காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)
காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
பொருளடக்கம் |
தொகுதியில் அடங்கிய பகுதிகள் [தொகு]
- காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),
- வேலூர் வட்டம் (பகுதி)
செம்பாக்கம் (பேரூராட்சி)
- வாலாஜா வட்டம் (பகுதி)
வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.
சென்னை மாநிலம் [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | பி.ராஜகோபால்நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | ஜி.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
தமிழ்நாடு [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1971 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1977 | M.A.ஜெயவேலு | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1980 | N.A.பூங்காவனம் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
| 1984 | G.ரகுபதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1989 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1991 | K.M.கலைச்செல்வி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1996 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2001 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2006 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2011 | துரைமுருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் |