பித்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
பித்து (Mania) என்பது மனோபாவத்தால் ஏற்படுகின்ற ஒருவகை நோய் வெளிப்பாடாகும். வழமைக்கு மாறான அதிக உறசாகம், அதிகம் கதைத்தல, அமைதியின்மை, அதிக வேலைகளில் ஈடுபடுதல், தன்னைப்பற்றிய மிக உயர்வான எண்ணம் அல்லது கற்பனை போன்ற இயல்புகள் இவர்களிடம் காணப்படும். இது மனச்சோர்வு நோய்க்கு எதிரான இயல்புகளைக் கொண்டிருக்கும்.
இந்த பித்து நோய் ஏற்பட்ட ஒருவருக்க மூன்று மாத காலமாவத நிலைத்து நிற்கும். இந்த நோய் ஏற்பட்ட ஒருவருக்க பின்பு மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்நோய்க்கான அறிகுறிகள். [தொகு]
- அளவுக்கதிகமான தன்னம்பிக்கை.
- மிகவும் கிளர்ச்சியடையாத மனநிலை.
- அதிகம் கதைத்தல, அளவுக்கதிக உற்சாகம், அதிக வேலைகளில் ஈடுபடுதல், ஆடுதல், பாடுதல். போன்ற அமைதியற்ற அதிகரித்த நடவடிக்கைகள்.
- நித்திரை குறைவாக இருத்தல்
- அதிகரித்த பாலியல் நாட்டம்.
- சுய கட்டுப்பாடு குறைதல்
- ஊதாரித்தனமாக செலவழித்தல், எல்லோருக்கும் உடுபுடவைகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனடபளிப்பு செய்தல்.