இலித்தியம் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் கார்பனேட்டு
2 Structure of Li+-Ions Structure of Carbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
இருலித்தியம் கார்பனேட்டு, கார்போலித், சிபாலித்-S, டியூராலித், எஸ்காலித், இலித்தேன், இலித்திசின், இலித்தோபிட், இலித்தோனேட்டு, சாபுயெலைட்டு
இனங்காட்டிகள்
554-13-2 Y
ChEBI CHEBI:6504 Y
ChEMBL ChEMBL1200826 N
ChemSpider 10654 Y
InChI
  • InChI=1S/CH2O3.2Li/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2 Y
    Key: XGZVUEUWXADBQD-UHFFFAOYSA-L Y
  • InChI=1/CH2O3.2Li/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2
    Key: XGZVUEUWXADBQD-NUQVWONBAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00801 Y
பப்கெம் 11125
வே.ந.வி.ப எண் OJ5800000
SMILES
  • [Li+].[Li+].[O-]C([O-])=O
UNII 2BMD2GNA4V Y
பண்புகள்
Li
2
CO
3
வாய்ப்பாட்டு எடை 73.89
தோற்றம் மணமற்ற வெண்ணிறத் துாள்
அடர்த்தி 2.11 கி/செமீ3
உருகுநிலை 723 °C (1,333 °F; 996 K)
கொதிநிலை 1,310 °C (2,390 °F; 1,580 K)
~1300 °செல்சியசில் சிதைவடைகிறது
  • 1.54 கி/100மிலி (0°செல்சியசு)
  • 1.43 கி/100மிலி (10°செல்சியசு)
  • 1.29 கி/100மிலி (25°செல்சியசு)
  • 1.08 கி/100மிலி (40°செல்சியசு)
  • 0.69 கி/100மிலி (100°செல்சியசு)[2]
கரைதிறன் அசிட்டோன், அமோனியா, எத்தனால் ஆகியவற்றில் கரைவதில்லை
−27.0·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.428[3]
பிசுக்குமை
  • 4.64 cP (777 °C)
  • 3.36 cP (817 °C)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1215.6 கிலோஜூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
90.37  ஜூல்/மோல்·கெல்வின்
வெப்பக் கொண்மை, C 97.4 ஜூல்/மோல்·கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1109
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[4]
GHS signal word Warning
H302, H319[4]
P305+351+338[4]
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
525 mg/kg (oral, rat)[5]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் கார்பனேட்டு
பொட்டாசியம் கார்பனேட்டு
ருபீடியம் கார்பனேட்டு
சீசியம் கார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இலித்தியம் கார்பனேட் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது Li
2
CO
3
மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இலித்தியத்தின் கார்பனேட்டு உப்பு ஆகும். இந்த வெள்ளை நிற உப்பு உலோக ஆக்சைடுகளை பதப்படுத்துவதற்கும் மனநிலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இருமுனையப் பிறழ்வுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது அடிப்படை சுகாதார அமைப்பிற்குத் தேவைப்படும் மிகவும் முக்கியமான மருந்துகளில் ஒன்றாகும்.[6]

பயன்கள்[தொகு]

இலித்தியம் கார்பனேட் ஒரு முக்கியமான தொழில்துறை வேதிப்பொருளாகும். இது சிலிக்கா மற்றும் பிற பொருட்களுடன் இணைந்து எளிதில் உருகும் இளக்கிகளை உருவாக்குகிறது. இலித்தியம் கார்பனேட்டிலிருந்து பெறப்பட்ட கண்ணாடிகள் கணப்பு அடுப்பு பாத்திரங்கள் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இலித்தியம் கார்பனேட் குறைந்த தீ வெங்களி பளபளப்பாக்கம் மற்றும் உயர்-தீ வெங்களி பளபளப்பாக்கம் இரண்டிலும் பயன்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இலித்தியம் கார்பனேட்டை சேர்த்து தயாரிக்கப்படும் சிமென்ட் மிகவும் விரைந்து இறுகும் தன்மையைப் பெறுகிறது. மேலும் இச்சேர்மம் ஓடு ஒட்டும் பசைகள் உற்பத்தியிலும் இது பயன்படுகிறது. அலுமினியம் புளோரைடுடன் சேர்க்கும்போது, இது அலுமினியத்தை பதப்படுத்துவதற்கான ஒரு சிறந்த மின்பகுபொருள் LiF ஐ உருவாக்குகிறது. இலித்தியம் கோபால்ட் ஆக்சைடால் செய்யப்பட்ட பெரும்பாலான இலித்தியம் அயனி மின்கலத்தின் எதிர்மின்முனை உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்[தொகு]

