தங்க நாற்கரச் சாலைத் திட்டம்
|
இல்லை தங்க நாற்கரச் சாலை |
|
இந்திய நெடுஞ்சாலை வரைபடத்தில் ஊதா வண்ணத்தில் தங்க நாற்கரச்சாலை வழித்தடம் காட்டப்பட்டுள்ளது |
|
| வழித்தட தகவல்கள் | |
|---|---|
| பராமரிப்பு இதேநெஆ | |
| நீளம்: | 5,846 கிமீ (3,633 மை) |
| தில்லி – கொல்கத்தா | |
| நீளம்: | 1,453 கிமீ (903 மை) |
| முக்கிய சந்திப்புகள்: |
தேநெ 2 |
| தில்லி – மும்பை | |
| நீளம்: | 1,419 கிமீ (882 மை) |
| முக்கிய சந்திப்புகள்: |
தேநெ 8, தேநெ 79A, தேநெ 79, தேநெ 76 |
| மும்பை – சென்னை | |
| நீளம்: | 1,290 கிமீ (800 மை) |
| முக்கிய சந்திப்புகள்: |
தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா), தேநெ 7, தேநெ 46 |
| கொல்கத்தா – சென்னை | |
| நீளம்: | 1,684 கிமீ (1,046 மை) |
| முக்கிய சந்திப்புகள்: |
தேநெ 6, தேநெ 60, தேநெ 5 |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு |
|
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1998ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. தற்போது 90 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் நிறைவடைந்து விட்டன. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கிமீ (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.
பொருளடக்கம் |
[தொகு] நன்மைகள்
- குறைவான பயணநேரம்
- குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் சிக்கனம்.
[தொகு] ஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்
முடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:
- ஆந்திர பிரதேசம் – 1,014 கிமீ (630 மை)
- உத்தர பிரதேசம் – 756 கிமீ (470 மை)
- ராஜஸ்தான் – 725 கிமீ (450 மை)
- கர்நாடகம் – 623 கிமீ (387 மை)
- மகாராஷ்டிரா – 487 கிமீ (303 மை)
- குஜராத் – 485 கிமீ (301 மை)
- ஒரிசா – 440 கிமீ (270 மை)
- மேற்கு வங்காளம் – 406 கிமீ (252 மை)
- தமிழ்நாடு – 342 கிமீ (213 மை)
- பீகார் – 204 கிமீ (127 மை)
- ஜார்க்கண்ட் – 192 கிமீ (119 மை)
- அரியானா – 152 கிமீ (94 மை)
- தில்லி – 25 கிமீ (16 மை)
- மொத்தம் – 5,846 கிமீ (3 மை)
[தொகு] தற்போதைய நிலவரம்
| எண் | வழி | நிறைவடைந்த நீளம் (கி.மீ) | மொத்த நீளம் (கி.மீ) | நிறைவு (சதவீத்ததில் (%) | இன்றைய நிலவரப்படி | ஆதாரம் |
|---|---|---|---|---|---|---|
| 1. | டெல்லி-கொல்கத்தா | 1,453 கிமீ (903 மை) | 1,453 கிமீ (903 மை) | 100 | ஆகஸ்ட்31, 2011 | [1] |
| 2. | மும்பை -சென்னை | 1,290 கிமீ (800 மை) | 1,290 கிமீ (800 மை) | 100 | ஆகஸ்ட் 31, 2011 | [2] |
| 3. | கொல்கத்தா-சென்னை | 1,667 கிமீ (1 மை) | 1,684 கிமீ (1 மை) | 98.99 | செப்டம்பர் 30, 2011 | [3] |
| 4. | டெல்லி-மும்பை | 1,419 கிமீ (882 மை) | 1,419 கிமீ (882 மை) | 100 | ஆகஸ்ட் 31, 2011 | [4] |
| Total | 5,829 கிமீ (3 மை) | 5,846 கிமீ (3 மை) | 99.70 | செப்டம்பர் 30, 2011 | [5] |
[தொகு] இணைக்கப்படும் நகரங்கள்
| தில்லி - கொல்கத்தா | தில்லி - மும்பை | சென்னை - மும்பை | கொல்கத்தா - சென்னை |
|---|---|---|---|
[தொகு] மேற்கோள்கள்
- Fast Lane to the Future, Don Belt. National Geographic, October, 2008.