அணு ஆரம்
அணு ஆரம் என்பது அணுவை ஓர் உருண்டை வடிவாகக் கொண்டால் அதன் ஆரம் என்று கொள்ளலாம். ஆனால் இதனைத் துல்லியமாக அறிவது கடினம். அணுவின் அளவு எல்லாச் சூழல்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. [1] எனவே அணுவின் ஆரம் என்பது என்ன சூழலில், என்ன வரையறையின் கீழ் பெற்றது என்று அறிதல் வேண்டும்.
அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். அணுவின் அளவுகள் அது கொண்டிருக்கும் பிணைப்பின் தன்மையைப் பொருத்தும் மாறுபடும்.
அணுக்களின் ஆரம், அணுவைச் சுற்றியுள்ள எதிர்மின்னிகளின் அமைப்பைப் பொருத்தது. அணுவின் கரு, எதிர்மின்னிகள் சுற்றிவரும் முழு அணுவின் விட்டத்தை விட 100,000 மடங்கு சிறியதாகும். எதிர்மின்னிகள் ஒரு புகை மண்டலம் போல் அணுக்கருவைச் சுற்றி சூழ்ந்திருப்பன, எனவே அணுவின் அளவைத் துல்லியமாய், தெளிவான முடிவுடைய (எல்லையுடைய) வடிவுடையதாகக் கருதுவது கடினம். இப்படி இடர்ப்பாடுகள் இருந்தாலும், அணுக்களின் அளவை அறிய செய்முறைகள் வழியும், கருத்தியமாக கணக்கீட்டு முறையிலும் முயன்று அணுக்களின் ஆரம் 30–300 பிக்கோ மீட்டர் என்று அறிந்திருக்கிறார்கள். தனிம அட்டவணையில் உள்ள அணுக்களின் ஆரங்கள் தெளிவாக புரிந்துகொள்ளுமாறு மாறுவதைப் பார்கலாம். அணுக்களின் ஆரம், காரக் கனிம அணுக்களின் தொடங்கி நிறைவளிம (noble gas) அணுக்கள் வரை சிறியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு நெடுங்குழுவிலும், மேலிருந்து கீழே செல்லச் செல்ல அணுக்களின் ஆரம் கூடிக்கொண்டே போகின்றது.
செய்முறைவழி அளந்த அணு ஆரங்கள் [தொகு]
செய்முறைவழி அளந்த அணு ஆரங்கள் பிக்கோ மீட்டர்களில், 5 பிமீ துல்லியத்துடன், தந்துள்ள அட்டவனை (எடுத்துக் காட்டாக ஐதரசன் அணுவின் ஆரம் 25 பிமீ):
| நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | |
| கிடைவரிசைகள் | |||||||||||||||||||
| 1 | H 25 |
He 31 |
|||||||||||||||||
| 2 | Li 145 |
Be 105 |
B 85 |
C 70 |
N 65 |
O 60 |
F 50 |
Ne 38 |
|||||||||||
| 3 | Na 180 |
Mg 150 |
Al 125 |
Si 110 |
P 100 |
S 100 |
Cl 100 |
Ar 71 |
|||||||||||
| 4 | K 220 |
Ca 180 |
Sc 160 |
Ti 140 |
V 135 |
Cr 140 |
Mn 140 |
Fe 140 |
Co 135 |
Ni 135 |
Cu 135 |
Zn 135 |
Ga 130 |
Ge 125 |
As 115 |
Se 115 |
Br 115 |
Kr |
|
| 5 | Rb 235 |
Sr 200 |
Y 180 |
Zr 155 |
Nb 145 |
Mo 145 |
Tc 135 |
Ru 130 |
Rh 135 |
Pd 140 |
Ag 160 |
Cd 155 |
In 155 |
Sn 145 |
Sb 145 |
Te 140 |
I 140 |
Xe |
|
| 6 | Cs 260 |
Ba 215 |
* |
Hf 155 |
Ta 145 |
W 135 |
Re 135 |
Os 130 |
Ir 135 |
Pt 135 |
Au 135 |
Hg 150 |
Tl 190 |
Pb 180 |
Bi 160 |
Po 190 |
At |
Rn |
|
| 7 | Fr |
Ra 215 |
** |
Rf |
Db |
Sg |
Bh |
Hs |
Mt |
Ds |
Rg |
Uub |
Uut |
Uuq |
Uup |
Uuh |
Uus |
Uuo |
|
| லாந்த்தனைடுகள் | * |
La 195 |
Ce 185 |
Pr 185 |
Nd 185 |
Pm 185 |
Sm 185 |
Eu 185 |
Gd 180 |
Tb 175 |
Dy 175 |
Ho 175 |
Er 175 |
Tm 175 |
Yb 175 |
Lu 175 |
|||
| ஆக்டினைடுக்ள் | ** |
Ac 195 |
Th 180 |
Pa 180 |
U 175 |
Np 175 |
Pu 175 |
Am 175 |
Cm |
Bk |
Cf |
Es |
Fm |
Md |
No |
Lr |
|||
மேற்கோள்: J.C. Slater, J. Chem. Phys. 1964, 41, 3199.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ Cotton, F. A.; Wilkinson, G. (1988). Advanced Inorganic Chemistry (5th Edn). New York: Wiley. ISBN 0-471-84997-9. p. 1385.