ஆர்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(ஆர்கன் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
18 குளோரின்ஆர்கான்பொட்டாசியம்
Ne

Ar

Kr
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
ஆர்கான், Ar, 18
வேதிப்பொருள் வரிசை நிறைம வளிமம்
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
183, p
தோற்றம் நிறமிலி
அணு எடை 39.948(1) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ne] 3s2 3p6
சுற்றுப்பாதைகளில்
எதிர்மின்னிகள்
2, 8, 8
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை gas (அறை வெப்பநிலையில்)
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
1.784 g/L
கொதி நிலை 83.80 கெ, K
(−189.35 °C, −308.83 °F)
உருகு
வெப்பநிலை
87.30 கெ, K
(−185.85 °C, −302.53 °F)
முக்கூடற்புள்ளி 83.8058 K, 69 kPa
நிலைமாறும் புள்ளி 150.87 கெ, K 4.898 MPa
உருகுநிலை வெப்பம் 1.18 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
6.43 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 20.786 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K   47 53 61 71 87
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு cகட்டகம், முகநடு
cubic, face centered
ஆக்ஸைடு நிலைகள் 0
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு தரவு இல்லை (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1st: 1520.6 kJ·mol−1
2nd: 2665.8 kJ·mol−1
3rd: 3931 kJ·mol−1
அணுவின் ஆரம் 71 pm பிமீ
அணுவின் ஆரம் (கணிப்பு) 71 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 97 pm
வான் டெர் வால் ஆரம் 188 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு காந்தத்தன்மை அற்றது
வெப்பக் கடத்துமை (300 K) 17.72 m W·m−1·K−1
Speed of sound (gas, 27 °C) 323 m/s
CAS எண் 7440–37–1
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:ஆர்கான் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
36Ar 0.337% Ar ஆனது 18 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
37Ar syn 35 d ε 0.813 37Cl
38Ar 0.063% Ar ஆனது 20 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
39Ar syn 269 ஆண்டு β- 0.565 39K
40Ar 99.600% Ar ஆனது 22 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
41Ar syn 109.34 min β- 2.49 41K
42Ar syn 32.9 y β- 0.600 42K
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

ஆர்கான் (ஆங்கிலம்:Argon, IPA:/ˈɑːgɒn/) என்னும் வேதியியல் பொருள் Ar என்னும் அணுக் குறியீடு கொண்ட தனிமம். இதன் அணுவெண் 18. இது தனிம அட்டவணையில் 18 ஆவது நெடுங்குழுவில், 3 ஆவது கிடைக்குழுவில் உள்ள நிறைம வளிம (Noble gas) வகையைச் சேர்ந்த ஒரு தனிமம். நில உருண்டையின் வளிமண்டலத்தில் 1% க்கும் சற்று குறைவாக உள்ள வளிமம். எனவே ஆர்கான் உலகிலேயே அதிகமாகக் கிடைக்கும் நிறைம வளிமமாக உள்ளது. இவ் அணுவில் உள்ள எதிர்மின்னிகள் இவ் அணுவுக்கு விதிக்கப்பட்ட எதிர்மின்னிக் கூடுகளில் முழுநிறைவாக இடம் பெற்றிருப்பதால், இவ்வகைத் தனிமங்களை நிறைம வளிமம் (வளிம வடிவில் இருப்பதால்) எனப்படுகின்றது. இவ் அணுவின் எதிர்மின்னிக் கூடுகள் யாவற்றினும் புறத்தே உள்ள எதிர்மின்னிக்கூட்டில் நிறைவாக எதிர்மின்னிகள் உள்ளதால், பிற அணுக்களுடன் வேதியியல் பிணைப்பு கொளவதும், வேதியியல் வினையில் பங்கு கொள்வதும் மிக அரிது. ஆர்கானின் முக்கூடற்புள்ளி வெப்பநிலையாகிய 83.8058 K என்பது 1990 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக வெப்பநிலை அலவீட்டு முறையில் ஒரு நிலைப்புள்ளியாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

[தொகு] பண்புகள்

நீரில் ஆர்கானின் கரைதிறன் ஏறத்தாழ ஆக்ஸிஜன் அளவே ஆகும், ஆனால் நீரில் நைட்ரஜன் கரைவதை விட 2.5 மடங்கு அதிகமாகக் கரைகின்றது. மிகவும் நிலையான தன்மை கொண்ட ஆர்கான், பார்பதற்கு ஏதும் நிறம் இல்லாமலும், மணம் மற்றும் சுவை ஏதும் இல்லாததாகவும் உள்ளது (நிறமிலி, மணமிலி, சுவையிலி வளிமம்). ஆர்கான் நீர்ம வடிவிலும் வளிம வடிவிலும், நச்சுத் தன்மை அற்றது. அறை வெப்பநிலையில் பிற அணுக்களுடன் வேதியியல் இயைபு கொண்டு பிற கூட்டுப்பொருள்களாக (சேர்மம்|சேர்மங்களாக) ஆவதில்லை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்