மறை வெப்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெப்பவேதியியலில், மறை வெப்பம் (latent heat) என்பது, பதார்த்தங்களின் நிலை மாற்றங்களின்போது, அதாவது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறும்போது அப் பதார்த்தத்தினால் உறிஞ்சப்படும் அல்லது வெளிவிடப்படும் வெப்ப ஆற்றலாகும். தற்காலத்தில் இதனை உள்ளீட்டு வெப்பம் (enthalphy) என்கின்றனர்.
மறைவெப்பம் இரண்டு வகையில் விவரிக்கப்படுகின்றது. ஒன்று உருகல் மறை வெப்பம் ஆகும்.மற்றது, ஆவியாதல் மறை வெப்பம். இங்கே நிலை மாற்றத்தின் திசை: திண்மம் → நீர்மம் → வளிமம் என்னும் திசையில் உள்ளது. இந் நிலை மாற்றங்கள் அகவெப்ப மாற்றங்கள் எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உறிஞ்சப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் எனும்போது வெப்பம் வெளிவிடப் படுவதனால், அது புறவெப்ப மாற்றம் எனப்படும்.
[தொகு] மறை வெப்ப அட்டவணை
==உள்ளுறை வெப்பம் [latent (heat) = Potentially existing but not presently evident or realized - wordweb dictionary]
| பதார்த்தம் | உருகல் மறை வெப்பம் ஜூ/கி |
உருகு நிலை °ச |
ஆவியாதல் மறை வெப்பம் ஜூ/கி |
கொதி நிலை °ச |
|---|---|---|---|---|
| அல்ககோல், ஈதைல் | 108 | -114 | 855 | 78.3 |
| அமோனியா | 339 | -75 | 1369 | -33.34 |
| காபனீரொட்சைட்டு | 184 | -57 | 574 | -78 |
| ஹீலியம் | 21 | -268.93 | ||
| ஐதரசன் | 58 | -259 | 455 | -253 |
| ஈயம்[1] | 24.5 | 372.3 | 871 | 1750 |
| நைதரசன் | 25.7 | -210 | 200 | -196 |
| ஒட்சிசன் | 13.9 | -219 | 213 | -183 |
| தொலுயீன் | -93 | 351 | 110.6 | |
| தர்ப்பன்டைன் | 293 | |||
| நீர் | 334 | 0 | 2260 | 100 |
[[பகுப்பு{வேதியியல்]]
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found