மின்மமாக்கும் ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தனிமங்களில் மின்மமாக்கும் ஆற்றல். ஒவ்வோர் ஆவர்த்தனமும் கார உலோகங்களுக்கு மிகக் குறைந்த ஆற்றலில் இருந்து ஆரம்பித்து, அருமன் வாயுக்களுக்கு மிக அதிக ஆற்றலில் முடிவடைகிறது.

மின்மமாக்கும் ஆற்றல் (Ionization energy, EI) அல்லது அயனியாக்கும் மின்னழுத்தம் (ஓர் அணு அல்லது மூலக்கூற்றினது) வளிமநிலை அணு அல்லது மூலக்கூற்றின் கடைசி வெளிச்சுற்றில் வலம்வரும் இலத்திரனை விடுவிக்கத் தேவைப்படும் ஆற்றலாகும். இது அந்த வளிம அணு அல்லது மூலக்கூறு வெற்றிட வெளியில் தனது கடைமட்ட இலத்திரன் நிலையில் இருக்கும்போது வரையறுக்கப்படும்.

X → X+ + e-

அறிவியலில் மின்மமாக்கும் ஆற்றல் பல்வேறு அலகுகளில் தரப்படுகின்றன. இயற்பியலில் இது இலத்திரன்வோல்ட்டுகளில் (eV) அளவிடப்படும். வேதியியலில் கிலோஜூல்/மோல் (kJ/mol) அல்லது கிகலோரி/மோல் (kcal/mol) இல் தரப்படுகிறது. (இங்கு ஒரு மோல் அணு அல்லது மூலக்கூறில் இருந்து ஒரு மோல் இலத்திரனை வெளியேற்றத் தேவைப்படும் ஆற்றல்).

nவது மின்மமாக்கும் ஆற்றல் என்பது (n-1) ஏற்றத்தைக் கொண்ட ஓர் அணுவில் இருந்து ஒரு இலத்திரனை வெளியேற்றத் தேவையான ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக, முதல் மூன்று மின்மமாக்கும் ஆற்றல்கள் பின்வருமாறு தரப்படும்:

1வது மின்மமாக்கும் ஆற்றல்:
X → X+ + e-
2வது மின்மமாக்கும் ஆற்றல்:
X+ → X2+ + e-
3வது மின்மமாக்கும் ஆற்றல்:
X2+ → X3+ + e-
"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்மமாக்கும்_ஆற்றல்&oldid=1683258" இருந்து மீள்விக்கப்பட்டது