வெப்ப கடத்துத் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியலில் வெப்ப கடத்துத் திறன் (Thermal conductivity) என்பது ஒரு பொருளின் வெப்பங் கடத்தும் பண்பின் அளவீடாகும். இது k என (λ அல்லது κ எனவும்) குறிக்கப்படுகிறது. இது வெப்பக் கடத்தல் தொடர்பான ஃபோரியர் விதியில் அதிகம் பயன்படுகிறது.

அதிக வெப்ப கடத்துத் திறன் கொண்ட ஒரு பொருளின் ஊடாக வெகு விரைவில் வெப்பம் கடத்தப்படும், அதேபோல் குறைவான வெப்ப கடத்துத் திறன் கொண்ட பொருளினூடே மெதுவாகவே வெப்பம் கடத்தப்படும். ஆகையால், அதிக வெப்ப கடத்துத் திறன் கொண்ட பொருட்கள் வெப்ப உறிஞ்சகங்களிலும் குறைவான வெப்ப கடத்துத் திறன் கொண்ட பொருட்கள் வெப்ப தடுப்பு அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பொருளின் வெப்ப கடத்துத் திறன் அப்பொருளின் வெப்பநிலையைப் பொறுத்தமையும். வெப்ப கடத்துத் திறனுக்கு நேரெதிர்ப் பண்பு வெப்பத் தடுதிறன் ஆகும்.

வெப்பக் கடத்துதிறனின் அலகுகள் [தொகு]

வெப்பக் கடத்துதிறனின் பரிமாணம் M1L1T−3Θ−1 எனக் குறிக்கப்படும். அனைத்துலக அலகு (SI) முறையில், வெப்பக் கடத்துதிறன் மீட்டர் கெல்வினுக்கு வாற்று (W/(m·K)) அல்லது W·m−1·K−1 இல் அளக்கப்படும். பிரித்தானிய அலகு முறையில்வெப்பக் கடத்துதிறன் Btu/(hr·ft⋅F) இல் அளக்கப்படும். இங்கு 1 Btu/(hr·ft⋅F) = 1.730735 W/(m·K).[1]

மேற்கோள்கள் [தொகு]

  1. Perry's Chemical Engineers' Handbook, 7th Edition, Table 1-4
"http://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_கடத்துத்_திறன்&oldid=1383883" இருந்து மீள்விக்கப்பட்டது