1928
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள் |
| ஆண்டுகள்: | 1925 1926 1927 - 1928 - 1929 1930 1931 |
| 1928 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1928 MCMXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1959 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2681 |
| சீன நாட்காட்டி | 4624-4625 |
| எபிரேய நாட்காட்டி | 5687-5688 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1983-1984 1850-1851 5029-5030 |
| இரானிய நாட்காட்டி | 1306-1307 |
| இசுலாமிய நாட்காட்டி | 1346 – 1347 |
| ரூனிக் நாட்காட்டி | 2178
|
1928 (MCMXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 6-7 - தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 17 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
- ஜனவரி 31 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- மார்ச் 12 - கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 12 - மால்ட்டா பிரித்தானியாவின் டொமினியன் ஆகியது.
- ஏப்ரல் 7 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
- ஜூன் 4 - சீனக் குடியரசின் அதிபர் ஜாங் சுவோலின் ஜப்பானிய கூலிப்படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
- ஜூன் 9 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
- ஜூலை 17 - மெக்சிக்கோ அதிபர் ஆல்வேரோ ஒப்ரெகோன் படுகொலை செய்யப்பட்டார்.
- ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா சீனாவில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைத்தது.
- ஆகஸ்ட் 27 - போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
- செப்டம்பர் 1 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
- செப்டம்பர் 16 - புளோரிடாவில் வீசிய சூறாவளி காரணமாக 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 28 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசினைக் கண்டுபிடித்தார்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- கொக்கக் கோலா ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களூடாக ஐரோப்பாவை அடைந்தது.
- துருக்கி அரபிக் எழுத்துகளை விடுத்து இலத்தீன் அமைப்புக் கொண்ட புதிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது.
- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் வெளியிடப்பட்டது.
- ஆனந்த விகடன் இதழ் தொடங்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 5 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாகிஸ்தானின் அதிபர் (இ. 1979)
- ஜனவரி 25 - எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, முன்னாள் ஜோர்ஜியாவின் குடியரசுத் தலைவர்
- ஏப்ரல் 6 - ஜேம்ஸ் டூயி வாட்சன், அமெரிக்க உயிரியலாளர்
- ஏப்ரல் 10 - அப்துல் காதர் சாவுல் அமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
- மே 4 - ஹொஸ்னி முபாரக், எகிப்திய குடியரசுத் தலைவர்
- ஜூன் 14 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)
- அக்டோபர் 1 - ஜூ ரோங்ஜி, சீனத் தலைவர்
- டிசம்பர் 7 - நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியல் அறிஞர்
இறப்புகள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - ஓவன் ரிச்சார்ட்சன்
- வேதியியல் - அடொல்ப் விண்டாஸ்
- மருத்துவம் - சார்ல்ஸ் நிக்கோல்
- இலக்கியம் - சிகிரிட் ஊண்ட்செட்
- அமைதி - வழங்கப்படவில்லை