மின்கலம்
மின்சக்தியை இரசாயன முறையில் உற்பத்தி செய்தளிக்கும் மின்னிரசாயனத் தொகுதிகளை மின்கலம் எனக் கூறுகிறோம். மின்கலங்களில் வேதியியல் தாக்கங்களின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு நடைபெறும் சக்தி மாற்றம் இரசாயன சக்தி மின் சக்தியாக மாற்றப்படுவதாகும்.
வகைகள் [தொகு]
மின்கலங்களைப் பிரதானமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
- முதன்மைக் கலங்கள்
- துணைக் கலங்கள்
வரலாறு [தொகு]
தனியொரு மின்னிரசாயன கலம் மின்கலம் எனவும் பல மின்னிரசாயன கலத்தொகுதிகள் ஒன்றுசேர்த்து மின்கலவடுக்கு என வழங்கப்பட்டாலும் நடைமுறையில் மின்கலம், மின்கலவடுக்கு என்பவை ஒரே பொருள் கொண்டே நோக்கப்படுகிறது. முதலாவது மின்கலம் இத்தாலிய நாட்டு இயற்பியல் அறிஞரான அலக்சான்றோ வோல்ட்டாவினால் 1782இல் உருவாக்கப்பட்டு 1800களில் முதலாவது கலத்தொகுதி கண்டறியப்பட்டது. [1]
கலவடுக்கு ("battery") என்ற பதத்தை மின்னுபகரணமொன்றைக் குறிப்பிட முதலில் பயன்படுத்தியவர் பெஞ்சமின் பிராங்கிளின் ஆவார். இவர் 1748இல் ஆரம்பகால மின் கொள்ளளவிகளான லேய்டின் கொள்கலன்கள் கொண்ட தொகுதியை பீரக்கிக் கலவடுக்குக்கு இணையாக விபரித்தார்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Bellis, Mary. Alessandro Volta - Biography of Alessandro Volta - Stored Electricity and the First Battery. About.com. Retrieved 7 August 2008.
- ↑ Bellis, Mary. History of the Electric Battery. About.com. Retrieved 11 August 2008.
