லித்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
3 ஹீலியம்லித்தியம்பெரிலியம்
H

Li

Na
Li-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
லித்தியம், Li, 3
வேதியியல்
பொருள் வரிசை
கார மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
1, 2, s
தோற்றம் வெள்ளி/சாம்பல் நிறம்
Li,3.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
6.941(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
1s2 2s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
0.534 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
0.512 g/cm³
உருகு
வெப்பநிலை
453.69 K
(180.54 °C, 356.97 °F)
கொதி நிலை 1615 K
(1342 °C, 2448 °F)
நிலைமாறும்
புள்ளி
(extrapolated)
3223 K, 67 MPa
நிலை மாறும்
மறை வெப்பம்
3.00 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
147.1 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.860 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 797 885 995 1144 1337 1610
அணுப் பண்புகள்
படிக அமைப்பு நடுவணு் கட்டகம்
ஆக்ஸைடு
நிலைகள்
1
(strongly basic oxide)
எதிர்மின்னியீர்ப்பு 0.98 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 520.2 kJ/mol
2nd: 7298.1 kJ/mol
3rd: 11815.0 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
167 pm
கூட்டிணைப்பு ஆரம் 134 pm
வான் டெர் வால்
ஆரம்
182 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை காந்தத்தன்மை அற்றது
மின் தடைமை (20 °C) 92.8 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 84.8
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 46 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 6000 மீ/நொடி
Young's modulus 4.9 GPa
Shear modulus 4.2 GPa
Bulk modulus 11 GPa
மோவின்(Moh's) உறுதி எண் 0.6
CAS பதிவெண் 7439-93-2
மேற்கோள்கள்

லித்தியம் என்பது வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்). இது தனிம அட்டவணையில் 3 ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3, மற்றும் இதன் அணுக்கருவில் 4 நொதுமிகள் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். மாழைகள் (உலோகங்கள்) யாவற்றினும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இவ் லித்தியம்தான். லித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதி அளவுதான். லித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது.

லித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, எலெக்ட்ரான்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த 3 எதிர் மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உள் சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன, அனால் ஒரேயொரு எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால் எளிதில், இம்மின்னியை வேதியியல் வினைகளில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), எளிதில் லித்தியம் தனியாய் கிடைப்பதில்லை. தூய லித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் வெப்பக் கொண்மம் எல்லா திண்ம நிலைப் பொருட்களிலும் மிகப்பெரியது = 3582 J/(kg•K). அதாவது ஒரு கி.கி எடையுள்ள லித்தியத்தின் வெப்பநிலையை ஒரு டிகிரி கெல்வின் உயர்த்த வேண்டுமெனில், 3582 ஜூல்(Joule) ஆற்றல் தரவேண்டும்.

சிறு சிறு லித்தியம் கட்டிகள். லித்தியம் ஹைட்ராக்ஸைடு பூத்து இருப்பதால் வெள்ளையாக உள்ளது.

லித்தியம் புவியில் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவன பொருள்[1]. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியன் பங்குக்கு 20 முதல் 70 பங்கு (ppm) [2] என்ற அளவில் உள்ளது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Krebs, Robert E. (2006). The History and Use of Our Earth's Chemical Elements : A Reference Guide. Westport, Conn.: Greenwood Press. pp. 47-50. ISBN 0-313-33438-2. 
  2. Kamienski et al. "Lithium and lithium compounds". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. John Wiley & Sons, Inc. Published online 2004. doi:10.1002/0471238961.1209200811011309.a01.pub2

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்