பொட்டாசியம்
| பொட்டாசியம் | |||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
19K
|
|||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | |||||||||||||||||||||||||||||||
| வெள்ளி போன்ற சாம்பல் பாரஃபின் எண்ணெயின் கீழே பொட்டாசியம் முத்துக்கள். பெரிய முத்து 0.5 செ.மீ. அளவுடையது. கீழே: பொட்டாசியத்தின் நிறமாலைக்கோடுகள் |
|||||||||||||||||||||||||||||||
| பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
| பெயர், குறியீடு, எண் | பொட்டாசியம், K, 19 | ||||||||||||||||||||||||||||||
| உச்சரிப்பு | /pɵˈtæsiəm/ po-TAS-ee-əm | ||||||||||||||||||||||||||||||
| தனிம வகை | கார உலோகம் | ||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 1, 4, s | ||||||||||||||||||||||||||||||
| நியம அணு நிறை (அணுத்திணிவு) |
39.0983(1) | ||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு | [Ar] 4s1 2, 8, 8, 1 |
||||||||||||||||||||||||||||||
| இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
| நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 0.862 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
| திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 0.828 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
| உருகுநிலை | 336.53 K, 63.38 °C, 146.08 °F | ||||||||||||||||||||||||||||||
| கொதிநிலை | 1032 K, 759 °C, 1398 °F | ||||||||||||||||||||||||||||||
| மும்மைப் புள்ளி | 336.35 K (63°C), kPa | ||||||||||||||||||||||||||||||
| உருகலின் வெப்ப ஆற்றல் | 2.33 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
| வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 76.9 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை | 29.6 J·mol−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
| ஒக்சியேற்ற நிலைகள் | 1 (வலிமையான கார ஒக்சைட்டு) |
||||||||||||||||||||||||||||||
| மின்னெதிர்த்தன்மை | 0.82 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 418.8 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
| 2வது: 3052 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
| 3வது: 4420 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 227 pm | ||||||||||||||||||||||||||||||
| பங்கீட்டு ஆரை | 203±12 pm | ||||||||||||||||||||||||||||||
| வான்டர் வாலின் ஆரை | 275 pm | ||||||||||||||||||||||||||||||
| பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | body-centered cubic | ||||||||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | paramagnetic | ||||||||||||||||||||||||||||||
| மின்கடத்துதிறன் | (20 °C) 72 nΩ·m | ||||||||||||||||||||||||||||||
| வெப்ப கடத்துத் திறன் | 102.5 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
| வெப்ப விரிவு | (25 °C) 83.3 µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
| ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 2000 m·s−1 | ||||||||||||||||||||||||||||||
| யங் தகைமை | 3.53 GPa | ||||||||||||||||||||||||||||||
| நழுவு தகைமை | 1.3 GPa | ||||||||||||||||||||||||||||||
| பரும தகைமை | 3.1 GPa | ||||||||||||||||||||||||||||||
| மோவின் கெட்டிமை (Mohs hardness) |
0.4 | ||||||||||||||||||||||||||||||
| பிரிநெல் கெட்டிமை | 0.363 MPa | ||||||||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-09-7 | ||||||||||||||||||||||||||||||
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||
