காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காடி, அமிலம் அல்லது புளிமம் என்பது, நீரில் கரைத்தால் ஐதரச மின்மவணுக்கள் (அயனிகள்) தூய நீரில் இருப்பதைக்காட்டிலும் கூடுதலாக இருக்குமாறு செய்யக்ககூடிய ஒரு வேதிப் பொருள். அப்படி கூடுதலான ஐதரச மின்மவணுக்கள் இருப்பதல் ஐதரோனியச் சுட்டெண் (pH) 7.0 ஐ விடக் குறைவாக இருக்கும் (அதாவது ஐதரோனியக் மின்மவணு (H3O+) அதிகமாக இருக்கும்; சுட்டெண் கழித்தல் மடக்கை அடிப்படையில் ஆனதால்). காடிகள் புளிப்புச் சுவை கொண்டவையாக இருக்கும். ஆகவே காடியைப் புளிமம், அமிலம் என்றும் கூறுவர். பல காடிகள் தோலில் பட்டாலும் 'சுறுசுறு' என்று எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு (Johannes Nicolaus Brønsted), மார்ட்டின் லோரி (Martin Lowry) என்னும் வேதியியலாளர்கள், காடி என்பதற்கு தந்த தற்கால வரையறையின்படி ஒரு வேதிப்பொருளுக்கு ஐதரசை மின்மவணுவை (hydrogen ion (H+)) கொடுக்கும் பொருளுக்கு காடி என்று பெயர். புளிக்கரைசல், எலுமிச்சை சாறு, வினிகர், கந்தகக் காடி போன்ற இவை எல்லாம் காடிகளுக்கு எளிய எடுத்துக்காடுகள். பல காடிகள் செப்பு, துத்தநாகம் போன்ற மாழைகளைக் கரைக்கவல்லவை. நீல லிட்மசுத் தாளை சிவப்பாக்கும் பண்பு கொண்டது. காரப்பொருட்கள் (Bases) காடிகளின் தன்மையை நீர்த்து விடும்.

பொருளடக்கம்

மாற்று விளக்கம் [தொகு]

காடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை.

காடி நீரில் எப்படி கலக்கிறது? [தொகு]

காடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது.

இதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது.

காடியின் வலிமை: [தொகு]

காடி எந்த அளவுக்கு கரைசலில் ஐதரசன் மின்மவணுக்களை தன்னிடமிருந்து பிரித்துக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து காடியின் வலிமை தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக - ஐதரோ குளோரிக் காடியின் (HCl) ஒவ்வொரு மூலக்கூற்றுகளும் (சேர்மங்களும்) கரைசலில் ஐதரசன் மின்மவணுக்களை விடுவிக்கிறது. அதனால் இது வலிமையான காடியாகவும். அசிட்டிக் காடி (வினிகரில் இருப்பது) ஒரு சில மின்மவணுக்களை மட்டுமே விடுவிப்பதால் மென்மையான காடி என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


கனிமக் காடிகள் (In-Organic Acids) [தொகு]

பொதுவாக கார்பன் அணுக்களைக் கொண்டிராதவை. பல கனிம (in-organic) அமிலங்கள் மிக வலிமையானவை. வெடிமருந்துகள், உரங்கள், மாழைகள் (உலோகங்கள்), நிறச்சாந்து (பெயிண்ட்), நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் செய்சேர் (செயற்கை) இழைகள் முதலியவை உருவாக்க உதவுகின்றன.

ஊர்திகளில் மின்கல அடுக்குகளில் ( பேட்டரிகளில்) பயன்படுத்தப்படும் கந்தகக் காடி ஒரு கனிமக் காடியாகும். ஐதர்ரோ குளோரிக் காடி, நைட்ரிக் காடி ஆகியவை பிற முக்கிய கனிமக் காடிகள்.

கரிமக் காடிகள் (Organic Acids) [தொகு]

இவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், உடலழகுப் பொருட்கள், டிட்டர்ச்செண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள், நெகிழிகள் படைக்க உதவுபவை.

சிட்ரிக் காடி, அசுகார்பிக் காடி (விட்டமின் C), அசிட்டைல் சாலிசைலிக் காடி (ஆஸ்பிரின்) மற்றும் அமினோக் காடிகள் போன்றவை பரவலாக அறிந்த கரிமக் காடிகள்.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காடி&oldid=1341613" இருந்து மீள்விக்கப்பட்டது