அண்டக் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துகள் ஆற்றலுடன் (E) அண்டக்கதிர் பாயம்(F)

வானியற்பியலில், அண்டக்கதிர்கள் (Cosmic rays) என்பது குறிப்பாக சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு உயர்-ஆற்றல் பெற்ற துகள்கள் ஆகும்.[1] இது மின்னூட்டப்பட்ட (charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின் போதுதான் பாசிட்ரானும் பல்வேறு மேசான்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் காணப்படுகின்றன. அண்ட வெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாக கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.

அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டலத்தை துளைத்து பாதிப்படையவும், நிலப்பரப்பிற்குமே கூட செல்லும் அளவிற்கும் சில இராண்டாம் நிலை துகள்களின் தூறலை பொழியக்கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோத்தன்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. பெர்மி விண்வெளி தொலைநோக்கியின் மூலம் 2013ல் கிடைக்கப்பெற்ற தகவலானது, முதன்மை அண்டக்கதிர்களின் ஒரு இன்றியமையாத பகுதி, மீவிண்மீன்களின் வெடிப்புச்சிதறல்களின் தோற்றுவிப்பாக கருதக்கூறியுள்ளது.[2] ஆயினும், இது மட்டுமே அண்டக்கதிர்களின் ஒரே தோற்றுவிப்பு என கருதயியலாது. செயலுறு அண்டக்கருக்களும் கூட இதன் தோற்றுவிப்பாக இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma (2008). Atomic And Nuclear Physics. Pearson Education India. p. 478. ISBN 978-81-317-1924-4. 
  2. Ackermann, M.; Ajello, M.; Allafort, A.; Baldini, L.; Ballet, J.; Barbiellini, G.; Baring, M. G.; Bastieri, D. et al. (2013-02-15). "Detection of the Characteristic Pion-Decay Signature in Supernova Remnants". Science (American Association for the Advancement of Science) 339 (6424): 807–811. doi:10.1126/science.1231160. Bibcode2013Sci...339..807A. http://www.sciencemag.org/content/339/6121/807.full. பார்த்த நாள்: 2013-02-14. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்டக்_கதிர்&oldid=1671492" இருந்து மீள்விக்கப்பட்டது