| முதன்மைக் கட்டுரை: பொட்டாசியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||
பொட்டாசியம் (Potassium) ஆவர்த்தன அட்டவணையில் உள்ள வேதியியல் தனிமங்களுள் ஒன்று. இதன் குறியீடு K (L. kalium), இதன் அணுவெண் 19. முற்காலத்தில் பொட்டாசியம் காபனேட்டின் தூய்மையற்ற வடிவமான பொட்டாஷ் என்னும் கனிமத்திலிருந்தே பொட்டாசியம் பிரித்து எடுக்கப்பட்டது இதனாலேயே பொட்டாசியம் என்ற பெயரும் உண்டானது. பொட்டாசியம் ஒரு வெள்ளிபோன்ற வெண்ணிற உலோகமாகும். இது வேறு தனிமங்களுடன் சேர்ந்து கடல் நீரிலும், பல கனிமப் பொருட்களிலும் காணப்படுகின்றது.[1] இது வளிமண்டலத்தில் விரைவாக ஒட்சியேற்றப்படக் கூடியது (oxidizes). சிறப்பாக நீருடன் மிகவும் தாக்கமுறக்கூடிய பொட்டாசியம் ஓரளவுக்கு சோடியத்தை ஒத்தது. பொட்டாசியம் எரிமலைப் பாறைகளில் சிலிகேட்டாக எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. பூமியில் மேலோட்டுப் பகுதியில் இதுவும் சோடியமும் ஏறக்குறைய ஒரே செழுமையைப் பெற்றுள்ளன. பொட்டாசியத்தின் செழுமை எடையில் 2 .35 விழுக்காடு இது செழுமை வரிசையில் ஏழாவதாகும். கிரானைட் கற்களில் பொட்டாசியம் ஓரளவு சேர்ந்திருக்கிறது. கடல் நீரில் சிறிதளவு பொட்டாசியம் இருக்கிறது.[2][3])
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
சோடியம் மற்றும் பொட்டாசியச் சேர்மங்களை மக்கள் தனிமங்களை அறிவதற்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றின் கார்போனேட்டுக்கள் பழங்காலத்தில் சலவைத் தொழிலில் பயன்படுத்தப்பட்டன. இந்த கார்போனேட்டுக்களைப் பொதுவாக காரங்கள் (alkali) என அழைத்தனர். சோடியம் காபோனேட்டை சோடா என்றும் பொட்டாசியம் கார்போனேட்டை பொட்டாஷ் என்றும் பெயரிட்டனர். 1807 ல் சர் ஹம்ப்ரி டேவி என்ற இங்கிலாந்து நாட்டு வேதியலாளர் பொட்டாஷ்ஷை உருக்கி நீர்மமாக்கி அதை மின்னாற் பகுத்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் எதிர் மின் வாயில் படிந்திருந்தது இது கடல் பாசியின் சாம்பலிலிருந்து பெறப்பட்டதால் பொட்டாசியம் என்ற பெயரைப் பெற்றது. காரத்திற்கு அரேபிய மொழியில் 'காலியம் ' என்று பெயர். இதன் முதல் எழுத்தான K என்பதே பொட்டாசியத்திற்கு வேதிக் குறியீடாக அமைந்தது.
பண்புகள் [தொகு]
இயற்பியல் பண்புகள் [தொகு]
பொட்டாசியம் இலேசான, மென்மையான வெள்ளி போன்று வெண்ணிறத்துடன் ஆனால் சற்று நீலம் பாய்ந்த பொலிவுடன் கூடிய உலோகமாகும்.[4][5] காற்று வெளியில் சட்டென மங்கி விடுகிறது.[6] அறை வெப்ப நிலையில் மெழுகு போன்றிருக்கும். இதைக் கம்பியாக நீட்டவும், தகடாக அடிக்கவும் முடியும். இது நேர் மின் வாய் நாட்டமிக்கது. நீரை வெடிச் சத்தத்துடன் பகுத்து ஹைட்ரஜனை வெளியேற்றி பொட்டாசியம் ஹைட்ராக்சைடை உற்பத்தி செய்கிறது.[5] இந்த வினையில் மிகுந்த அளவு வெப்பம் வெளிப்படுவதால் ஹைட்ரஜன் எரிகிறது. பொட்டாசியம் தீச்சுவாலையுடன் வெடிக்கிறது.
வேதிப்பண்புகள் [தொகு]
வேதி வினைகளின் அடிப்படையில் இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதைவிட வினைதிறமிக்கது. பொட்டாசியம் கிளர்ச்சியுடன் ஹாலஜன்கள், கந்தகம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைகிறது. சூடுபடுத்தப்பட்ட பொட்டாசியம், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ள எல்லா வளிமங்களையும் பகுக்கின்றது.[7] நிலையான போரான், சிலிகான் ஆக்சைடுகள் மற்றும் மக்னீசியம், அலுமினியத்தின் குளோரைடுகள்கூட விதி விலக்கில்லை. சோடியம் போல பொட்டாசியமும் மண்ணெண்னைக்குள் முக்கி பாதுகாக்கப்படுகிறது.[5][8] நீரில் உடனடியாகத் தீப்பற்றி எரிகிறது. பொட்டசியத்தின் அணு எண் 19, அணு எடை 39.10. இதன் அடர்த்தி 860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 336.53 K(63.38 °C),1033 K(759 °C)ஆகும்.
