சத்யராஜ்
சத்யராஜ் (பிறப்பு- அக்டோபர் 3, 1954) புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ். இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜீ.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர்.
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார்.
லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதைநாயகனாக நடித்தார்.
தந்தை பெரியார் திரைப்படத்தில் இவர் இலவசமாக நடித்துள்ளார். தந்தை பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்[சான்று தேவை].
[தொகு] இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- நடிகன்
- வேதம் புதிது
- விக்ரம்
- வால்டர் வெற்றிவேல்
- மலபார் போலீஸ்
- பெரியார்
- ஒன்பது ரூபாய் நோட்டு
- குங்குமப்பொட்டுக் கவுண்டர்
- இங்கிலிஸ்காரன்
- சுயேட்சை எம்.எல்.ஏ
- வில்லாதி வில்லன்
- ஏற்போட்
- இரண்டு முகம்
- நண்பன்
|
|||||||||||||||||