அமுங்குமை
வெப்பஇயக்கவியல் மற்றும் பாய்மவிசையியலில், அமுங்குமை என்பது அழுத்த(அல்லது இடைத் தகைப்பு) மாற்றத்தால் பாய்மம் அல்லது திண்மத்தின் கனவளவில் ஏற்படுகின்ற சார்மாற்றத்தின் அளவீடாகும்.
இங்கே V என்பது கனவளவு மற்றும் p என்பது அழுத்தம்
குறிப்பு: பெரும்பாலான உரைநூல்களில்
என்பதால் இக்கணியம் குறிக்கப்படுகிறது.
வரைவிலக்கணம் [தொகு]
மேலே விவரக்குறிப்பு முழுமையானதாக இல்லை ஏனெனில், யாதேனும் பொருள் அல்லது அமைப்பின் அமுங்குமை அளவானது சமவெப்ப அல்லது வெப்பஞ்செல்லா செயன்முறை என்பதில் உறுதியாக தங்கி உள்ளது. அதன்படி சமவெப்ப அமுங்குமை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
இங்கு கீழெழுத்து T பகுதிவகைக்கெழு நிலையான வெப்பநிலையில் எடுக்கவேண்டும் என்பதை குறிக்கிறது
வெப்பஞ்செல்லா அமுங்குமை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
இங்கே S சிதறம், ஒரு திண்மத்தில் இவ் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு வழக்கமாக புறக்கணிக்கத்தக்கது.
அமுங்குமையின் தலைகீழ் பருமக்குணகம் என்று அழைக்கப்படுகிறது , பெரும்பாலும் K( சில நேரங்களில் B ) இனால் குறிக்கப்படும். அந்த பக்கம் கூட வெவ்வேறு மூலப்பொருட்களிற்கு சில எடுத்துக்காட்டுகளை கொண்டுள்ளது.
அமுங்குமை சமன்பாடு சமவெப்ப அமுங்குதிறனை (மறைமுகமாக அழுத்தம்) திரவ கட்டமைப்புடன் தொடர்புபடுத்துகிறது.


