தானுந்து
| தானுந்து | |
பென்சு "வெலோ" வடிவமைப்பு (1894) [1][2] |
|
| வகைப்படுத்தல் | ஊர்தி |
|---|---|
| தொழில்துறை | பல்வேறு |
| பயன்பாடு | போக்குவரத்து |
| எரிம மூலம் | பெட்ரோல், டீசல், மின்சாரம், ஐதரசன் |
| ஆற்றல் பொருத்திய | ஆம் |
| தானியக்கம் | ஆம் |
| சக்கரங்கள் | 3–4 |
| அச்சுகள் | 0–2 |
| கண்டு பிடித்தவர் | பெர்டினண்டு வெர்பீசுட்டு |
தானுந்து அல்லது கார் (Car /automobile) என்பது தன்னை இழுத்துச் செல்லும் உந்துப்பொறியை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் சக்கரமுள்ள இயக்கூர்தி ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும். [3]
ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் குதிரைகளும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ கி.பி. 1890 ஆண்டு வாக்கில் எந்த விலங்கும் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டு பிடித்தனர். 1900 ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
உலகளவில் 600 மில்லியன் பயணியர் தானுந்துகள் இருப்பதாக (ஏறத்தாழ பதினோரு நபர்களுக்கு ஒரு தானுந்து) மதிப்பிடப்பட்டுள்ளன.[4][5] 2007ஆம் ஆண்டில் 806 மில்லியன் தானுந்துகளும் சிறு சரக்குந்துகளும் இருந்தன; இவற்றின் உந்துப்பொறிகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் க.மீ அளவிற்கும் கூடுதலான (260 பில்லியன் அமெரிக்க காலன்கள்) பெட்றோல்/கல்நெய்யை எரித்ததாக மற்றொரு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் விரைவாக கூடி வருகின்றன.[6]
[தொகு] தானுந்துகளின் வரலாறு
இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெருவளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்லது) பெட்ரோல் இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும், ஓட்டுனர் துணையில்லாமலும் என்று பற்பல கோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன.
1770 ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை பிரான்சு நாட்டு காப்டன் நிக்கொலாசு சோசப்பு க்யூனொ (Nicolas Joseph Cugnot) என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு கட்டைவண்டியிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்கூடியதாகவும், 10-15 மணித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது. இதனை படத்தில் காணலாம்.
[தொகு] பேரளவு உற்பத்தி
வாங்கத்தகு தானுந்துகளை பெரிய அளவில் தயாரிப்பதைத் தொடக்கியவர், ரன்சொம் ஓல்டுசு ஆவார். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தனது ஓல்ட்ஸ் மொபைல் தொழிற்சாலையின் தொகுப்புவரிசைப் பகுதியில் செயல்படுத்தினார். ஐக்கிய அமெரிக்காவில் தாமஸ் பிளன்சர்ட் என்பவர் 1811 ஆம் ஆண்டு, தானுந்துகளின் பெருமளவு உற்பத்தியைத் துவக்கினார்.[7] இந்தக் கோட்பாட்டினை சிறந்த முறையில் 1914 ஆண்டு விரிவுபடுத்தியவர், ஹென்றி ஃபோர்ட் ஆவார்.
[தொகு] எடை
ஒரு தானுந்தின் எடை எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்திறனில் செல்வாக்கு செலுத்துகிறது. அதிக எடை எரிபொருள் நுகர்வினை அதிகரிப்பதுடன் செயல்திறனை குறைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜூலியன் ஆல்வூட் நடத்திய ஒரு ஆய்வு உலக ஆற்றல் பயன்பாட்டை பெரிதும் பளுவற்ற தானுந்துகளை பயன்படுத்தி குறைக்கலாம் என்கிறது, இவ்வகையில் 500 கிலோ சராசரி எடை அடையக்கூடியதாக கூறப்படுகிறது.[8]
ஷெல் எகோ மராத்தான் போன்ற சில போட்டிகளில், 45 கிலோ சராசரி தானுந்து எடை கூட அடையப்பெற்றிருக்கின்றன.[9] இந்த தானுந்துகள் ஒர் இருக்கை கொண்டவை (பொதுவாக நான்கு இருக்கை தானுந்துகள் இருந்தாலும் இவையும் தானுந்து என்ற வரையரையுள் அடங்கும்) இருப்பினும் இது தானுந்து எடையை பெரிய அளவில் இன்னும் குறைக்கலாம் என்பதையும் மற்றும் அதனை தொடர்ந்த குறைந்த எரிபொருள் பயன்பாட்டையும் (அதாவது 2560 km/l எரிபொருள் பாவனையை) காட்டுகிறது.[10]
[தொகு] இருக்கை அமைப்பும் உருவ வடிவமைப்பும்
பெரும்பாலான தானுந்துகள் நான்கு அல்லது ஐந்து இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பெரிய தானுந்து வகைகளில் ஆறு அல்லது ஏழு பேர் பயணிக்கத்தக்கதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பயன்படுத்தப்படும் தானுந்துகள் பெரும்பாலும் இரண்டு இருக்கைகளை உடையன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பொதிகளைக் கொண்டு செல்லும் வசதி என்பவற்றின் தேவைகளுக்கேற்ப தானுந்துகளின் அமைப்புகள் பலவகைப்படுகின்றன.
