திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு, இப்படத்தில் நடுவில் காணப்படுவதே கன்னி விண்மீன் மீகொத்து

திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு என்பது நம் பால் வழி உள்ள கன்னி விண்மீன் மீகொத்து போல் பல விண்மீன் மீகொத்துகளைக் கொண்டது.[1]

கண்டுபிடிப்பு[தொகு]

இதை 1987ஆம் ஆண்டு அவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டூலி (en:R. Brent Tully) என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]

பரிமாணம்[தொகு]

இந்த திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு 100 கோடி ஒளியாண்டு நீளமும் 15 கோடி ஒளியாண்டு அகலமும் கொண்டது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீகொத்து தொகுப்புகளில் இது 2ஆவது பெரிய மீகொத்து தொகுப்பாகும். (சுலோன் பெரும் சுவர் (en:Sloan Great Wall) - முதல் பெரியது)

இத்தொகுப்பு ஐந்து பாகங்களை கொண்டது. நாமிருக்கும் கன்னி விண்மீன் மீகொத்து இதில் 0.1 சதவிகிதமே உள்ளது.[3]

மேற்கோள்[தொகு]

  1. Tully, R. B. (1986-04-01). "Alignment of clusters and galaxies on scales up to 0.1 C". The Astrophysical Journal 303: 25–38. doi:10.1086/164049. Bibcode: 1986ApJ...303...25T. http://adsabs.harvard.edu/abs/1986ApJ...303...25T. பார்த்த நாள்: 2011-05-03. 
  2. New York Times, "Massive Clusters of Galaxies Defy Concepts of the Universe", Tue. November 10, 1987, John Noble Wilford
  3. Tully, R. Brent (1987-12-01). "More about clustering on a scale of 0.1 C". The Astrophysical Journal 323: 1–18. doi:10.1086/164049. Bibcode: 1986ApJ...303...25T. http://adsabs.harvard.edu/abs/1987ApJ...323....1T. பார்த்த நாள்: 2011-05-03.