சமாரியம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
சமாரியம், Sm, 62 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
லாந்த்தனைடுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
இல்லை, 6, f | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெள்ளி போன்ற வெண்மை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
150.36(2) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Xe] 4f6 6s2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 24, 8, 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம்d | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
7.52 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
7.16 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
1345 K (1072 °C, 1962 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 2067 K (1794 °C, 3261 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
8.62 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
165 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 29.54 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | rhombohedral | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
3 (மென் கார ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 1.17 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 544.5 kJ/(mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2nd: 1070 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3rd: 2260 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 185 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
238 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | antiferromagnetic | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்தடைமை | (அறை வெ.நி.) (α, பல்படிக) 0.940 µΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 13.3 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சிமை | (r.t.) (α, பல்படிக) 12.7 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) |
(20 °C) 2130 மீ/நொடி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Young's modulus | (α வடிவம்) 49.7 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Shear modulus | (α வடிவம்) 19.5 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Bulk modulus | (α வடிவம்) 37.8 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் | (α வடிவம்) 0.274 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விக்கர் உறுதிஎண் Vickers hardness |
412 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
441 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7440-19-9 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சமாரியம் (ஆங்கிலம்: Samarium) என்பது ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் Sm என்னும் தனிமக் குறியீடு கொண்டுள்ளது. இதன் அணுவெண் 62, மற்றும் இத் தனிமத்தின் அணுக்கருவில் 88 நொதுமிகள் உள்ளன.
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]
சமாரியம் ஒரு அரிதில் கிடைக்கும் காரக் கனிமம். பார்ப்பதற்கு வெள்ளியைப் போல பளபளப்பாக வெண்ணிறத்தில் இருக்கும் லாந்த்தனைடு வகை மாழை. காற்று பட்டால் ஓரளவுக்கு சிதைவுறாமலும் மங்காமலும் நிலையாக இருக்கும். காற்றில் 150 °C வெப்பநிலையில் தீபற்றும். எண்ணெய்க்கடியில் வைத்திருந்தாலும் சிறுகச் சிறுக காலப்போக்கில் ஆக்ஸிஜன் ஏற்றம் பெற்று சாம்பல்-மஞ்சள் நிறம் பெற்ற ஆக்ஸைடு-ஹைட்ராக்ஸைடு பொடியாகின்றது. இம்மாழை மூன்று வகையான படிக மாற்றங்கள் அடைகின்றன. அறை வெப்பநிலையில் இருந்து அடையும் உரு மாற்றங்கள் 734 °C மற்றும் 922 °C வெப்பநிலைகளில் அடைகின்றன.
பயன்பாடுகள்[தொகு]
- திரைப்படத் தொழிலில் பயன்படும் கரிமத் தீப்பொறி வகை விளக்குகளில் அரிதில் கிடைக்கும் பிற காரக்கனிம மாழைகளோடு இதுவும் பயன்படுகின்றது.
- சிலவகையான லேசர்கள் (சீரொளி), மேசர்கள் (சீர்நுண்ணலை)க் கருவிகளில் பயன்படும் கால்சியம் ஃவுளூரைடு படிகங்களில் வேற்றுப்பொருள் ஊட்டாக சேர்க்கப் பயன்படுகின்றது.
- நொதுமி (நியூட்ரான்) உறிஞ்சியாக (உள்வாங்கியாக) அணு உலைகளில் பயன்படுகின்றது.
- காதணை ஒலிப்பிகளில் (headphones) பயன்படும் காந்தங்களில் ஓர் மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது.
- காந்தம் இழப்புறா நிலைக்காந்தங்களாகிய சமாரியம்-கோபால்ட் காந்தங்களில் (SmCo5 மற்றும் Sm2Co17) சமாரியம் பயன்படுகின்றது. இப்பண்புகளால், மின்மிகைப்பி பொருத்தியுள்ள கிட்டார் போன்ற இசைக்கருவிகளில் ஒலிபற்றிகளில் பயன்படும் காந்தத்தில் பயன்படுகின்றது
- கரிம வேதியியலில் பயன்படும் பார்பியர் வினையில்(Barbier reaction) பயன்படும் ஒரு வேதியியல் பொருளாக சமாரியம் அயோடைடு பயன்படுகின்றது.
- கண்ணாடித் தொழிலில் ஒளி ஊடுருவும் கண்ணாடிகளில், அக சிவப்புக் கதிர்கள் கடப்பதைத் தடுக்க சமாரியம் பயன்படுகின்றது.