பயன்கள் [தொகு]
மின்னணுவியல் துறையில் எலெக்ட்ரான் வால்வுகளை உண்டாக்கும் போது விளக்கினுள் சிறிதளவு பொட்டாசியத்தை இடுவார்கள். விளக்கை மூடிய பின் இது ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் உயரளவு வெற்றிடம் உள்ளே ஏற்படுகிறது. வால்வு வெள்ளிப் பூச்சிட்டது போலத் தோன்றுவது இதனால்தான். பொட்டாசியம் ஹைட்ராக்சைடு என்பது பொட்டாஷ். பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுத்தும் அல்லது பொட்டாசியம் கார்போனேட் மற்றும் சுண்ணாம்பு நீரிலிருந்தும் இதைத் தயாரிக்கலாம். இது மென்மையான சோப்பு தயாரிக்கவும், இதோடு வினை புரியாத வளிமங்களை வறட்சியூட்டவும் பயன்படுகிறது.
விவசாயத்திற்குத் தேவையான உரங்களின் உற்பத்தி முறையில் பொட்டாஷ் முக்கியப் பங்கு வகிக்கிறது.[9] பொட்டாசியம் குளோரைடு பொட்டாஷ் உற்பத்திக்கும், பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படச் சுருள்களுக்குத் தேவையான ஒளியுணர் வெள்ளி புரோமைடு உற்பத்திக்கும் பயன்படுகின்றன. பொட்டாசியம் புரோமைடு மருத்துவத் துறையில் மயக்க மூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் குளோரேட் குளிர் நீரில் குறைவாகவும் சுடு நீரில் உடனடியாகவும் கரைகிறது. இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டிப் பொருளாகும். பொட்டசியம் குளோரேட்டும், பாஸ்பரசும் கலந்த கலவை பலத்த ஓசையுடன் வெடிக்கிறது. குளோரேட்டை கந்தகத்துடன் கலக்க மோதும் போது வெடிக்கிறது. அடர் மிகு கந்தக அமிலத்துடன் வினை புரிந்து வெடிக்கக் கூடிய குளோரின் பெராக்சைடை விளைவிக்கின்றது. பொட்டசியம் குளோரேட், ஆக்சிஜன் உற்பத்தி முறையில் பயன் படுகின்றது. இது வான வேடிக்கைக்கான வெடிகள், தீக்குச்சிகள், ஒளிப் படத்திற்கான மின்னல் விளக்குகளுக்கான பொடிகள் போன்றவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. தொண்டைக்கு இதமளிக்கும் மருந்துகளில் சிறிதளவு குளோரேட் இருக்கும். பொட்டாசியம் கார்போனேட் கண்ணாடி, மென் சோப்பு தயாரிக்கவும், பொட்டாசியம் நைட்ரேட் துப்பாக்கிக்கான வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சோடியமும், பொட்டாசியமும் சேர்ந்த கலப்பு உலோகம் வெப்பப் பரிமாற்று ஊடகமாகப் பயன்படுகிறது. ஈனுலைகளில் இதன் நீர்மத்தை குளிர்விப்பானாகப் பயன்படுத்துகின்றார்கள்.
மேற்கோளும் குறிப்புகளும் [தொகு]
- ↑ Marggraf, Andreas Siegmund (1761). Chymische Schriften. p. 167. http://books.google.com/books?id=b-ATAAAAQAAJ&pg=PA167.
- ↑ Webb, D. A. (April 1939). "The Sodium and Potassium Content of Sea Water". The Journal of Experimental Biology: 183. http://jeb.biologists.org/content/16/2/178.full.pdf.
- ↑ Anthoni, J. (2006). "Detailed composition of seawater at 3.5% salinity". seafriends.org.nz. பார்த்த நாள் 23 September 2011.
- ↑ Greenwood 1997, p. 76.
- ↑ 5.0 5.1 5.2 Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). "Potassium" (in German). Lehrbuch der Anorganischen Chemie (91–100 ed.). Walter de Gruyter. ISBN 3-11-007511-3.
- ↑ James, A. M.; Lord, M. P. (1992). Macmillan's chemical and physical data. London: Macmillan. ISBN 0-333-51167-0.
- ↑ Rieke, R. D. (1989). "Preparation of Organometallic Compounds from Highly Reactive Metal Powders". Science 246 (4935): 1260–1264. doi:10.1126/science.246.4935.1260. பப்மெட் 17832221. Bibcode: 1989Sci...246.1260R.
- ↑ Burkhardt, p. 35
- ↑ Greenwood 1997, p. 73.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
