ஈயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈயம்
82Pb
Sn

Pb

Uuq
தாலியம்ஈயம்பிஸ்மத்
தோற்றம்
பளபளப்பான வெள்ளிச்சாம்பல் நிறம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஈயம், Pb, 82
உச்சரிப்பு /ˈlɛd/ led
தனிம வகை post-transition metal
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 146, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
207.2
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d10 6s2 6p2
2, 8, 18, 32, 18, 4
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 11.34 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 10.66 g·cm−3
உருகுநிலை 600.61 K, 327.46 °C, 621.43 °F
கொதிநிலை 2022 K, 1749 °C, 3180 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 4.77 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 179.5 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.650 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 978 1088 1229 1412 1660 2027
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 4, 2 (ஈரியல்புடைய ஒக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை 2.33 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 715.6 kJ·mol−1
2வது: 1450.5 kJ·mol−1
3வது: 3081.5 kJ·mol−1
அணு ஆரம் 175 பிமீ
பங்கீட்டு ஆரை 146±5 pm
வான்டர் வாலின் ஆரை 202 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
ஈயம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு diamagnetic
மின்கடத்துதிறன் (20 °C) 208 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 35.3 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 28.9 µm·m−1·K−1
யங் தகைமை 16 GPa
நழுவு தகைமை 5.6 GPa
பரும தகைமை 46 GPa
பாய்சான் விகிதம் 0.44
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
1.5
பிரிநெல் கெட்டிமை 38.3 MPa
CAS எண் 7439-92-1
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஈயம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
204Pb 1.4% >1.4×1017 y Alpha 2.186 200Hg
205Pb syn 1.53×107 y ε 0.051 205Tl
206Pb 24.1% Pb ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
207Pb 22.1% Pb ஆனது 125 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
208Pb 52.4% Pb ஆனது 126 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
210Pb trace 22.3 y Alpha 3.792 206Hg
Beta 0.064 210Bi
·சா

ஈயம் (Lead) ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு Pb. இதன் அணுவெண் 82. இது ஒரு ஒரு மென்மையன‌ உலோகம் அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் நிறப்பொருளாகக் காட்டும். எனினும் வெட்டியவுடன் வெள்ளி போல பளபளக்கும். இதுவே மிகவும் அதிக திணிவுடைய கருவுள்ள நிலைப்புத்தன்மையுடைய (கதிர்த்தொழிற்பாற்ற) தனிமமாகும். இதற்கு அணுவெண்ணில் அடுத்ததாக உள்ள பிஸ்மத் முன்னர் மிகப்பாரமான கதிர்த்தொழிற்பாடற்ற தனிமம் எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் பிஸ்மத் சொற்பளவு கதிரியக்கத்தைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. எனவே ஈயமே நிலையான ஆனால் மிகவும் பாரமான கருவுடைய தனிமமாகும். பிஸ்மத்தின் அரை-வாழ்வுக்காலம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் பல மடங்கு அதிகமாகையால், பிஸ்மத்தே மிகவும் பாரமான ஆனால் நிலையான கருவுடைய தனிமம் என்ற வாதமும் பொது வழக்கில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும்.

கட்டடத்தொழிலிலும், ஈய-அமில மின்கலங்களிலும், துப்பாக்கித் தோட்டாவிலும் ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது.

குறிப்பிடத்தக்க இயல்புகள்[தொகு]

திரவ நிலையிலிருந்து திண்மமாகிய தூய ஈயம்

ஈயமானது நீலநிறங்கலந்த வெள்ளி போன்ற பளபளப்புடைய உலோகமாகும். வளியுடன் இது தொடுகையடைந்தால் சிறிது நேரத்துக்குள் தன் பளபளப்பை இழக்கின்றது. பல்வேறு சேர்வைகளின் கலவையாக ஒரு சாம்பல் நிறப்படை உலோகம் மேல் தோன்றுகின்றது. இப்படையில் காபனேற்றும், ஐதரசன் காபனேற்றும் பெரும் பங்கை உருவாக்குகின்றன. ஈயம் மென்மையான, அதிக அடர்த்தியுடைய, நீட்டற்பண்பும், தட்டற்பண்பும் உள்ள உலோகமாகும். எனினும் ஈயத்தின் மின்கடத்துதிறன் குறைவாக இருக்கின்றது. ஈயம் இலகுவில் அரிப்படையாது. சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமடையக்கூடியது (இதன் விஷத்தன்மைக்குக் காரணம்). 327.5 °C வெப்பநிலையில் ஈயம் உருகுகின்றது. ஈயம் 1749 °C வெப்பநிலையில் கொதிக்கும். ஈயம் அயனாக்கம் அடையும் போது Pb2+ கற்றயனை உருவாக்கும்.

