பிளாட்டினம்(IV) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம்(IV) அயோடைடு
Platinum(IV) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா அயோடோபிளாட்டினம்
வேறு பெயர்கள்
பிளாட்டினம் டெட்ரா அயோடைடு, பிளாட்டினிக் அயோடைடு, பிளாட்டினம்(4+) டெட்ரா அயோடைடு
இனங்காட்டிகள்
7790-46-7 Y
EC number 232-207-9
InChI
  • InChI=1S/4HI.Pt/h4*1H;/q;;;;+4/p-4
    Key: RNJPWBVOCUGBGY-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12978853
SMILES
  • I[Pt](I)(I)I
பண்புகள்
I4Pt
வாய்ப்பாட்டு எடை 702.70 g·mol−1
தோற்றம் பழுப்பு நிற படிகங்கள்
அடர்த்தி 6.06 கி/செ.மீ3
உருகுநிலை 130 °C (266 °F; 403 K)
தண்ணீரில் சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிளாட்டினம்(IV) அயோடைடு (Platinum(IV) iodide) என்பது PtI4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பிளாட்டினமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. அடர் பழுப்பு நிறத்தில் எதிர்காந்தப் பண்புடன் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. பிளாட்டினத்தின் அறியப்பட்டுள்ள பல இரும அயோடைடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

பிளாட்டினத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிளாட்டினம்(IV) அயோடைடு உருவாகிறது:[2]

Pt + 2I2 -> PtI4

ஐதரசன் ஆறயோடோபிளாட்டினேட்டு(IV) சேர்மத்தை 80 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சிதைவு ஏற்பட்டு பிளாட்டினம்(IV) அயோடைடு உருவாகும்:

H2[PtI6] -> PtI4 + 2HI

இயற்பியல் பண்புகள்[தொகு]

அடர் பழுப்பு நிற படிகங்களாக பல்வேறு வடிவங்களில் பிளாட்டினம்(IV) அயோடைடு படிகமாகிறது:[3]

α-PtI4, சாய்சதுர படிகத் திட்டம், இடக்குழு P bca,[4] cell parameters a = 1.290 nm, b = 1.564 nm, c = 0.690 nm, Z = 8;

β-PtI4, கனசதுரம், இடக்குழு P m3m, செல் அளவுருக்கள் a = 0.56 நானோமீட்டர், Z = 1;

γ-PtI4, நாற்கோணகப் படிகத் திட்டம், இடக்குழு I 41/a, செல் அளவுருக்கள் a = 0.677 நானோமீட்டர், c = 3.110 நானோமீட்டர், Z = 8.

PtI4 தண்ணிரில் சிதைவடையும். ஆல்ககால், அசிட்டோன், நீர்க்காரம், ஐதரசன் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, நீர்ம [[அமோனியா| முதலிய கரைப்பான்களில் கரையும்.[5]

வேதிப் பண்புகள்[தொகு]

பிளாட்டினம்(IV) அயோடைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:

PtI4 -> Pt + 2I2

பிளாட்டினம்(IV) அயோடைடை ஐதரோ அயோடிக் அமிலத்தில் கரைத்தால் ஐதரசன் ஆறயோடோபிளாட்டினேட்டு(IV) உருவாகும்:

PtI4 + 2HI -> H2[PtI6

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Wicks, Charles E.; Block, Frank E. (1963). Thermodynamic Properties of 65 Elements: Their Oxides, Halides, Carbides and Nitrides (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. p. 92. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  4. Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 153. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  5. "Platinum(IV) iodide, 99.95% (Metals basis), Pt 27.3% min., Thermo Scientific Chemicals, Premion | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(IV)_அயோடைடு&oldid=3922757" இலிருந்து மீள்விக்கப்பட்டது