தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
| ‹ 2006 |
||||
| தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 | ||||
|---|---|---|---|---|
| தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||
| 13 ஏப்ரல் 2011[1] | ||||
| முதல் கட்சி | இரண்டாம் கட்சி | |||
| தலைவர் | ஜெ. ஜெயலலிதா | மு. கருணாநிதி[2] | ||
| கட்சி | அஇஅதிமுக | திமுக | ||
| கூட்டணி | அதிமுக+ | திமுக+ | ||
| தலைவரானது | 1989 முதல் | பெப்ரவரி 1969 முதல்[3] | ||
| தலைவரின் தொகுதி | திருவரங்கம்[4] | திருவாரூர்[5] | ||
| முந்தைய தேர்தல் | 69 இடங்கள், 39.9% | 163 இடங்கள், 44.8% | ||
| வென்ற தொகுதிகள் | 203 | 31 | ||
| மாற்றம் | ||||
| மொத்த வாக்குகள் | ||||
| விழுக்காடு | 51.8% | 39.44% | ||
| 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (சட்டமன்றத் தொகுதிகளின் படி) | ||||
|
முந்தைய முதல்வர் |
||||
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார்
பொருளடக்கம் |
தொகுதிகள் [தொகு]
இது 2009 ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப்பின் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தலில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் 234 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 188 பொதுத் தொகுதிகள், 46 தனித் தொகுதிகள்.[6]
பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு தனித் தொகுதிகள்: ஏற்காடு, சேந்தமங்கலம். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (பட்டியல் சாதியினர்) பின்வரும் 44 தனித் தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்தன. பொன்னேரி, பூந்தமல்லி, திரு. வி. க. நகர், எழும்பூர், திருப்பெரும்புதூர், செய்யாறு, மதுராந்தகம், அரக்கோணம், கிழ்வாய்தின்ன குப்பம், குடியாத்தம், ஊத்தங்கரை, அரூர், செங்கம், வந்தவாசி, திண்டிவனம், வானூர், கள்ளக்குறிச்சி, கங்கவல்லி, ஆத்தூர் (சேலம்), இராசிபுரம், தாராபுரம், பவானி சாகர், கூடலூர் (நீலகிரி), அவினாசி, வால்பாறை, நிலக்கோட்டை, கிருஷ்ணராயபுரம், துறையூர், பெரம்பலூர், திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், சீர்காழி, கீழ்வேலூர், திருத்துறைப்பூண்டி, திருவிடைமருதூர், கந்தர்வக்கோட்டை, மானாமதுரை, சோழவந்தான், பெரியகுளம், திருவில்லிப்புத்தூர், பரமக்குடி, ஓட்டப்பிடாரம், சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர்.
தேர்தல் அட்டவணை [தொகு]
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு
| தேதி | நிகழ்வு |
|---|---|
| மார்ச் 19 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
| மார்ச் 26 | மனுத்தாக்கல் முடிவு |
| மார்ச் 28 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
| மார்ச் 30 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
| ஏப்ரல் 13 | வாக்குப்பதிவு |
| மே 13 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
பின்புலம் [தொகு]
தேர்தல் ஆணையம் [தொகு]
இந்தத் தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையராக குரேசியும், தமிழகத் தேர்தல் ஆணையராக பிரவீன்குமாரும் இருந்தனர். தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் தனது கெடுபிடிகளைக் கடுமையாக்கியது. குறிப்பாக சுவர் விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. கட்அவுட்கள் எங்கும் காணப்படவில்லை. ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கான 16 இலட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு அதற்கான கணக்குகளையும் முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அவ்வாறு கணக்கு காட்டாதவர்கள் வெற்றிபெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கபடும் என்று எச்சரித்துள்ளது. வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தேர்தல் ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் நிகழ்பட பதிவுக் கருவிகளுடன் சென்று படம்பிடித்தனர். குறிப்பாக வேட்பாளர்கள் பேசுவதையும், செலவுகளையும் கண்காணித்தனர். கட்சிக்காரர்களுக்கு