பிலாய்
| பிலாய் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | சத்தீஸ்கர் |
| மாவட்டம் | துர்க் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 293 மீட்டர்கள்s (961 அடி) |
|
குறியீடுகள்
|
|
பிலாய் அல்லது பிலாய் நகர் (Bhilai, இந்தி:भिलाई) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலதில் துர்க் மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 753,837 ஆகும்.[1] 11 கிமீ தொலைவிலுள்ள துர்க்குடன் இணைந்த துர்க்-பிலாய் பெருநகரின் மக்கள்தொகை 2005ஆம் ஆண்டில் 1.062 மில்லியனாக இருந்தது.[2] மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு மேற்கே 25 kilometres (16 மை) தொலைவில் ஹௌரா–மும்பை இருப்புப் பாதையில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆறிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள பிலாய் எஃகு தொழிற்சாலை பொகாரோ எஃகுத் தொழிற்சாலைக்கு அடுத்த மிகப் பெரிய தொழிற்சாலையாகும். [3] 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்த ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா தொழிற்சாலை 1959ஆம் ஆண்டு சோவியத்-இந்திய கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. பிலாய்க்குத் தெற்கே சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளும் பள்ளிகளும் இந்த ஆலை நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு முதல் பிலாய் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்டுள்ளது.
போக்குவரத்து[தொகு]
இங்கு மூன்று தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன:
- பிலாய் (பிலாய் 3)
- பிலாய் பவர் அவுஸ்
- பிலாய் நகர்
அண்மையிலுள்ள துர்க் தொடர்வண்டி நிலையமும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல விரைவு தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
உள்ளூரில் டெம்போ எனப்படும் மூன்று சக்கர வண்டிகள் நம்பகமான போக்குவரத்து வசதிகளுக்குப் பன்படுத்தப்படுகின்றன.