வெப்பக் கடத்துமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Heat conduction.png

இயற்பியலில், வெப்பக் கடத்துமை, k, ஓர் பொருளின் வெப்பத்தைக் கடத்தும் பண்பின் அளவாகும். வெப்பக்கடத்தலின் ஃபூரியரின் விதியில் இதனைக் காணலாம்.

முதலில், நாம் வெப்பக் கடத்தலை H என வரையறுப்போம்:

H=\frac{\Delta Q}{\Delta t} = k A\frac{\Delta T}{x}

இங்கு\frac{\Delta Q}{\Delta t} வெப்ப ஓட்டத்தின் வேகம், k வெப்பக் கடத்துமை, A கடத்தும் பரப்பின் மொத்த குறுக்கு பரப்பளவு, ΔT வெப்பநிலை வித்தியாசம், மற்றும் x இரு வெப்பநிலைகளையும் பிரிக்கும் கடத்தும் பரப்பின் தடிமன்.வெப்பக் கடத்துமையின் அலகு = M1L1T−3K−1

மேற்கண்ட சமன்பாட்டை மீளமைத்து,நாம் பெறுவது வெப்பக் கடத்துமை,

k=\frac{\Delta Q}{\Delta t} \frac{1}{A} \frac{x}{\Delta T}

(குறிப்பு: \Delta T/x வெப்பச்சரிவு)

இதனை சொற்களில் சொல்வதென்றால், வெப்பக் கடத்துமை நிலையான அமைப்பில், வெப்ப பரிமாற்றம் வெப்பச்சரிவினை மட்டுமே சார்ந்துள்ள பொழுது, ΔT வெப்ப வித்தியாசத்தினை முன்னிட்டு, A வின் ஓர் அலகு பரப்பளவில், அதற்கு செங்குத்தான பாதையில்,x தடிமன் வழியே Δt' நேரத்தில் செலுத்தப்படும் வெப்ப அளவு ΔQ ஆகும்.

இதனை இவ்வாறாகவும் கூறலாம்: வெப்ப ஓட்டத்தை (ஓர் அலகு நேரத்தில் ஓர் அலகு பரப்பில் செல்லும் ஆற்றல்) வெப்பநிலைச்சரிவால் (ஓர் அலகு நீளத்திற்கு வெப்பநிலை வித்தியாசம்) வகுத்துப் பெறுவது.

k=\frac{\Delta Q}{A  \Delta t}\frac{x}{\Delta T}

வெப்பக் கடத்துமையின் பொதுவான அலகுகள் SI: W/(m·K) மற்றும் English units: Btu/(hr·ft·°F). இவற்றினிடையே மாற்றிக்கொள்ள, சமன்பாடு 1.730735 Btu/(hr·ft·°F) = 1 W/(m·K) பயன்படுத்தவும். [Perry's Chemical Engineers' Handbook, 7th Edition, Table 1-4]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்_கடத்துமை&oldid=1465758" இருந்து மீள்விக்கப்பட்டது