ஒடுக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) எனப்படும். அதாவது, ஒடுக்கி தனது எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்களை) மற்றொன்றிற்கு வழங்குகிறது. எனவே இது எதிர்மின்னி ஈனி எனவும் அழைக்கப்படும். ஒடுக்கி ஒரு வினையில் எப்போதும் ஆக்சிசனேற்றம் அடையும். லித்தியம், சோடியம், மக்னீசியம், இரும்பு, அலுமினியம், கார்பன் போன்றவை நல்ல ஒடுக்கிகளாகும் (எதிர்மின்னி ஈனிகளாகும்).