சிறுநீரகக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீரகக் கல்
Classification and external resources
8-mm சிறுநீரகக் கல்
ஐ.சி.டி.-10 N20.0
ஐ.சி.டி.-9 592.0
DiseasesDB 11346
MedlinePlus 000458
ஈமெடிசின் med/1600 
MeSH D007669

சிறுநீரகக் கல் (Kidney stone) என்பது ஒரு கிரிஸ்டலோபதி ஆகும், இதில் ஒரு திடமான பொருள் (சிறுநீரக கல்) சிறுநீர்த்தொகுதியில் உண்டாகிறது.[2] சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரகத்தில் உருவாகி அது சிறுநீரில் செல்கிறது.[1] சிறிய கற்கள் அறிகுறிகளே தெரியாமல் கடந்து செல்லலும்.[1] ஆனால் ஒரு கல் 5 மில்லிமீட்டருக்கு (0.2 அங்குலம்) அதிகமாக வளர்ந்தால், அது சிறுநீர்க்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக கீழ் முதுகு அல்லது அடிவயிற்றில் கூர்மையான மற்றும் கடுமையான வலி ஏற்படும்.[1][2] சிறுநீரகக் கல்லினால் சிறுநீரில் குருதி வருதல், வாந்தியெடுத்தல், வலிமிகுந்த சிறுநீர் கழிப்பு ஆகியவை ஏற்டலாம்.[1] சிறுநீரகக் கல் உள்ளவர்களில் பாதி பேருக்கு பத்து ஆண்டுகளுக்குள் மற்றொரு சிறுநீரகக் கல் வர வாய்ப்புள்ளது.[3]

பெரும்பாலான கற்கள் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் உருவாகின்றன.[1] சிறுநீரில் அதிக கால்சியம் அளவு, உடற் பருமன், சில உணவுகள், சில மருந்துகள், சுண்ணாம்புத்தாது அளிக்கும் மருந்துக் கலவைகள், அதிபாராத்தைராய்டியம், கீல்வாதம் மற்றும் போதுமான நீர்மம் குடிக்காதது ஆகியவை இதன் காரணிகளில் அடங்கும்.[1][3] சிறுநீரில் கனிமங்கள் அதிக செறிவில் இருக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன.[1] நோயறிதல் என்பது பொதுவாக அறிகுறிகள், சிறுநீர்ச் சோதனை மற்றும் மருத்துவப் படிமவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.[1] குருதிப் பரிசோதனைகளும் பயனுள்ளதாக இருக்கும்.[1] கற்கள் பொதுவாக அவற்றின் இருப்பிடத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன: நெஃப்ரோலிதியாசிஸ் (சிறுநீரகத்தில்), சிறுநீர்க்குழாய் அழற்சி (சிறுநீர்க்குழாயில்), சிஸ்டோலிதியாசிஸ் (சிறுநீர்ப்பையில்), அல்லது அவை எதனால் ஆனவை (கால்சியம் ஆக்சலேட்டு, யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட், சிஸ்டைன்).[1]

கி.மு. 600 ஆம் ஆண்டிலிருந்தே சிறுநீரகக் கற்கள், அவற்றை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையின் விளக்கங்களுடன் வரலாறு முழுவதும் மனிதர்களை பாதித்துள்ளன.[4] உலகளவில் 1% முதல் 15% வரையிலான மக்கள் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர்.[3][5] 2015 இல், 22.1 நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.[6] இதன் விளைவாக சுமார் 16,100 இறப்புகள் ஏற்பட்டன.[7] 1970களில் இருந்து மேற்கத்திய உலகில் இது மிகவும் பொதுவான ஒரு நோயாக உள்ளது.[3][8] பொதுவாக, இதனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.[1][5] நோயின் பரவலும், பாதிப்பும் உலகளவில் உயர்ந்துவருகிறது. இது நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இந்த சூழலில், தொற்றுநோயியல் ஆய்வுகளானது உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோயின் சுமைகளை தெளிவுபடுத்துவதற்கும், சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கும், ஆபத்துக்கான காரணிகளை அடையாளம் காண்பதற்கும் முயற்சி செய்கின்றன.[9]


சிறுநீரகக் கற்கள் வருவதற்கான காரணம்[தொகு]

கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகமானாலும் இப்பிரச்சினை ஏற்படலாம். நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவுகளில் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். தேநீர் அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகக்கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது. குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களாளும், அதிக அசைவ உணவை எடுத்துக் கொள்வதாலும்கூட சிறுநீரகக்கற்கள் ஏற்படலாம்.

