வொயேஜர் 1
வொயேஜர் விண்கலம் |
|
| இயக்குபவர் | நாசா / JPL |
|---|---|
| திட்ட வகை | இலக்கு அணுகல் |
| அணுகிய விண்பொருள் | வியாழன், சனி |
| ஏவப்பட்ட நாள் | செப்டம்பர் 5, 1977 12:56:00 UTC (35 ஆண்டுகள், 8 மாதங்கள், 19 நாட்கள் இற்கு முன்னர்) |
| ஏவுகலம் | டைட்டான் IIIE / செண்டோர் |
| ஏவு தளம் | கேப் கேனவரல், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
| திட்டக் காலம் | பயணத்தில் உள்ளது (விண்மீன்களிடை ஊடகத் திட்டம்) (34 ஆண்டுகள், 4 மாதங்கள், 20 நாட்கள் elapsed)
|
| தே.வி.அ.த.மை எண் | 1977-084A |
| இணைய பக்கம் | நாசாவின் வொயேஜர் இணையத்தளம் |
| நிறை | 721.9 kg (1 lb) |
| திறன் | 420 வாட்டு |
| References: [1] |
|
வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள், 8 மாதங்கள், 16 நாட்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8x1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது[2]. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும்[3]
நாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேஜர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து வொயேஜர் 1 ஏவப்பட்டது. வொயேஜர் 1 தனது சூரியக் குடும்ப ஆய்வை 1980 நவம்பர் 20 முடித்துக் கொண்டது. வியாழன் கோளை 1979 இலும், சனிக் கோளை 1980 இலும் இரு ஆய்வு செய்தது. இந்த இரண்டு பெரும் கோள்களினதும், அவற்றின் நிலாக்களினதும் முதலாவதும் விரிவானதுமான படங்களை பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
1960களில், வெளிக்கோள்களை ஆராயும் திட்டத்தை முன்னெடுக்க முன்மொழியப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை நாசா 1970களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வொயேஜர் 1 விண்ணாய்வி மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 11 என்ற பெயரில் வியாழன், சனி, யுரேனசு, மற்றும் நெப்டியூன் ஆகிய பெரும் வாயுக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பபடவிருந்தது. ஆனாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, இது வியாழன், மற்றும் சனிக் கோள்களை மட்டும் அணுகும் திட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு, மரைனர் வியாழன்-சனி ஆய்வி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் பழைய மரைனர் திட்டக் கலங்களிலும் பார்க்க பெருமளவு மாற்றங்களைப் பெற்றதால் வொயேஜர் எனப் பெயர் மாற்றம் பெற்றது[4].
விண்கலத்தின் அமைப்பு [தொகு]
வொயேஜர் 1 விண்ணாய்வி ஐக்கிய அமெரிக்காவின் ஜெட் இயக்க ஆய்வகத்தினால் அமைக்கப்பட்டது. இதன் வானலை வாங்கி எப்போதும் பூமியை நோக்கி இருக்கத்தக்கதாக இந்த விண்கலத்தில் 16 ஐதரசீன் அமுக்கிகள், மூவச்சு நிலைபேறு சுழல் காட்டிகள், மற்றும் சூரிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் விண்வெளியில் இது பயணிக்கும் போது எதிர்ப்படும் விண்பொருட்களை ஆய்வு செய்வதற்காக 11 அறிவியல் உபகரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன[5].
வொயேஜர் 1 இன் வானொலித் தொலைத்தொடர்பு அமைப்புகள் இந்த விண்ணாய்வியின் மிகப்பெரும் தூரத்துக்கு விண்வெளிப் பறப்பை மேற்கொண்டு செல்லும் போது சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் பயன்படுத்தப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தொலைத் தொடர்பு அமைப்புகள் பூமியில் உள்ள மூன்று புறவெளித் தொடர்பு நிலையங்களினூடாக வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமாக 3.7 மீட்டர் விட்டம் கொண்ட பரவளைவு வட்டு உயரீட்ட அலையுணரியைக் (படத்தைப் பார்க்க) கொண்டுள்ளது.