[தொகு] எரிபொருள் மற்றும் உந்துகை தொழிற்நுட்பம்
தற்காலத்திலுள்ள பெரும்பாலா தானுந்துகள் உள்ளெரி எந்திரங்களில் பெட்ரோல் அல்லது டீசலை எரிவிப்பதன் மூலம் உந்தப்படுகின்றன. அவ்விரண்டு எரிபொருட்களும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அவை பருவநிலை மாற்றம் மற்றும் புவி சூடாதல் ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன.[11] வெகு வேகமாக ஏறிவரும் எரிபொருள் விலைகள், மரபு எரிபொருட்களை சார்ந்திருத்தலால் ஏற்பட்டுள்ள கவலை, வலுவான சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும்பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்திலுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக தானுந்துகளுக்கு மரபுசாரா எரிபொருட்கள் மூலம் மாற்று திறன் வழிமுறைகளில் இயக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முயற்சிகள் (எ-கா; கலப்பு வாகனம், உட்செருகு மின் வாகனம், ஐதரசன் வாகனங்கள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தனால் பயன்படுத்தும் இணக்கமுறு-எரிபொருள் வாகனங்கள்]] மற்றும் இயற்கை வாயு வாகனங்கள் உட்பட மாற்று எரிபொருள் வாகனங்களும் மக்களின் பயன்பாட்டில் அதிகரித்து வருகின்றன.
[தொகு] பாதுகாப்பு
சாலை போக்குவரத்து காயங்கள், உலகளாவிய காயம் தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டப் போதிலும், தானுந்துகளின் பிரபலம் இந்த புள்ளிவிவரகளையெல்லாம் குறைத்து மதிப்பிடுகிறது.
1869 இல் பார்சன்சுடவுன், அயர்லாந்தில் தானுந்து இறந்தவராக மேரி வார்டு முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்டார்.
[தொகு] செலவுத்தொகையும் பயன்பாடுகளும்
[தொகு] நடுநிலை மதிப்பீடு
[தொகு] ஓட்டுனரல்லாத உந்துகள்
[தொகு] எதிர்கால தொழிற்நுட்பங்கள்
[தொகு] திறவூற்று மேம்பாடு
[தொகு] தானுந்துகளுக்கு மாற்று
[தொகு] தொழில் துறை
[தொகு] பழைய தானுந்துகள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The Motocycle / Automobile (magazine), November Vol 1, No. 2, 1895, pp. 16-45
- ↑ The Mercedes-Benz book by Victor Boesen, Doubleday 1981, p. 22, ISBN 0-385-12554-2
- ↑ compiled by F.G. Fowler and H.W. Fowler. (1976). Pocket Oxford Dictionary. London: Oxford University Press. ISBN 0-19-861113-7.
- ↑ "WorldMapper – passenger cars".
- ↑ "Cars produced in the world". Worldometers.info (2007-12-19). பார்த்த நாள் 2010-07-11.
- ↑ Plunkett Research, "Automobile Industry Introduction" (2008)
- ↑ "Industrialization of American Society". Engr.sjsu.edu. பார்த்த நாள் 2011-07-17.
- ↑ "Possible global energy reducstion". Newscientist.com. பார்த்த நாள் 2011-07-17.
- ↑ "45 kg as average car weight in Shell Eco-Marathon". Wn.com. பார்த்த நாள் 2011-07-17.
- ↑ mindfully.org. "Andy Green's 8000 mile/gallon car". Mindfully.org. பார்த்த நாள் 2011-07-17.
- ↑ "Global Climate Change". U.S. Department of Energy. பார்த்த நாள் 2007-03-03.
[தொகு] மேலும் படிக்க
- தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்
- இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்
- இந்தியாவில் தானுந்துத் தொழில்துறை
- தானுந்து விளையாட்டுக்கள்
- தானுந்து தலைப்புகள் பட்டியல்
- தானுந்து வணிக நிறுவனங்கள்
- பேருந்து
[தொகு] உசாத்துணை
- Halberstam, David, The Reckoning, New York, Morrow, 1986. ISBN 0-688-04838-2
- Kay, Jane Holtz, Asphalt nation : how the automobile took over America, and how we can take it back, New York, Crown, 1997. ISBN 0-517-58702-5
- Heathcote Williams, Autogeddon, New York, Arcade, 1991. ISBN 1-55970-176-5
- Wolfgang Sachs: For love of the automobile: looking back into the history of our desires, Berkeley: University of California Press, 1992, ISBN 0-520-06878-5
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Automobile தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |