தில்லாதது Alkaline earth metal
89 அக்டினியம் Ac 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
90 தோரியம் Th 3 7 f திண்மம் ஆரம்ப காலத்தான் Actinide
91 புரோடாக்டினியம் Pa 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
92 யுரேனியம் U 3 7 f திண்மம் ஆரம்ப காலத்தான் Actinide
93 நெப்டியூனியம் Np 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
94 புளுடோனியம் Pu 3 7 f திண்மம் ஆரம்ப காலத்தான் Actinide
95 அமெரிகியம் Am 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
96 கியூரியம் Cm 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
97 பெர்க்கிலியம் Bk 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
98 கலிபோர்னியம் Cf 3 7 f திண்மம் நிலைத்தில்லாதது Actinide
99 ஐன்ஸ்டைனியம் Es 3 7 f திண்மம் செயற்கை Actinide
100 பெர்மியம் Fm 3 7 f திண்மம் செயற்கை Actinide
101 மெண்டலீவியம் Md 3 7 f திண்மம் செயற்கை Actinide
102 நொபிலியம் No 3 7 f திண்மம் செயற்கை Actinide
103 இலாரென்சியம் Lr 3 7 d திண்மம் செயற்கை Actinide
104 இரதர்ஃபோர்டியம் Rf 4 7 d செயற்கை Transition metal
105 தூப்னியம் Db 5 7 d செயற்கை Transition metal
106 சீபோர்கியம் Sg 6 7 d செயற்கை Transition metal
107 போரியம் Bh 7 7 d செயற்கை Transition metal
108 ஆசியம் Hs 8 7 d செயற்கை Transition metal
109 மெய்ட்னீரியம் Mt 9 7 d செயற்கை
110 டார்ம்சிட்டாட்டியம் Ds 10 7 d செயற்கை
111 இரோயன்ட்கெனியம் Rg 11 7 d செயற்கை
112 கோப்பர்நீசியம் Cn 12 7 d செயற்கை Transition metal
113 (உன்னுன்டிரியம்) Uut 13 7 p செயற்கை
114 பிளெரோவியம் Fl 14 7 p செயற்கை
115 (அன்அன்பென்டியம்) Uup 15 7 p செயற்கை
116 லிவர்மோரியம் Lv 16 7 p செயற்கை
117 (உனுன்செப்டியம்) Uus 17 7 p செயற்கை
118 (அனனாக்டியம்) Uuo 18 7 p செயற்கை


மேலும் பார்க்க[தொகு]


ஊசாத்துணைகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தனிமம்&oldid=1591393" இருந்து மீள்விக்கப்பட்டது