கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுமியம் என்பது Os ஐ குறியீடாகக் கொண்டதும் 76ஐ அணு எண்ணாகக் கொண்டதுமான ஒரு வேதியல் தனிமம் ஆகும். இது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய தாண்டல் உலோகம் ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm3 ஆகும். இது இயற்கையாகவே இரீடியம் மற்றும் பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். இது மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.[1]
பண்புகள் [தொகு]
இது பளபளக்கும் சாம்பல் நிறமுடையது. இது மிக அதிகமான வெப்பநிலையிலும் மினுமினுக்கும் தன்மையைப் பேணக் கூடியது.
ஓரிடத்தான்கள் [தொகு]
ஓசுமியத்தின் இயற்கையாகக் காணப்படும் ஏழு ஓரிடத்தான்கள் உள்ளன. இவற்றில் ஆறு நிலையானவை ஆகும். 184Os, 187Os, 188Os, 189Os, 190Os, 192Os (அதிகமாக உள்ளது) என்பவையே நிலையானதாகும் . 186Os பல ஆண்டுகளின் பின்னர் அல்ஃபா அழிவு மூலம் பிரிகையடையும் இயற்கையான ஓரிடத்தானாகும். இப்பிரிகையடைதல் ஏனையவற்றிற்கும் இருக்கலாமென நம்பப்பட்டாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
உசாத்துணை [தொகு]
- ↑ Hammond "Osmium", C. R., p. 4–25 in Lide, D. R., ed (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. ISBN 0-8493-0486-5.
வெளி இணைப்புக்கள் [தொகு]