1843 ஆம் ஆண்டில், சிறுநீர்ப்பையில் உள்ள கற்களுக்கு லித்தியம் கார்பனேட் ஒரு புதிய கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. 1859 ஆம் ஆண்டில், சில மருத்துவர்கள் கீல்வாதம், சிறுநீரகக் கல், வாத நோய், பித்து, மனச்சோர்வு மற்றும் தலைவலி உள்ளிட்ட பல நோய்களுக்கு இலித்தியம் உப்புகளுடனான ஒரு சிகிச்சையை பரிந்துரைத்தனர். 1948 ஆம் ஆண்டில், லித்தியம் அயனிகளின் ஆண்டிமேனிக் விளைவுகளை ஜான் கேட் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு இலித்தியத்தை, குறிப்பாக இலித்தியம் கார்பனேட்டை, இருமுனையப் பிறழ்வுடன் தொடர்புடைய மனநோய்க்கு சிகிச்சையளிக்க வழிவகுத்தது.

இருமுனையப் பிறழ்வின் உச்சகட்ட மனநிலைக் கோளாறுக்கு சிகிச்சையளிக்க இலித்தியம் கார்பனேட் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் அயனிகள் அயனி போக்குவரத்து செயல்முறைகளில் தலையிட்டு அவை மூளையின் உயிரணுக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் செய்திகளைக் கடத்தவும் மற்றும் பெருக்கவும் செய்கின்றன.[7] மூளைக்குள் புரோட்டீன் கைனேஸ் சி (பி.கே.சி) செயல்பாட்டில் ஒழுங்கற்ற அதிகரிப்புடன் மனநோயானது தொடர்புடையது. இலித்தியம் கார்பனேட் மற்றும் சோடியம் வால்ப்ரோயேட், போன்றவை பாரம்பரியமாக மனக்கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்ற சேர்மங்களாகும். இச்சேர்மங்கள் புரதக் கைனேஸ் சி-யின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் மூளையில் செயல்படுகிறது மேலும் புரதக் கைனேஸ்சி-ஐத் தடுக்கும் பிற சேர்மங்களையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. மனநிலையைக் கட்டுப்படுத்தும் இலித்தியம் கார்பனேட்டின் பண்புகள் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.[8]

பாதகமான எதிர்வினைகள்[தொகு]

இலித்தியம் உப்புகளை எடுத்துக்கொள்வது ஆபத்துகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க லித்தியத்தை நீண்ட கால அளவில் பயன்படுத்துவது பெறப்பட்ட சிறுநீரகத்திசு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது.[9] இலித்தியப் பயன்பாட்டால் நஞ்சாதல் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரக அமைப்பை பாதிக்கும் மற்றும் ஆபத்தானது.

பண்புகள் மற்றும் வேதிவினைகள்[தொகு]

சோடியம் கார்பனேட்டைப் போலன்றி, இச்சேர்மம் குறைந்தது மூன்று ஐதரேட்டுகளை உருவாக்கும். இலித்தியம் கார்பனேட் நீரற்ற வடிவத்தில் மட்டுமே உள்ளது.[10] மற்ற லித்தியம் உப்புகளுடன் ஒப்பிடும்போது நீரில் அதன் கரைதிறன் குறைவாக உள்ளது. இலித்தியம் தாதுக்களின் நீர்க்கரைசல்களில் இருந்து இலித்தியத்தைப் பிரித்தெடுப்பது இந்த மோசமான கரைதிறனை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. கார்பன் டை ஆக்சைடடின் இலேசான அழுத்தத்தின் கீழ் அதன் வெளிப்படையான கரைதிறன் 10 மடங்கு அதிகரிக்கிறது; இந்த விளைவு மெட்டாநிலைத்தன்மை கொண்ட பைகார்பனேட் உருவாவதால் ஏற்படுகிறது, உருவாகின்ற இச்சேர்மம் கூடுதல் கரைதிறனைக் கொண்டது:

Li
2
CO
3
+ CO
2
+ H
2
O
⇌ 2 LiHCO
3

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lithium Carbonate". Chemister. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  2. Seidell, Atherton; Linke, William F. (1952). Solubilities of Inorganic and Organic Compounds. Van Nostrand. 
  3. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  4. 4.0 4.1 4.2 Sigma-Aldrich Co., Lithium carbonate. Retrieved on 2014-06-03.
  5. Michael Chambers. "ChemIDplus - 554-13-2 - XGZVUEUWXADBQD-UHFFFAOYSA-L - Lithium carbonate [USAN:USP:JAN] - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". Chem.sis.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
  6. "WHO Model List of Essential Medicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
  7. "lithium, Lithobid: Drug Facts, Side Effects and Dosing". Medicinenet.com. 2016-06-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
  8. Lithium Carbonate at PubChem
  9. Richard T. Timmer; Jeff M. Sands (1999-03-01). "Lithium Intoxication". Jasn.asnjournals.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
  10. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. Pages=84-85 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_கார்பனேட்டு&oldid=3387464" இலிருந்து மீள்விக்கப்பட்டது