வொயேஜர் 1 விண்ணாய்வி பூமியுடன் நேரடியான தொடர்புகளை இழக்க நேரும் போது இவ்வாய்வியில் பொருத்தப்பட்டுள்ள எண்ணிம நாடாப் பதிவி (DTR) மூலம் 62,500 கிலோபைட்டுகள் தகவல்களைப் பதிய முடியும். இத்தகவல்கள் பின்னர் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் போது பூமிக்கு அனுப்பப்படும்[5]. வொயேஜர் 1 இலிருந்து தகவல் ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு, அல்லது பூமியில் இருந்து அதற்கு அனுப்புவதற்கான நேரம் t = D/c, என்ற இலகுவான சமன்பாட்டினால் கணிக்கப்படும், இங்கு, D என்பது பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையேயான நேர்கோட்டுத் தூரம், c, ஒளியின் வேகம் (கிட்டத்தட்ட 300,000 கிமீ/செ).
வொயேஜர் 1 மூன்று பெரும் கதிரியக்க சமபொருண்மை வெப்பமின்னியற்றிகளைக் (radioisotope thermoelectric generators, RTGs) கொண்டுள்ளது. இந்த மின்னியற்றிகள் ஒவ்வொன்றும் 24 அழுத்திய புளூட்டோனியம்-238 ஒக்சைடு கோளங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது இந்த கோளங்களில் வெளிவிடப்பட்ட வெப்பம் 157 வாட்டுகள் மின்திறனை உருவாக்கியது, மீதமானவை கழிவெப்பமாக வெளியேற்றப்பட்டன. இதனால் மூன்று மின்னியற்றிகளிலும் இருந்து மொத்தம் 470 வாட்டுகள் மின்திறன் பிறப்பிக்கப்பட்டது. இந்த மின்திறனைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு வரையில் வொயேஜர் 1 விண்கலத்தை இயக்க வைக்க முடியும்.[5][6] (பார்க்க: படம் 1, 2)
இந்த விண்கலங்கள் மற்றைய கோள்களில் உள்ள அறிவுஜீவிகளினால் கைப்பற்றப்பட்டால் முன்னெச்செரிக்கையாக இவை பொற்தகட்டினால் ஆன ஒலி-ஒளி குறுவட்டு ஒன்றைக் கொண்டு செல்கின்றன. இவற்றில் பூமி மற்றும் அதன் உயிரினங்கள் குறித்த படங்கள், அறிவியல் செய்திகள், புகழ்பெற்ற நபர்களின் (எ.கா. ஐநா பொதுச் செயலர், அமெரிக்க அரசுத்தலைவர், மற்றும் சிறுவர்களின்) வாழ்த்துச் செய்திகள், பூமியின் உயிரினங்களின் ஒலிகள் போன்றவை பதியப்பட்டுள்ளன.
வொயேஜர் திட்டக் குறிப்பு [தொகு]
| பயணக் காலக்கோடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏவல் [தொகு]
வொயேஜர் 1 விண்ணாய்வி 1977, செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டைட்டன் IIIE எவுகலன் மூலம் விண்ணுக்கு ஏவபட்டது. இதன் சகோதரக் கலமான வொயேஜர் 2 விண்ணாய்வி இரு வாரங்களுக்கு முன்னர், 1977 ஆகத்து 20 ஆம் நாள் ஏவப்பட்டது. பின்னராக ஏவப்பட்டாலும், வொயேஜர் 1 வியாழனையும், சனிக் கோளையும் குறுகிய பாதை மூலம் வொயேஜர் 2 ஐ விட முன்னதாகவே அடைந்து விட்டது.
