கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சூர்யா |

|
| இயற் பெயர் |
சரவணன் |
| பிறப்பு |
சூலை 23, 1975 (1975-07-23) (அகவை 37)[1]
சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
| தொழில் |
நடிகர் |
| நடிப்புக் காலம் |
1997 – முதல் |
| துணைவர் |
ஜோதிகா (2006) |
| பிள்ளைகள் |
தியா, தேவ் |
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.[3] மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.[4][2] நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார்.[5] இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் பிறந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை [தொகு]
திரைப்பட வாழ்க்கை [தொகு]
பொது வாழ்க்கை [தொகு]
பொதுச்சேவை மற்றும் தொண்டு [தொகு]
அகரம் எனும் பெயரில் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
நடித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு |
திரைப்படம் |
உடன் நடித்தவர்கள் |
இயக்குனர் |
பாத்திரத்தின் பெயர் |
| 2013 |
சிங்கம் 2 |
அனுஷ்கா செட்டி |
ஹரி |
துரைசிங்கம் |
| 2012 |
மாற்றான் |
காஜல் அகர்வால் |
கே. வி. ஆனந்த் |
விமலன், அகிலன் |
| 2011 |
ஏழாம் அறிவு |
சுருதி ஹாசன் |
ஏ. ஆர். முருகதாஸ் |
போதிதர்மர், அரவிந்த் |
| 2010 |
ரத்த சரித்திரம் |
பிரியா மணி |
ராம் கோபால் வர்மா |
சூரி |
| 2010 |
சிங்கம் |
அனுசுகா செட்டி |
ஹரி |
துரைசிங்கம் |
| 2009 |
ஆதவன் |
நயன்தாரா |
கே. எஸ். ரவிக்குமார் |
மாதவன்/ஆதவன் |
| அயன் |
தமன்னா |
கே. வி. ஆனந்த் |
தேவா |
| 2008 |
வாரணம் ஆயிரம் |
சமிரா, சிம்ரன், திவ்யா |
கௌதம் மேனன் |
சூர்யா, கிருஷ்ணன் |
| 2007 |
வேல் |
அசின் |
ஹரி |
வெற்றிவேல், வாசு |
| 2006 |
சில்லுனு ஒரு காதல் |
ஜோதிகா, பூமிகா சாவ்லா |
என். கிருஷ்ணா |
கௌதம் |
| ஜூன் R |
ஜோதிகா |
ரேவதி எஸ். வர்மா |
ராஜா |
| 2005 |
ஆறு |
திரிஷா |
ஹரி |
ஆறு |
| கஜினி |
அசின் |
ஏ. ஆர். முருகதாஸ் |
சஞ்சய் ராமசாமி |
| மாயாவி |
ஜோதிகா |
சிங்கம்புலி |
பாலையா |
| 2004 |
ஆய்த எழுத்து |
ஈஷா தியோல் |
மணிரத்னம் |
மைக்கேல் |
| பேரழகன் |
ஜோதிகா |
சசி சங்கர் |
சின்னா, கார்த்திக் |
| 2003 |
பிதாமகன் |
லைலா |
பாலா |
சக்தி |
| காக்க காக்க |
ஜோதிகா |
கௌதம் மேனன் |
அன்புச்செல்வன் |
| 2002 |
மௌனம் பேசியதே |
த்ரிஷா, லைலா |
அமீர் |
கௌதம் |
| ஸ்ரீ |
ஸ்ருதி |
நரசிம்மன் |
ஸ்ரீ |
| உன்னை நினைத்து |
சினேகா, லைலா |
விக்ரமன் |
சூர்யா |
| 2001 |
நந்தா |
லைலா |
பாலா |
நந்தா |
| பிரெண்ட்ஸ் |
விஜயலட்சுமி |
சித்திக் |
சந்த்ரு |
| 2000 |
உயிரிலே கலந்தது |
ஜோதிகா |
கே.ஆர். ஜெயா |
சூர்யா |
| 1999 |
பூவெல்லாம் கேட்டுப்பார் |
ஜோதிகா |
வசந்த் |
கிருஷ்ணா |
| பெரியண்ணா |
மானசா |
எஸ். ஏ. சந்திரசேகர் |
சூர்யா |
| சந்திப்போமா |
பிரீதா விஜயகுமார் |
ரமேஷ்குமார் |
சந்துரு |
| 1998 |
காதலே நிம்மதி |
கவிதா |
இந்திரன் |
சந்த்ரு |
| 1997 |
நேருக்கு நேர் |
சிம்ரன் |
வசந்த் |
சூர்யா |
வெளியிணைப்புகள் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Dashing Suriya's birthday bash – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-02-26.
- ↑ 2.0 2.1 "சூர்யா". தமிழ் திரை உலகம். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ சங்கர் (அக்டோபர் 30, 2012). "நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?". ஒன்இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "சூர்யா, சந்தியாவுக்கு பிலிம்பேர் விருது!". ஒன்இந்தியா (பெப்ரவரி 5, 2004). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "சூர்யா - ஜோதிகா செப். 11ல் திருமணம்!". ஒன்இந்தியா (ஆகத்து 6, 2006). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.