சமதானிகள்[தொகு]

இயற்கையில் ஈயத்தின் நான்கு நிலையான சமதானிகள் உள்ளன. ஈயம்-204, ஈயம்-206, ஈயம்-207, ஈயம்-208 என்பனவே அவையாகும். இவற்றில் ஈயம்-204 சொற்பளவு கதிரியக்கம் (அரை வாழ்வுக்காலம்:1.4×1017 வருடங்களுக்கு மேல்) கொண்டதாகக் கருதப்பட்டாலும், பொதுவாக ஈயம் கதிரியக்க அபாயமற்ற தனிமமாகும். செயற்கையாக ஈயத்தின் 34 சமதானிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் திணிவெண் 178 தொடக்கம் 215 வரை வியாபித்துள்ளது. இயற்கையான நான்கைத் தவிர மற்றைய அனைத்துச் சமதானிகளும் கதிரியக்கம் உடையனவாகும். கதிரியக்கச் சமதானிகளில் ஈயம்-205 ஓரளவு நிலைத்திருக்கக்கூடியது (அரை வாழ்வுக்காலம் 107 மடங்கில்).

இரசாயன தாக்குதிறன்[தொகு]

ஈயம் கார்பன் குழுவைச் சேர்ந்த ஒரு குறை மாழையாகும். எனவே இது ஏனைய உலோகங்களை விட தாக்குதிறன் குறைவானதாகும். ஈயம் காற்றில் தன்னிச்சையாக எரியாது. காற்றில் பாதுகாப்பான ஒரு ஒக்சைட்டு-காபனேற்றுப் படையையே உருவாக்கும். ஈயத்தைத் துகள்களாக்கி, சக்தியை வழங்கினாலேயே இது எரியும். புளோரின் மற்றும் குளோரின் போன்ற ஹலோஜன்களால் உயர் வெப்பநிலையில் மாத்திரமே ஈயத்தை ஒக்சியேற்ற இயலும். நீரும் வளியும் இணைந்து ஈயத்தை வேகமாக அரிப்படையச் செய்யும் இயல்புடையனவாகும். எனினும் நீரில் கரைந்துள்ள சல்பேற்றுக்கள் மற்றும் காபனேற்றுக்கள் கரையாத உப்புக்களைத் தோற்றுவித்து ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. குறைந்த செறிவுள்ள நீரில் கரைந்துள்ள காபனீரொக்சைட்டு கரையாத காபனேற்றுப் படையை உருவாக்கி அரிப்படைதலிலிருந்து பாதுகாப்பை வழங்கினாலும், அதிக செறிவான CO2 கரையக்கூடிய ஈயஇருகாபனேற்றை உருவாக்கி ஈயத்தை அரிப்படையச்செய்ய வழிவகுக்கின்றது. ஈயம் சேதன அமிலங்களாலும், செறிந்த சல்பூரிக் அமிலத்தாலும், வன்காரங்களாலும் தாக்கப்பட்டு அரிப்படையக்கூடியது.

ஈயத்தின் சேர்மங்கள்[தொகு]

சேர்வைகளில் ஈயம் பொதுவாக +2 மற்றும் +4 எனும் இரண்டு ஒக்சியேற்றும் நிலைகள் உள்ளன. இவற்றில் +2 நிலையே அதிகமான சேர்மங்களில் உள்ளது. +4 நிலையிலுள்ள சேர்மங்கள் ஒக்சியேற்றும் தன்மை அதிகமானவையாகும்.

ஒக்சைட்டுகளும் சல்பைடுக்களும்[தொகு]

மூன்று வகையான ஈய ஒக்சைட்டுகள் உள்ளன. அவை ஈயம்(II)ஒக்சைட்டு/ ஈயவோரொக்சைட்டு (PbO), ஈய நாலொக்சைட்டு (Pb3O4), ஈயவீரொக்சைட்டு (PbO2) என்பனவாகும். ஈயவோரொக்சைட்டில் α-PbO மற்றும் β-PbO ஆகிய இரண்டு பிறதிருப்பங்கள் உள்ளன. α-PbO சிவப்பு நிறச் சேர்மமாகும்; இதன் அணுக்களிடையே 230 pm இடைவெளி காணப்படும். β-PbO மஞ்சள் நிற சேர்மமாகும். ஈயத்தின் உப்புகள் ஐதரசன் சல்பைட்டுடன் (H2S) தாக்கமடைந்து ஈயவோர் சல்பைடைக் கொடுக்கும். இச்சேர்மம் சாதாரண உப்பைப் போன்ற அயன் சலாகைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஈயவோர்சல்பைடை வளியில் சூடாக்கினால் முதலில் ஈயசல்பேட்டாகவும் பின்னர் ஈயவோரொக்சைட்டாகவும் ஒக்சியேற்றமடையும். இது நீரிலோ மென்னமிலங்கிலிலோ கரையாது. ஈயவோர் சல்பைடை நைத்திரிக் அமிலத்தில் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்தால் அது அமிலத்துடன் தாக்கமடைந்து கந்தகத்தையும், ஐதரசன் சல்பைட்டையும் கொடுக்கின்றது. ஈயத்தைக் கந்தகத்துடன் அதிக அமுக்கத்தில் சூடாக்கினால் ஈயவிருசல்பைடை உருவாக்கலாம். இச்சேர்மத்தின் சலாகைக் கட்டமைப்பில் ஈய அணுக்கள் கந்தக அணுக்களுடன் எண்கோணி வடிவில் பிணைக்கப்பட்டுள்ளன. ஈயவிருசல்பைடு ஒரு குறைகடத்தியுமாகும்.

