ஒலியின் விரைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒலியின் வேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒலியின் விரைவு ஈரப்பதம் இல்லாத காற்றில் ஒரு மணி நேரத்தில் 1,236 கிமீ (768 மைல்கள்) அல்லது ஒரு விநாடிக்கு 330 மீட்டர்கள்(1083 அடிகள்) ஆகும்.ஒலி காற்றை விட நீரிலும் திண்மங்களிலிலும் விரைவாகச் செல்லும் தன்மையுடையது.அது எளிதாக விரிந்து சுருங்கக்கூடிய ஊடகங்களில் அதிர்வலைகளை ஒரு அணுக்கூறிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி அவ்வூடகத்தில் செல்கிறது. இந்த வேகம் குறைந்த வெப்பநிலைகளில் குறைந்தும் வெப்பம் கூடுதலாக இணையாக கூடவும் செய்கிறது.

ஒலியின் விரைவினை இவ்வாறு கணக்கிடலாம்:

a = \sqrt{\gamma*R*T}

இங்கு:

  • \gamma என்பது வெப்ப ஏற்பு எண்களின் விகிதம் (காற்றில் 1.4)
  • R என்பது மாறிலி (காற்றில் 287 N*m/kg*K)
  • T வெப்பநிலை (கெல்வின்களில்)

காற்றில் ஒலியின் விரைவு மாக் 1 என்றும் குறிப்பிடப்படுகிறது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியின்_விரைவு&oldid=1460855" இருந்து மீள்விக்கப்பட்டது