விக்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்ரம்
Chiyaan Vikram Raavan.jpg
விக்ரம்
இயற் பெயர் ஜான் விக்டர் கென்னடி
பிறப்பு ஏப்ரல் 17, 1966(1966-04-17)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர் சியான், கென்னி
நடிப்புக் காலம் 1990 - தற்போது
துணைவர் சைலஜா பாலகிருஷ்ணன்
இணையத்தளம் http://www.chiyaanvikram.com/

விக்ரம் (பிறப்பு. ஜான் விக்டர் கென்னடி, 17 ஏப்ரல், 1966) தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[1]

விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது.[2] அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து திரை விமர்சகளிடமிருந்து பெற்றார்.

விக்ரம் வெவ்வேறு சமூக நிகைச்சிகளை முன்னேர்த்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்[3]

இளமை[தொகு]

விக்ரம், வினோத் ராஜுக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள பரமக்குடியில், 17ம் ஏப்ரல் 1966 அன்று பிறந்தார்.[4] சிறு வயதிலே இவர் கென்னெடி என்னும் பெயர் மாற்றம் பெற்று கிறித்தவம் தழுவினர். இவரது தந்தையும் ஒரு நடிகர் ஆவார்.[4][4][5] விக்ரமுக்கு அனிதா என்கிற தமக்கையும் அர்விந்த் என்கிற அண்ணனும் உள்ளனர்.[6]

விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் M.B.A படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார்.[7] இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்தார். தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.[7][8][9]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா டீ, டீ வீ எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது M.B.A படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.

நடிகராக
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 என் காதல் கண்மணி வினோத் தமிழ்
1991 தந்துவிட்டேன் என்னை ராஜு தமிழ்
1992 காவல் கீதம் அசோக் தமிழ்
மீரா ஜீவா தமிழ்
1993 துருவம் பத்ரன் மலையாளம்
சிருன்னவுலா வரமிஸ்தாவா தெலுங்கு
மாபியா ஹரி ஷங்கர் மலையாளம்
1994 சைன்யம் கேடட் ஜீஜி மலையாளம்
பங்காரு குடும்பம் தெலுங்கு
புதிய மன்னர்கள் சத்யமூர்த்தி தமிழ்
1995 ஸ்ட்ரீட் மலையாளம்
அடால மஜாக்கா தெலுங்கு
1996 மயூர ந்ரிடம் மலையாளம்
அக்கா பாகுன்னாவா தெலுங்கு
இந்திரப்ரச்தம் பீட்டர் மலையாளம்
ராசபுத்திரன் மனு மலையாளம்
1997 இது ஒரு சிநேஹகதா ராய் மலையாளம்
உல்லாசம் தேவ் தமிழ்
குரல்ல ராஜ்ஜியம் தெலுங்கு
1998 கண்களின் வார்த்தைகள் தமிழ்
1999 ஹவுஸ் புள் ஹமீது தமிழ்
சேது சியான் (எ) சேது தமிழ் வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு)
2000 ரெட் இந்தியன்ஸ் மலையாளம்
2001 இந்த்ரியம் மலையாளம்
9 நேலாலு வீரேந்திரா தெலுங்கு
யூத் தெலுங்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம் தமிழ்
தில் கனகவேல் தமிழ்
காசி காசி தமிழ் வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002 ஜெமினி ஜெமினி தமிழ் வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது
சாமுராய் தியாகராஜன் தமிழ்
கிங் ராஜா சண்முகம் தமிழ்
2003 தூள் ஆறுமுகம் தமிழ்
காதல் சடுகுடு சுரேஷ் தமிழ்
சாமி ஆறுசாமி தமிழ் பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன் சித்தன் தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004 அருள் அருள்குமரன் தமிழ்
2005 அந்நியன் இராமானுசம்
அந்நியன்
ரெமோ
தமிழ் வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா அறிவுமதி தமிழ்
2008 பீமா சேகர் தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009 கந்தசாமி கந்தசாமி தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010 ராவணன் வீரையா தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
ராவன் தேவ் பிரதாப் சர்மா ஹிந்தி
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணன் தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2011 ராஜபாட்டை 'அனல்' முருகன் தமிழ்
2012 மெரினா தானாகவே (பாடல் விளம்பரத்தில்) தமிழ்
2012 தாண்டவம் சிவா தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2013 டேவிட் டேவிட் இந்தி, தமிழ்
2014 தமிழ் பிற்தயாரிப்பு வேலை
2014 இடம் மாறி இறங்கியவன்[10] தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பு[தொகு]

  1. "V for Vikram". தி இந்து. 1 April 2006. http://www.hindu.com/mp/2006/04/01/stories/2006040100220300.htm. பார்த்த நாள்: 7 November 2011. 
  2. Kumar, Ashok (20 August 2004). "Vikram, the Victor". The Hindu. பார்த்த நாள் 2011-07-31.
  3. "Vikram happy at being chosen UN Youth envoy". Deccan Herald (23 April 2010). பார்த்த நாள் 2011-01-07.
  4. 4.0 4.1 4.2 Sreedhar, Sridevi (4 June 2006). "Southern spice". The Telegraph. பார்த்த நாள் 2011-07-31.
  5. Narasimham, N. L (4 March 2005). "Still the regular guy". The Hindu. பார்த்த நாள் 2011-07-31.
  6. "Shruti Kamal snubs Venkat Prabhu". Behindwoods (19 October 2007). பார்த்த நாள் 2011-07-31.
  7. 7.0 7.1 Warrier, Shobha (17 August 2004). "Vikram's obsession gets its reward". Rediff. பார்த்த நாள் 2011-07-31.
  8. Sukumaran, Shradha (17 June 2010). "‘My blood group is B+ and that’s my motto’". Mint. பார்த்த நாள் 2011-07-31.
  9. Muthiah, Wani (28 July 2011). "Long, winding path to success for Vikram". The Star. பார்த்த நாள் 2011-07-31.
  10. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/vikrams-next-idam-maari-irangiyavan-with-vijay-milton.html

I

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்&oldid=1705624" இருந்து மீள்விக்கப்பட்டது