அல்ஃபா சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பா சிதைவு
அணுக்கருவியல்
கதிரியக்கம்
அணுக்கரு பிளவு
அணுக்கரு பிணைவு
மரபார்ந்த சிதைவுகள்
ஆல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காமா கதிரியக்கம் · கொத்துச் சிதைவு

ஆல்ஃபா சிதைவு அல்லது α-சிதைவு (alpha decay) என்பது ஒரு அணுக்கருவிலிருந்து ஒரு ஆல்ஃபா துகள் வெளியேற்றப்படும் ஒரு வகை கதிரியக்கச் சிதைவு ஆகும். இந்தச் சிதைவுக்கு முன்பிருந்த தனிமம் இரண்டு அணுவெண்ணும் நான்கு திணிவெண்ணும் குறைக்கப்பட்டு ஒரு புதிய தனிமாக மாற்றமடைகிறது. ஆல்ஃபா துகளானது ஹீலியம்-4 அணுவின் அணுக்கருவை ஒத்தது. ஆல்ஃபா துகளின் மின்னூட்டம் +2 e, நிறை 4 டா அணு நிறை அலகு.[1][note 1][2]

எடுத்துக்காட்டாக, சிதைவுறும் போது துகளை உமிழ்ந்து தோரியமாக மாறுகிறது.

இது பொதுவாக இவ்வாறு எழுதப்படும்:

ஆல்ஃபா சிதைவு பொதுவாக கனமான அணுக்கருக்களில் நிகழ்கிறது. கோட்பாட்டளவில், ஒவ்வொரு அணுக்கருனிக்குமான ஒட்டுமொத்த பிணைப்பாற்றல் அதிகமாக இல்லாமலும், அதனால் அணுக்கருக்கள் தன்னிச்சையான பிளவு-வகை செயல்முறைகள் நோக்கில் நிலையற்றதாகவும் உள்ள நிக்கலை (தனிமம் 28) விட கனமான கருக்களில் மட்டுமே நிகழும். நடைமுறையில், இந்தச் சிதைவுமுறை நிக்கலை விட வெகுகனமான அணுக்கருக்களில் மட்டுமே அறியப்படுகிறது. அறியப்பட்ட பாரம் குறைந்த ஆல்ஃபா உமிழ்ப்பான்கள் டெல்லூரியத்தின் (தனிமம் 52) மென்மையான ஓரிடத்தான்கள் (நிறைவு எண்கள் 104-109) ஆகும். விதிவிலக்காக, பெரிலியம்-8 இரண்டு ஆல்ஃபாத் துகள்களாகச் சிதைகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. These other decay modes, while possible, are extremely rare compared to alpha decay.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gamow theory of alpha decay". 6 November 1996. Archived from the original on 24 February 2009.
  2. Belli, P.; Bernabei, R.; Danevich, F. A. et al. (2019). "Experimental searches for rare alpha and beta decays". European Physical Journal A 55 (8): 140–1–140–7. doi:10.1140/epja/i2019-12823-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1434-601X. Bibcode: 2019EPJA...55..140B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃபா_சிதைவு&oldid=3773171" இலிருந்து மீள்விக்கப்பட்டது