வேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை சிவன் கோயில்
வேலூர் பொற்கோயில்
நெடுஞ்சாலை 46- ல் உள்ள மேம்பாலம், வேலூர்

வேலூர், இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.

இந்த நகரில் பல கல்லூரிகள், பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது.

வேலூருக்கு அருகில் இரத்தனகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.

இரத்தினகிரி
இரத்தனகிரி பாலமுருகன் கோயில்

[தொகு] வரலாறு

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.

வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்&oldid=1371719" இருந்து மீள்விக்கப்பட்டது