பொற்கோயில்
| ஹர்மந்திர் சாஹிப் Harmandir Sahib |
|
|---|---|
| General information | |
| கட்டிடப் பாணி | சீக்கிய கட்டிடக்கலை |
| நகர் | அம்ரித்சர் |
| நாடு | |
| Construction started | டிசம்பர் 1585 |
| Completed | ஆகஸ்ட் 1604 |
| Design and construction | |
| Client | குரு அர்ஜன் தேவ், சீக்கியர்கள் |
| Architect | குரு அர்ஜன் தேவ் |
ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib[1], பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப்[2] (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3], என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும்.
சீக்கியர்களின் புனித நூலான குரு கரந்த் சாஹிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
வரலாறு [தொகு]
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள். சீக்கிய மதத்தின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார். அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள அம்ரித்சர் நகரமாகும். அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. ISBN 817380530X.
- ↑ Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ISBN 81-7380-569-5
- ↑ Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. ISBN 817380530X.