|
வியாழனுக்குக் கிட்டவாகச் செல்லல் [தொகு]
வொயேஜர் 1 வியாழனை 1979 சனவரியில் படம் பிடிக்க ஆரம்பித்து 1979 ஏப்ரலில் நிறைவு செய்தது. 1979 மார்ச் 5 இல் வியாழனுக்குக் மிகக் கிட்டவாக, வியாழனின் நடுப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 349,000 கிலோமீட்டர்கள் (217,000 மைல்) தொலைவு வரை சென்றது. வியாழனுக்குக் கிட்டவாக இருந்த 48 மணி நேரத்திற்கு அது வியாழனின் நிலவுகள், வளையங்கள், காந்தப் புலங்கள், வியாழத் தொகுதியின் கதிர்வீச்சு வளையம் போன்றவற்றின் மிகத் தெளிவான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
இரண்டு வொயேஜர் விண்ணாய்விகளும் வியாழனைப் பற்றியும், அதன் செயற்கைக்கோள்களைப் பற்றியும் பல முக்கிய தகவல்களைக் கண்டுபிடித்தது. மிக முக்கியமாக வியாழனின் ஐஓ நிலவில் எரிமலை வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தது.
|
|||||||||
|
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: வொயேஜர் 1 இன் வியாழன் பயணம்
|
|||||||||
சனிக் கோளுக்குக் கிட்டவாகச் செல்லல் [தொகு]
வொயேஜர் விண்ணாய்விகள் இரண்டும் வியாழனைக் கடந்து சனிக் கோளையும் அதன் நிலவுகளையும், வளையங்களையும் அடைந்தன. வொயேஜர் 1' இன் சனிக்குக் கிட்டவான பறப்பு நவம்பர் 1980 இல் நிகழ்ந்தது. அதற்கு மிகக் கிட்டவாக 124,000 கிமீ (77,000 மைல்) தூரத்தை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. சனியின் வளையங்களின் சிக்கலான அமைப்பௌகள், மற்றும் சனி மற்றும் டைட்டன் நிலவு ஆகியவற்றின் வளிமண்டலங்களையும் படம் பிடித்தது[9].
|
|||||||||
|
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: வொயேஜர் 1 இன் வியாழன் பயணம்
|
|||||||||
காந்த நெடுஞ்சாலை [தொகு]
சூரியன்சூழ் வான்மண்டலத்தில் (heliosphere) முன்னர் அறிந்திராத பகுதி ஒன்றை வொயேஜர் 1 விண்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவியலாளர்கள் 2012 டிசம்பர் 3 இல் அறிவித்தார்கள். "காந்த நெடுஞ்சாலை" (magnetic highway) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பிராந்தியம் சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவானது. இப்பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்லவும், அதே வேளையில் விண்மீனிடை வெளியில் இருந்து அதிவேகத் துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது. வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்ல இதுவே கடைசித் தடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[10][11]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "VOYAGER:Mission Information". NASA (1989). பார்த்த நாள் January 2, 2011.
- ↑ Voyager 1, Where are the Voyagers - NASA Voyager 1
- ↑ Particles point way for Nasa's Voyager, பிபிசி, சூன் 15, 2012.
- ↑ Chapter 11 "Voyager: The Grand Tour of Big Science" (sec. 268.), by Andrew,J. Butrica, found in From Engineering Science To Big Science ISBN 978-0-16-049640-0 edited by Pamela E. Mack, NASA, 1998
- ↑ 5.0 5.1 5.2 "VOYAGER 1:Host Information". நாசா (1989). பார்த்த நாள் சனவரி 2, 2011.
- ↑ Furlong, Richard R.; Wahlquist, Earl J. (1999). "U.S. space missions using radioisotope power systems". Nuclear News 42 (4): 26–34. http://www2.ans.org/pubs/magazines/nn/pdfs/1999-4-2.pdf. Retrieved சனவரி 2, 2011.
- ↑ "Voyager Mission Description" நாசா, பெப்ரவரி 19, 1997
- ↑ "Voyager 1 Full Mission Timeline" Muller, Daniel, 2010
- ↑ "Voyager – Frequently Asked Questions". Voyager.jpl.nasa.gov (1990-02-14). பார்த்த நாள் 2010-09-01.
- ↑ Voyager 1 Can ‘Taste’ the Interstellar Shore, Discovery News, டிசம்பர் 3, 2012
- ↑ "Voyager 1 probe leaving solar system reaches 'magnetic highway' exit". Daily News & Analysis. பார்த்த நாள் டிசம்பர் 3, 2012.
வெளி இணைப்புகள் [தொகு]
- NASA Voyager website
- Voyager Spacecraft Lifetime — interstellar mission coverage.