ஈயவோரொக்சைட்டை ஈயவோர்சல்பைட்டுடன் சூடாக்கினால் ஈயத்தை இச்சேர்மங்களிலிருந்து பிரித்தெடுக்கலாம்.

2 PbO + PbS → 3 Pb + SO2

ஹேலைட்டுகளும், ஈய உப்புக்களும்[தொகு]

ஈய காபனேற்றை ஐதரசன் புளோரைடுடன் சூடாக்கினால் ஈய ஐதரோபுளோரைடை உருவாக்க முடியும். இது உருகும் போது ஈய இருபுளோரைடு உருவாகும். இது வெள்ளை நிறப்பளிங்குகளாலான சேர்மமாகும். ஈய நால்புளோரைடு எனப்படும் உறுதியற்ற புளோரைடு சேர்மம் மஞ்சள் நிறமானதாகும். ஈயம் ஐதரோகுளோரிக் அமிலத்துடனோ, சல்பூரிக் அமிலத்துடனோ தாக்கமடையாது. எனவே ஈய சல்பேட்டையோ, ஈய இருகுளோரைட்டையோ அமிலங்களுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் உருவாக்க இயலாது. எனினும் ஈயம் நைத்திரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து Pb(NO3)2 மற்றும் நைத்திரிக் ஒக்சைட்டையும் உருவாக்குகின்றது.

ஈயம் பிரித்தெடுத்தல்[தொகு]

ஈயத்தாது-கலீனா

ஈயம் காணப்படும் பிரதான தாதுப் பொருள் கலீனா ஆகும். இதில் பிரதானமான கூறாக PbS உள்ளது. கெருசைட்டு (PbCO3), அங்கிலசைட்டு (PbSO4) போன்ற தாதுப்பொருட்களிலும் ஈயம் உள்ளது. கலீனா முதலில் வளியில் வாட்டப்படும். இதன் போது ஈய சல்பைட்டு உருவாகும். உருவாகும் ஈய சல்பைட்டு பின்னர் ஈய ஒக்சைட்டாகப் பிரிகையடையும்.

2PbS + 3O2 → 2PbSO3
PbSO3 → PbO + SO2

ஈய ஒக்சைட்டு கார்பன் அல்லது கார்பனோரொக்சைட்டைப் பயன்படுத்தித் தாழ்த்தப்பட்டு ஈயம் பிரித்தெடுக்கப்படுகின்றது.

PbO + CO → Pb + CO2

பயன்பாடுகள்[தொகு]

ஆபத்தான கதிரியக்கங்களிலிருந்து பாதுகாக்க ஈயத்துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஈயத்தின் பிரதான பயன்பாடு ஈய-அமில மின்கலம் ஆகும். இது மீண்டும் மின்னேற்றி மீள் பாவனைக்குட்படுத்தக்கூடியதாக இருத்தல் இதன் மேலதிக நன்மையாகும். இம்மின்கலத்தில் ஈயத்தாலான மின்வாய்களும் சல்பூரிக் அமிலத்தாலான மின்பகுபொருளும் உள்ளன. இது கார்களில் பிரதான மின்கலமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

கத்தோட்டுத் தாக்கம் (தாழ்த்தல் தாக்கம்)

PbO2 + 4 H+ + SO42- + 2e → PbSO4 + 2 H2O

அனோட்டுத் தாக்கம் (ஒக்சியேற்றல் தாக்கம்)

Pb + SO42- → PbSO4 + 2e
  • சிறிய துப்பாக்கிகளில் தோட்டாக்களை ஆக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
  • ஆபத்தான கதிரியக்கங்களைத் தடுக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

Lead

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்&oldid=1617906" இருந்து மீள்விக்கப்பட்டது