- சமாரியம் அகச்சிவப்புக் கதிர்கள் பட்டால் ஒளிரும் பாஸ்பர்களில் ஓர் ஊட்டுப் பொருளாகப் பயன்படுகின்றது.
- சமாரியம் ஆக்ஸைடு, ஒரு வினையூக்கியாக (வினைத்தூண்டியாக) எத்தனாலின் ஹைட்ரஜன் நீக்கி வினையிலும் நீர்நீக்கி வினைகளிலும் பயன்படுகின்றது.
- கதிரியக்கம் தரும் சமாரியம்-153 மருத்துவத்தில் எலும்பு வரை பரவிய புற்று நோய் உடையவர்களின் வலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றது. மருந்தின் பெயர் குவாட்ராமெட் "Quadramet".
வரலாறு[தொகு]
1853 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் ழ்சான் சார்லெ கலிசார்ட் டெ மரின்யாக் என்பவர் டிடிமியம் என்னும் பொருளைக் கொண்டு ஒளிமாலை ஆய்வுகள்செய்த மொழுது ஒளி உள்வாங்கும் அலைநீளங்களைத் துல்லியமாக அளந்த பொழுது சமாரியத்தைக் கண்டு பிடித்தார். பிரான்சில் உள்ள [[பாரிசு}|பாரிசில்]] 1879ல் பால் எமில் பௌத்ரன் என்பவர் சமார்ஸ்கைட் (Y,Ce,U,Fe)3(Nb,Ta,Ti)5O16) என்னும் கனிமத்தில் இருந்து சமாரியத்தைப் பிரித்தெடுத்தார். ஊரல் மலைப்பகுதிகளில் சமார்ஸ்கைட் கிடைத்திருந்தாலும், 1870களில் ஐக்கிய அமெரிக்கா\அமெரிக்காவில் உள்ள வட கரோலைனா மாநிலத்தில் கண்டுபிடித்த புதிய படிவுகளில் இருந்தே சமாரியம் உள்ள டிடிமியம் என்னும் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
சமார்ஸ்கைட் என்னும் பெயர் 1854 ல் உருசிய சுரங்க பொறியாளர்களில் தலைவராக இருந்த வாசில் சமார்ஸ்கி-பிக்கோவெட்ஸ் என்பாரைப் பெருமைப்படுத்துவதாக அவர் உயிருடன் இருந்த பொழுதே வழங்கப்பட்டது.
கிடைக்கும் மலிவு[தொகு]
சமாரியம் தனியாக கிடப்பதில்லை. மற்ற அரிதாகக் கிடைக்கும் தனிமங்களைப்போலவே இதுவும் பிற கனிமங்களில் உள்ள கலவைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. மோனசைட், பாஸ்ட்னாசைட், சமார்ஸ்கைட் ஆகிய கனிமங்களில் இருந்து சமாரியம் கிடடக்கின்றது. மோனசைட் என்னும் கனிமத்தில் 2.8% ம், சமார்ஸ்கைட்டில் 1% அளவும் சமாரியம் கிடக்கின்றது. மின்மவணு-மாற்றிகளில்ன் வழியும், மின்வேதியல் படிவுகளின் வழியும், சமாரியம் (III) குளோரைடு சோடியம் குளோரைடு ஆகியவை சேர்ந்துருகிய கலவைகளில் மின் பகுப்பாய்வு வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. சமாரியம் ஆக்ஸைடில் இருந்து லாந்த்தனம் வழி ஆக்ஸிஜன் இறக்க வினைகளின் வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது.
கூட்டுப் பொருட்கள்[தொகு]
• அயோடைடுகள் • ** SmI2
ஓரிடத்தான்கள்[தொகு]
முன்காப்புச் செய்திகள்[தொகு]
மற்ற லாந்த்தனைடுகள் போலவே சமாரியமும் குறைந்த அல்லது இடைப்பட்ட நச்சுத்தனமை கொண்டது. என்றாலும் இதன் நச்சுத்தன்மைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் விரிவாக செய்யப்படவில்லை.
மேற்கோள்கள் குறிப்புகள்[தொகு]
- N. N. Greenwood, A. Earnshaw, Chemistry of the Elements, Pergamon Press, Oxford, UK, 1984.
வெளி இணைப்புகள்[தொகு]
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||