ஜூலை 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | ஜூலை 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMVIII | ||||||
ஜூலை 23 கிரிகோரியன் ஆண்டின் 204வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 205வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.
- 1793 - புரூசியர்கள் ஜெர்மனியின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- 1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
- 1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
- 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து ஜூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.
- 1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.
- 1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.
- 1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
- 1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.
- 1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
- 1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.
- 1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
- 1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
- 1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
- 1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
- 1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
- 2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
[தொகு] பிறப்புகள்
- 1856 - லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
- 1892 - முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (இ. 1975)
- 1975 - சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்
- 1984 - பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1885 - யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்க அரசுத் தலைவர் (பி. 1822)
- 1916 - சேர் வில்லியம் ராம்சி, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி. 1852)
- 1925 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)
- 1989 - தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
[தொகு] சிறப்பு நாள்
- எகிப்து - புரட்சி நாள் (1952)
- லிபியா - புரட்சி நாள்
- பப்புவா நியூ கினி - நினைவு நாள்

