அனைத்துலக முறை அலகுகள்
அனைத்துலக முறை அலகுகள் (International System of Units) என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம் முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன.
இந்த SI முறை அலகுகள் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அடிப்படையில் ஆன மெட்ரிக் முறையிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.
பொருளடக்கம் |
அலகுகள் [தொகு]
அனைத்துலக முறை அலகுகள் பலவும் முன்னொட்டுகள் கொண்டவை. அலகுகள் இரு பிரிவாக உள்ளன. முதலில் அடிப்படையான ஏழு அலகுகள் உள்ளன. இவை தவிர SI அலகுகள் அல்லாதன சிலவும் SI அலகுகளுடன் சேர்த்திப் பயன்படுத்தக்கூடியவை என்றும் உள்ளன. இவ்வடிப்படை அலகுகளைக்கொண்டு பிற அலகுகள் வருவிக்கப்படுகின்றன. அடிப்படையான ஏழு அலகுகளில், ஆம்பியரும் கெல்வினும் அறிவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது தலைப்பு அல்லது பெரிய (Captial) எழுத்துக்களில் குறிப்பிடப்படும். ஏனையவை ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன.
| SI அடிப்படை அலகுகள் | |||||
|---|---|---|---|---|---|
| அலகின் பெயர் | அலகின் தமிழ்ப்பெயர் | குறியெழுத்து | தமிழில் குறியெழுத்து | அளவிடும் பண்பு | தமிழில் அளவிடும் பண்பு |
| Kilogram | கிலோகிராம் | kg | கிகி | Mass | திணிவு |
| Second | நொடி அல்லது வினாடி | s | நொ | Time | நேரம் |
| Meter | மீட்டர் | m | மீ | Length | நீளம் |
| Ampere | ஆம்பியர் | A | ஆம்ப் | Electrical Current | மின்னோட்டம் |
| Kelvin | கெல்வின் | K | கெ | Temparature | வெப்பநிலை |
| Mole | மோல் | mol | மோல் | Amount of Substance | பதார்த்த அளவு |
| Candela | கேண்டெலா | cd | கேண்டெ | Luminous Intensity | ஒளிச் செறிவு |
அடிப்படை அலகுகள் - இன்னொரு அட்டவணை [தொகு]
| பெயர் | குறியீடு | அளவு |
|---|---|---|
| மீட்டர் | m | நீளம் |
| கிலோகிராம் | kg | நிறை |
| வினாடி | s | காலம் |
| ஆம்பியர் | A | மின்னோட்டம் |
| கெல்வின் | K | வெப்பநிலை |
| கேண்டெலா | cd | ஒளிச்செறிவு |
| மோல் | mol | பொருளின் அளவு |
| பெயர் | குறியீடு | அளவு |
|---|---|---|
| ரேடியன் | rad | தளக்கோணம் |
| ஸ்டீரேடியன் | sr | திண்மக்கோணம் |
அனைத்துலக முறை அலகுகளின் (SI) தரம் செய்யப்பட்ட முன்னொட்டுகள்
| பெயர் | யோட்டா (yotta) |
சேட்டா (zetta) |
எக்சா (exa) |
பேட்டா (peta) |
டெரா (tera) |
கிகா (giga) |
மெகா (mega) |
கிலோ (kilo) |
எக்டோ (hecto) |
டெக்கா (deca) |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முன்னொட்டு எழுத்து | Y | Z | E | P | T | G | M | k | h | da |
| பெருக்கும் மதிப்பு | 1024 | 1021 | 1018 | 1015 | 1012 | 109 | 106 | 103 | 102 | 101 |
| பெயர் | டெசி (deci) |
சென்ட்டி (centi) |
மில்லி (milli) |
மைக்ரோ (micro) |
நானோ (nano) |
பிக்கோ (pico) |
ஃவெம்ட்டோ (femto) |
அட்டோ (atto) |
செப்ட்டோ (zepto) |
யோக்டோ (yocto) |
| முன்னொட்டு எழுத்து | d | c | m | µ | n | p | f | a | z | y |
| பெருக்கும் மதிப்பு | 10-1 | 10-2 | 10-3 | 10-6 | 10-9 | 10-12 | 10-15 | 10-18 | 10-21 | 10-24 |
இவற்றையும் பார்க்க [தொகு]
தகவல் உதவி [தொகு]
- ↑ Barry N. Taylor & Ambler Thompson Ed.. The International System of Units (SI). Gaithersburg, MD: National Institute of Standards and Technology. pp. 23. http://physics.nist.gov/Pubs/SP330/sp330.pdf. Retrieved 2008-06-18.
வெளி இணைப்புகள் [தொகு]