சிகிச்சை முறை[தொகு]

உணவில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவும், புயூரினின் அளவும் குறைவாகவே இருக்கவேண்டும். இத்துடன் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்தை அதிகம் சேர்த்துதுக் கொள்ளகூடாது. உணவு மூலமாக ஏற்கனவே உருவான கற்களை நீக்க இயலாது. ஆனால், புதியதாக கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்[தொகு]

அகத்திக் கீரை, முருங்கை இலை, பால், தயிர், கசகசா பொடி, மீன், இறால், நண்டு, கேழ்வரகு, சோயா, எள்.

பாஸ்பேட் அதிகம் காணப்படும் உணவுகள்[தொகு]

தானிய வகைகள், கொட்டைகள், எண்ணெய் வித்துக்கள், கேரட், பால், பாலைச் சார்ந்த உணவுகள், முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள்.

ஆக்ஸலேட்[தொகு]

கீரைவகைகள், டீ, காபி, கோகோ, சாக்லேட், பீட்ருட், முந்திரி, கருணைக்கிழங்கு, பீன்ஸ். நெல்லிக்காய், அத்திப்பழம், வெண்டைக்ககாய், பாதாம்.

பியூரின் அதிகம் உள்ள உணவு[தொகு]

ஆட்டு ஈரல், மூளை, சிறுநீரகம், மீன், இறைச்சி சூப் [10]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Kidney Stones in Adults". பெப்பிரவரி 2013. Archived from the original on 11 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2015.
  2. "Management of kidney stones". BMJ 334 (7591): 468–72. March 2007. doi:10.1136/bmj.39113.480185.80. பப்மெட்:17332586. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Medical management of renal stones". BMJ 352: i52. March 2016. doi:10.1136/bmj.i52. பப்மெட்:26977089. 
  4. (in en) Kidney Stone Disease: Say NO to Stones!. Springer. 2014. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319121055. https://books.google.com/books?id=2ADRBQAAQBAJ&pg=PA27. 
  5. 5.0 5.1 "Prevalence and Trends in Kidney Stone Among Adults in the USA: Analyses of National Health and Nutrition Examination Survey 2007-2018 Data". European Urology Focus 7 (6): 1468–1475. November 2021. doi:10.1016/j.euf.2020.08.011. பப்மெட்:32900675. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2405456920302248. பார்த்த நாள்: 16 August 2021. 
  6. Vos, Theo et al. (October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  7. Wang, Haidong et al. (October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  8. Stamatelou, Kiriaki K.; Francis, Mildred E.; Jones, Camille A.; Nyberg, Leroy M.; Curhan, Gary C. (May 2003). "Time trends in reported prevalence of kidney stones in the United States: 1976–199411.See Editorial by Goldfarb, p. 1951." (in en). Kidney International 63 (5): 1817–1823. doi:10.1046/j.1523-1755.2003.00917.x. பப்மெட்:12675858. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0085253815490726. 
  9. Stamatelou, Kyriaki; Goldfarb, David S. (January 2023). "Epidemiology of Kidney Stones" (in en). Healthcare 11 (3): 424. doi:10.3390/healthcare11030424. பன்னாட்டுத் தர தொடர் எண்:2227-9032. பப்மெட்:36766999. வார்ப்புரு:Creative Commons text attribution notice
  10. Puplisher Badri Seshadri, Nalam, New Harison Media Pvt. Ltd. Chennai- 18 Website : www.nhm.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகக்_கல்&oldid=3687518" இலிருந்து மீள்விக்கப்பட்டது