தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1984 இந்தியாவின் கொடி 1991
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
ஜனவரி 21, 1989
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Flag DMK.svg Flag of a tamil nadu political party.svg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக (ஜெ)
கூட்டணி திமுக அதிமுக
தலைவரின் தொகுதி துறைமுகம் போடிநாயக்கனூர்
வென்ற தொகுதிகள் 150 27
மாற்றம் +126 -
மொத்த வாக்குகள் 8,001,222 5,098,687
விழுக்காடு 29.34% 21.15%
மாற்றம் -7.66 -
மூன்றாம் கட்சி நான்காம் கட்சி
Flag of the Indian National Congress.svg Flag of a tamil nadu political party.svg
தலைவர் ஜி. கே. மூப்பனார் ஜானகி இராமச்சந்திரன்
கட்சி காங்கிரசு அதிமுக (ஜா)
தலைவரின் தொகுதி பாபநாசம் ஆண்டிப்பட்டி (தோல்வி)
வென்ற தொகுதிகள் 26 2
மாற்றம் -47 -
பெற்ற வாக்குகள் 4,780,714 2,214,965
விழுக்காடு 19.83% 9.19%
மாற்றம் +3.55 -


தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

தொகுதிகள்[தொகு]

1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

அரசியல் நிலவரம்[தொகு]

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜியார்) டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார்.[2][3][4]

வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. எந்த அதிமுக அணிக்கு ஆதரவளிப்பது என்ற பிரச்சனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜி. கே. மூப்பனார் தலைமையில் செயல்பட்ட இந்திரா காங்கிரசிலிருந்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக் கட்சி தொடங்கினார்.[5][6][7][8][9][10][10][11]

கூட்டணிகள்[தொகு]

1989 தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. இந்திரா காங்கிரசு, திமுக - ஜனதா தளம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக (ஜா)- தமிழக முன்னேற்ற முன்னணி, அதிமுக (ஜே) - இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இத்தேர்தலில் களத்திலிருந்த முக்கிய கூட்டணிகள்.[12][10][11]

தேர்தல் முடிவுகள்[தொகு]

ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. கீழிலுள்ள பட்டியலில் இந்த இரு தொகுதிகளின் முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[13][14][15]

திமுக இடங்கள் அதிமுக (ஜெ) இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 150 அதிமுக (ஜெ) 27 அதிமுக (ஜா) 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 இந்திய கம்யூனிஸ்ட் 3 காங்கிரசு 26
ஜனதா கட்சி 4 அதிமுக 2
சுயேட்சைகள் 5
மொத்தம் (1989) 169 மொத்தம் (1989) 30 மொத்தம் (1989) 35
மொத்தம் (1984) 24 மொத்தம் (1984) -- மொத்தம் (1984) 17

அதிமுகவின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட திமுக குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.[8]

ஆட்சி அமைப்பு[தொகு]

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
  2. Kaliyaperumal, M (1992). The office of the speaker in Tamilnadu : A study. Madras University. பக். 100. http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4880/5/MAU-1992-055-4.pdf. 
  3. "The Tamil Nadu Legislative Assembly, XVII Assembly Third Session (12 November - 22 December, 1986)". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2010-01-05.
  4. "The Tamil Nadu Legislative Assembly, VIII Assembly Sixth Session (27-28 January, 1986)". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2010-01-05.
  5. The politics of governor's office, The Business Line - 03 November 2003
  6. A political agenda, Frontline - 15 November 1997
  7. All For You, Amma Outlook Magazine 13 March 1996
  8. 8.0 8.1 Raising The Dead Outlook Magazine 24 January 1996
  9. Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions. SAGE. பக். 235–236. ISBN 0761932372. http://books.google.co.uk/books?id=pjzyK_gEBcwC. 
  10. 10.0 10.1 10.2 Subramaniamn, TS (2004-07-30). "Celluloid connections". Frontline. http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm. பார்த்த நாள்: 2009-01-21. 
  11. 11.0 11.1 Kantha, Sachi Sri (2008-11-09). "Book Review: Autobiography of Actor-Politician Sivaji Ganesan". Sangam. http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155&print=true. பார்த்த நாள்: 2009-01-21. 
  12. South India Election Will Test Political Strength of Gandhi, The New york Times 21 January 1989
  13. Ganesan, P. C. (1996). Daughter of the South: biography of Jayalalitha. Sterling Publishers. பக். 57. ISBN 8120718798, ISBN 9788120718791. http://books.google.com/books?client=firefox-a&cd=3&id=UsNuAAAAMAAJ&dq=1989+marungapuri+madurai+east&q=marungapuri+#search_anchor. 
  14. The Journal of parliamentary information, Volume 35. Lok Sabha Secretariat. 1996. பக். 228. http://books.google.com/books?id=59ONAAAAMAAJ&q=1989+marungapuri&dq=1989+marungapuri&client=firefox-a&cd=2. 
  15. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009

வெளி இணைப்பு[தொகு]

1989 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்