வாட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாட் (சின்னம்: W), திறனின் SI அலகு ஆகும். ஒரு வாட், ஒரு நொடிக்கு ஒரு ஜூல் என்பதற்கு ஈடாகும். வாட் ஆற்றல் பயன்பாட்டையும் உற்பத்தியையும் அளக்கிறது. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த ஜேம்ஸ் வாட்டைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட் என்ற பெயரிட்டனர்.
[தொகு] வரையறை
ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.
.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
படியேறிச் செல்பவர் 200 வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து 25, 000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.