அஜித் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஜித் குமார்
இயற் பெயர் அஜித் குமார்
பிறப்பு மே 1, 1971 (1971-05-01) (அகவை 40)
இந்தியாவின் கொடி ஹைதராபாத் , இந்தியா
நடிப்புக் காலம் 1992 - தற்போது
துணைவர் ஷாலினி

அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்ப்டங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986ல் உயர்தர கல்வியைப் பூர்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.

[தொகு] சர்ச்சைகள்

பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

[தொகு] தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார்

2011 ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை சில பல காரணங்களால் கலைத்தார்.

[தொகு] விருதுகள்

அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.

2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.

தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

[தொகு] இவர் நடித்த திரைப்படங்கள்

எண் ஆண்டு படம் தயாரிப்பு குறிப்புகள்
1 1992 பிரேம புஸ்தகம் தெலுங்கு (அறிமுகம்)
2 1993 அமராவதி சோழா கிரியேசன்ஸ் தமிழ் (அறிமுகம்)
3 1994 பாசமலர்கள் நட்புக்காக
4 பவித்ரா தனுஜா பிலிம்ஸ்
5 1995 ராஜாவின் பார்வையிலே நட்புக்காக
6 ஆசை ஆலயம்
7 1996 வான்மதி
8 கல்லூரி வாசல்
9 மைனர் மாப்பிள்ளை விக்டரி மூவீஸ்
10 காதல் கோட்டை சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
11 1997 நேசம் தனுஜா பிலிம்ஸ்
12 ராசி நிக் ஆர்ட்ஸ்
13 உல்லாசம் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன்
14 பகைவன் விஷ்வாஸ் பிலிம்ஸ்
15 ரெட்டை ஜடை வயசு பாக்யம் சினி கம்பைன்ஸ்
16 1998 காதல் மன்னன் வெங்கடேஸ்வராலயம்
17 அவள் வருவாளா ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ்
18 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நட்புக்காக
19 உயிரோடு உயிராக
20 1999 தொடரும் ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ்
21 உன்னை தேடி லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
22 வாலி நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
23 ஆனந்த பூங்காற்றே ரோஜா கம்பைன்ஸ்
24 நீ வருவாய் என சூப்பர் குட் பிலிம்ஸ் நட்புக்காக
25 அமர்க்களம் வெங்கடேஸ்வராலயம்
26 2000 முகவரி நிக் ஆர்ட்ஸ்
27 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வி. கிரியேஷன்ஸ்
28 உன்னை கொடு என்னை தருவேன் சூப்பர் குட் பிலிம்ஸ்
29 2001 தீனா விஜயம் சினி கம்பைன்ஸ்
30 சிட்டிசன் நிக் ஆர்ட்ஸ்
31 பூவெல்லாம் உன் வாசம் ஆஸ்கர் பிலிம்ஸ்
32 அசோகா டிரீம்ஸ் அன்லிமிடட் ஹிந்தி (அறிமுகம்), நட்புக்காக
33 சாம்ராட் அசோகா டிரீம்ஸ் அன்லிமிடட் நட்புக்காக
34 2002 ரெட் நிக் ஆர்ட்ஸ்
35 ராஜா செரீன் மூவி மேக்கர்ஸ்
36 வில்லன் நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
37 2003 என்னை தாலாட்ட வருவாளா நட்புக்காக
38 ஆஞ்சநேயா நிக் ஆர்ட்ஸ்
39 2004 ஜனா ரோஜா கம்பைன்ஸ்
40 அட்டகாசம் விஜயம் சினி கம்பைன்ஸ் இரட்டை வேடம்
41 2005 ஜீ நிக் ஆர்ட்ஸ்
42 2006 பரமசிவன் * கனகரத்னா மூவீஸ்
* சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன்
பி. வாசு இயக்கத்தில்
43 திருப்பதி ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
44 வரலாறு நிக் ஆர்ட்ஸ் மூன்று வேடங்கள்
45 2007 ஆழ்வார் ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ்
46 கிரீடம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
47 பில்லா 2007 ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் இரட்டை வேடம்
48 2008 ஏகன் ஐங்கரன் இண்டர்நேஷனல்
49 2010 அசல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இரட்டை வேடம், திரைக்கதை
50 2011 மங்காத்தா: உள்ளே வெளியே கிலௌடு நைன் மூவீஸ்
51 பில்லா 2 Suresh Balaji & IN Entertainment தயாரிப்பில் chakri-toleti இயக்கத்தில்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்