அருமன் வாயு
| Group → | 18 |
|---|---|
| ↓ Period | |
| 1 | 2 He |
| 2 | 10 Ne |
| 3 | 18 Ar |
| 4 | 36 Kr |
| 5 | 54 Xe |
| 6 | 86 Rn |
சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் கூட்டம் அருமன் வாயுக்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் ஈலியம்(He), நெயோன்(Ne),ஆர்கான்(Ar), கிறிப்ரன்(Kr), செனோன் (Xe), மற்றும் ரேடன்(Rn).
ஆவர்த்தன அட்டவணையில் கூட்டம் 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.[1] பதிலாக கூட்டம் 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.[2]
அருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி அணுக்கட்டமைப்பு பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் உருகுநிலை , கொதி நிலை என்பன நெருங்கிய வீச்சினுள்10 oC ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Clinton S. Nash (2005). "Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118". J. Phys. Chem. A 109 (15): 3493–3500. doi:10.1021/jp050736o. PMID 16833687.
- ↑ "Flerov laboratory of nuclear reactions". JINR. பார்த்த நாள் 2009-08-08.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Uuq | Uup | Uuh | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||