அஜித் ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அஜித் ஜெயின் (இந்தியாவில் உள்ள ஒரிசாவில் ஜூலை 23, 1951 அன்று பிறந்தார்) ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தற்போது பெர்க்ஷைர் ஹத்தவே[1] க்கான பல்வேறு மறுகாப்பீட்டுத் தொழில்களுக்குத் தலைமை வகிக்கிறார். மேலும் இவர் வாரன் பஃபேக்கு பின்தொடர்பவராக இருக்க சாத்தியமுள்ள நபராக அறியப்படுகிறார்.[2]

வாரன் பஃபே வெளியேறிய போது தலைமை வகிப்பதற்கு, மிட்அமெரிக்கன் எனர்ஜி ஹோல்டிங்ஸ் கம்பெனியின் தலைவரான டேவிட் சோகோல் மற்றும் பெர்க்ஷைர் ஹாதவேயின் GEICO கார்பரேசனின் தலைமை அதிகாரி டோனி நைஸ்லி ஆகியோர் அஜித் ஜெயினின் போட்டியாளர்களாக இருந்தனர்.[3]

பொருளடக்கம்

வாரன் பஃபேவுடனான நெருக்கம் [தொகு]

ஸ்டம்போர்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அஜித் ஜெயின் இன்னும் வாரன் பஃபேவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

பெர்க்ஷைரின் அறிக்கைகளுடன் இணைத்து பங்குதாரர்களுக்கு வாரன் பஃபே எழுதிய கடிதங்களில் அவர் அஜித் ஜெயினை தொடர்ந்து பாராட்டி எழுதியிருக்கிறார்.[3]

  • 2002 ஆம் ஆண்டு: "1986 ஆம் ஆண்டில் அஜித் நம்முடன் இணைந்ததில் இருந்து அவர் எழுதிய ஒவ்வொரு காப்பீட்டுப் பத்திரத்தைப் பற்றியும் பெரும்பாலும் எனக்குத் தெரியும். ... அவரது வியக்கத்தக்க ஒழுங்குமுறை, இயல்பாக, இழப்புகளை நீக்கவில்லை. எனினும் முட்டாள்தனமான இழப்புகளில் இருந்து காத்துவருகிறது. காப்பீடு முதலீடு செய்யப்படும் போது காப்பீடு அளிப்பவர்கள் குழப்பமான முடிவுகளை தவிர்த்து மிகச்சிறந்த ஒன்றை எடுப்பதைக் காட்டிலும், முதன்மையாக சிறந்த நீண்ட கால விளைவுகளை உண்டாக்குவதற்கு இதுவே அடிப்படையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.[4]
  • 2003 ஆம் ஆண்டு: "பெர்க்ஷைர்ருடன் அவருடைய மதிப்பைப் பற்றி எவ்வளவு கூறினாலும் அது மிகையாகாது" எனக் கூறியிருந்தார்.
  • 2004 ஆம் ஆண்டு: "பெர்க்ஷைருக்கு அஜித்தின் மதிப்பு பிரமிக்கதக்கதாகும்" எனக்கூறியிருந்தார்.[5]
  • 2005 ஆம் ஆண்டு: வாரன் பஃபே அவரை "ஒரு வியக்கத்தக்க மேலாளர்" என அழைத்தார்.[6]
  • 2008 ஆம் ஆண்டு: "1986 ஆம் ஆண்டில் அஜித் பெர்க்ஷைருக்கு வருகை தந்தார். வெகு விரைவில் ஒரு வியக்கத்தக்க திறமையான நபரை நாம் கொண்டுள்ளோம் எனபதை நான் உணர்ந்து கொண்டேன். எனது தர்க்க ரீதியான ஒரு செய்கையாக புதுடில்லியில் உள்ள அவரது பெற்றோர்களிடம் அவரைப் போல மற்றொருவரை அவர்கள் வீட்டில் கொண்டுள்ளனரா எனக் கேட்டேன். ஆனால் எழுதுவதற்கு முன்பே எனக்கு அதற்கான விடை தெரியும். அஜித்தைப் போல் வேறு எவரும் இருக்க முடியாதென்று எனக்கு முன்பே தெரியும்" என எழுதியிருந்தார்.[7]

ஆரம்பகால வாழ்க்கை [தொகு]

அஜித் ஜெயின் இந்தியாவின் கடலோர மாநிலமான ஒரிசாவில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் கரக்பூரில் உள்ள இண்டியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று பட்டதாரியானார். அஜித் ஜெயின் அவரது படிப்பில் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளாதவர் என அவரது வகுப்புத் தோழர் ரோனோஜோய் தத்தா கூறினார். மாறாக அவர்கள் பொருளாதாரம், சமூகவியல் மற்றும் வியட்நாம் போர் போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடுவர். பெரும்பாலும் இரவு முழுவதும் இந்த விவாதங்கள் தொடரும். அவர்களது மற்றொரு வகுப்புத் தோழரான விஜய் டிரிஹன் கூறும் போது, அஜித் ஜெயின் மற்றும் ரோனோஜோய் தத்தா இருவரும் "எங்களது இயந்தர பொறியியல் வகுப்பில் முட்டாள்களாக இருந்தனர்". ஆனால் அவர்களது தொழில் வாழ்க்கையைப் பற்றிக் கூறினால், "வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' என்பதே பாடமாக இருக்க வேண்டும் என்ற போக்கே செல்ல வேண்டிய பாதைக்கான போக்காகும்" என டிரிஹன் கூறினார்.[3]

தொழில்வாழ்க்கை [தொகு]

1973 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஜெயின் இந்தியாவில் IBMக்காக பணிபுரிந்தார். 1978 ஆம் ஆண்டில் அவர் ஹார்வர்டு தொழிற்பள்ளியில் MBA படித்த பிறகு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மெக்கென்சி & கோ.வில் சேர்ந்தார். ஆனால் 1980களின் முற்பகுதியில் இந்தியாவிற்குத் திரும்பினார். ஒரு மாதம் பெண்தேடிய பின்னர் அவரது பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த டிங்கு ஜெயின் என்பவரை திருமணம் செய்தார். பிறகு மெக்கன்சிக்காக வேலை செய்வதற்காக அமெரிக்காவிற்குத் திரும்பினார். ராபர்ட் பி. மைல்ஸின் புத்தகமான த வாரன் பஃபே CEO: சீக்ரெட்ஸ் ப்ரம் த பெர்க்ஷைர் ஹாதவே மேனேஜர்ஸ் ஐப் பொறுத்தவரை, அஜித் ஜெயின் இனி அமெரிக்கா திரும்பப் போவதில்லை எனக்கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி அங்கு செல்வதற்கு ஆர்வமாய் இருந்தார்.[8] 1986 ஆம் ஆண்டில் வாரன் பஃபேவுக்காக காப்பீடு செயல்திட்டங்களில் வேலை செய்வதற்காக மெக்கென்சியில் இருந்து ஜெயின் வெளியேறினார். அந்த நேரத்தில் அவருக்கு காப்பீட்டுத் தொழில் பற்றி சிறிதளவே தெரியும் எனக்கூறியிருந்தார்.[3]

கூடுதல் வாசிப்பு [தொகு]

  • மைல்ஸ், ராபர்ட் P., "த வாரன் பஃபே CEO: சீக்ரெட்ஸ் ப்ரம் த பெர்க்ஷைர் ஹாதவே மேனேஜர்ஸ்," ஜான் வைலி & சன்ஸ் இன்ங்., 2003.

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_ஜெயின்&oldid=1354692" இருந்து மீள்விக்கப்பட்டது