பிளாட்டினம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
பிளாட்டினம், Pt, 78 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
transition metals | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
10, 6, d | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | சாம்பல் வெள்ளை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
195.084(9) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Xe] 4f14 5d9 6s1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 32, 17, 1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
21.45 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
19.77 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
2041.4 K (1768.3 °C, 3214.9 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 4098 K (3825 °C, 6917 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
22.17 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
469 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 25.86 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | cubic face centered | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
1, 2, 3, 4, 5, 6 (மென் கார ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 2.28 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அயனாக்க ஆற்றல் | 1st: 870 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2nd: 1791 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 135 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
177 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 128 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வான் டெர் வால் ஆரம் |
175 பி.மீ (pm) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | paramagnetic | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின் தடைமை | (20 °C) 105 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 71.6 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சி | (25 °C) 8.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு (மென் கம்பி) |
(அறை வெ.நி) 2800 மீ/நொ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Young's modulus | 168 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Shear modulus | 61 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Bulk modulus | 230 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் | 0.38 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மோவின்(Moh's) உறுதி எண் | 4–4.5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விக்கர் உறுதிஎண் Vickers hardness |
549 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
392 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7440-06-4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிளாட்டினம் (இலங்கை வழக்கு, பிளாத்தினம்) (ஆங்கிலம்: Platinum) என்பது Pt என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். அணுவெண் 78 கொண்ட இத் தனிமம் தனிம அட்டவணையில் 10 ஆவது நெடுங்குழுவில் உள்ளது. இதன் அணுக்கருவில் 117 நொதுமிகள் உள்ளன. இது தட்டி கொட்டி நெளியக் கூடிய, வளையக்க்கூடிய, பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய மாழை (உலோகம்) ஆனால் எடை மிகுந்த ஒரு மாழை. இது பிறழ்வரிசை மாழை இனத்தைச் சேர்ந்த தனிமம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது. மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும், தானுந்துகளில் இருந்து வெளியேறும் கழிவு வளிமங்களில் உள்ள, சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு (CO), நைதரசன் ஆக்சைடு போன்ற வளிமங்களை நச்சுத்தனமை குறைந்த வளிமங்களாக மாற்றவும் பிளாட்டினம் பயன்படுகின்றது. அனைத்துலக பங்குச்சந்தையில் வாங்கி-விற்கும் பொருளாகப் பயன்படுகையில் பிளாட்டினத்தின் ISO குறியீடு XPT என்பதாகும்.
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]
தூய பொருளாக இருக்கும் பொழுது இம் மாழை வெண் சாம்பல் நிறமுடையது. இம்மாழை எளிதில் அரிக்கப் படாத ஒரு பொருள். பிளாட்டினக்குழு என்று கூறப்படும் பிளாட்டினம், ரூத்தேனியம், ரோடியம், பலேடியம்]], ஆசுமியன், இரிடியம் ஆகிய ஆறு மாழைகளும் (இவை ஆறு பிளாட்டினக் குடும்ப மாழைகள் என்று கூறப்படுகின்றது), மிகச்சிறந்த வேதி வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. பிளாட்டினம் தானுந்துகளில் கழிவுக் குழாய் வழியாக வெளியேறும் நச்சு வளிமங்களை மாற்றும் வினையூக்கியாகப் பயன்படுகின்றது. உள் எரி பொறிகளின் உந்தறையில் அழுத்தமுறும் எரிவளியை எரியூட்டுவதற்குப் பயன்படும் மின் தீப்பொறி உண்டாக்கும் மின்குச்சிகளிலும் (spark plug) பயன்படுகின்றது.
பிளாட்டினத்தின் பொதுவான ஆக்ஸிஜன் நிலைகள் +2 , +4 ஆகும். ஆனால் +1 மற்றும் +3 நிலைகள் அதிகம் காணப்படாத நிலைகள.்
பயன்பாடுகள் [தொகு]
- வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் பயன்படுகின்றது. வெப்பநிலை மாற்றத்தினால், பிளாட்டினத்தின் மின் தடை எதிர்பார்க்கும்படி மாறுவதால், மின் தடை மாற்றத்தை அளப்பதின் மூலம் வெப்பநிலையை அறியும் ஒரு கருவியாகப் பயன்படுகின்றது.
- நீட்சிப் பொருளாகிய சிலிக்கோன் எலாஸ்டமர் பொருள்களில் வினையூக்கியாகப் பயன்படுகின்றது.
- நகைகள்
- தானுந்துகளில் நச்சு வளிகளை மாற்றப் பயன்படும் வினையூக்கி
வரலாறு [தொகு]
இயற்கையில் கிடைக்கும் பிளாட்டினம்மும் பிளாட்டினம்-மிகுந்துள்ள கலவைப்பொருள்கள் பற்றியும் நெடுங்காலமாக மக்கள் அறிந்திருந்தார்கள். கொலம்பசின் காலத்திற்கு முன்னமே ஐக்கிய அமெரிக்க பழங்குடியினர், பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் ஐரோப்பிய எழுத்துக்களில் 1557 இல்தான் பிளாட்டினத்தைப் பற்றிய செய்தியை இத்தாலியராகிய ஜூலியஸ் சீசர் ஸ்காலிகர் (Julius Caesar Scaliger) (1484–1558) என்பவர்தான் முதன்முதலாக பனாமா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கிடைப்பதைப் பற்றியும் அது எசுப்பானியருடைய தொழிற்கலை அறிவால் உருக்கமுடியாமல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ("up until now impossible to melt by any of the Spanish arts").
ஜூலை 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளாட்டினம் இருப்பதாக கண்டரியபட்டது[1].
கிடப்பும் மலிவும் [தொகு]
பிளாட்டினம் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் 0.003 ppb (பில்லியன் பகுதியின் பங்குகள்) மட்டுமே உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் 30 மடங்கு அரிதானது. [2]
2005 இல், தென் ஆப்பிரிக்காதான் உலகின் மிகக் கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்த நாடு. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 80% தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அடுத்ததாக ரஷ்யாவும் கனடாவும் நிற்கின்றன. [3]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article495603.ece
- ↑ "Platinum: Pure, Rare, Eternal.". பார்த்த நாள் 2007-10-27.
- ↑ "PLATINUM-GROUP METALS" (PDF). U.S. Geological Survey, Mineral Commodity Summaries (January 2007). பார்த்த நாள் 2007-08-19.
- Los Alamos National Laboratory — Platinum
- Nuclides and Isotopes Fourteenth Edition: Chart of the Nuclides, General Electric Company, 1989.
- Jefferson Lab — The Element Platinum
வெளி இணைப்புகள் [தொகு]
- The Platinum Group Metals Database
- A balanced historical account of the sequence of discoveries of platinum; illustrated.
- WebElements.com — Platinum
- Platinum Metals Review E-Journal
- Platinum Guild International
- United States Geological Survey Platinum-Group Metals Statistics and Information
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||