அல்லது பிரச்சாரத்தில் வரும் தொண்டர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதையும் படம் படித்தனர். சிற்றுண்டிகளில் 100 சாப்பாடு பொட்டலங்களுக்கு மேல் கொடுத்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் எங்கும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத பணம் 54 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது. வங்கிகளில் ஒருநாளைக்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். குறிப்பாக வன்முறை இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தேறியது. வாக்களிக்க வாக்காளர் அட்டை அவசியமின்றி தேர்தல் ஆணையம் வழங்கிய சீட்டு மட்டுமே போதும் என்று அறிவித்திருந்ததும் வாக்காளர்களுக்கு வசதியாய் இருந்தது. வாக்களித்தவர்கள் 78 சதவீதமாகும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை திமுக தலைவர் எதிர்த்தார். கெடுபிடிகள் நெருக்கடி நிலை காலத்தை நினைவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கு சாதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
முக்கிய பிரச்சினைகள் [தொகு]
- நலம் - ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு
- கல்வி - இலவச கணினி, இலவச மிதிவண்டி
- அரசாட்சி - ஊழல்
- இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
- தமிழ்நாட்டு மீனவர் படுகொலைகள்
- தேர்தல் வன்முறை
-
- * அழகிரி தேர்தல் அலுவர்களைத் தாக்கியது
- * விசயகாந் தொண்டரைத் தாக்கியது
கூட்டணிகளும் கட்சிகளும் [தொகு]
2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன. திமுக தலைமையிலான கூட்டணியில காங்கிரசு, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முசுலீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை இடம் பெற்றிருந்தன.
இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜக, ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்த மூன்றாவது கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது. வேறு சில சிறிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலினால் முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது; மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்தது.[7]
| விக்கிசெய்திகளில் தொடர்புடைய செய்திகள்: |
முடிவுகள் [தொகு]
ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 77.8 % வாக்காளர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் இதுவே மிக அதிகமான வாக்குபதிவு சதவிகிதம்.[8] வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
| கூட்டணி | கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வாக்கு % |
| அதிமுக கூட்டணி - 203 |
அதிமுக [9][10] | 160 | 146 | |
| தேமுதிக | 41 | 29 | ||
| சிபிஐ[11] | 10 | 9 | ||
| சிபிஎம்[11] | 12 | 10 | ||
| மனிதநேய மக்கள் கட்சி | 3 | 2 | ||
| புதிய தமிழகம் | 2 | 2 | ||
| சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார்)[12] | 2 | 2 | ||
| மூவேந்தர் முன்னேற்ற முன்னணி | 1 | |||
| ஃபார்வார்டு ப்ளாக் | 1 | 1 | ||
| இந்திய குடியரசுக் கட்சி (தமிழரசன்) | 1 | 1 | ||
| தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை[13] | 1 | 1 | ||
| மொத்தம் | 234 | 203 | ||
| திமுக கூட்டணி -31[14][15] |
திமுக [16][17][18] | 119 | 23 | |
| காங்கிரசு[19] | 63 | 5 | ||
| பாமக[20] | 30 | 3 | ||
| விடுதலைச் சிறுத்தைகள் [21] | 10 | 0 | ||
| கொங்கு முன்னேற்றக் கழகம் [22] | 7 | 0 | ||
| இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்[23][24] | 3 | 0 | ||
| மூவேந்தர் முன்னேற்றக் கழகம்[23] [25] | 1 | 0 | ||
| பெருந்தலைவர் மக்கள் கட்சி[23][26] [27] | 1 | 0 | ||
| மொத்தம் | 234 | 31 | ||
| பாஜக கூட்டணி[28] |
பாரதிய ஜனதா கட்சி | 0 | ||
| ஜனதா கட்சி (சுப்ரமணியன் சாமி) | 10[29] | 0 | ||
| ஐக்கிய ஜனதா தளம் [30] | 5 | 0 | ||
| மொத்தம் | 234 | 0 | ||
| தனித்துப் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் |
நாடாளும் மக்கள் கட்சி | |||
| பகுஜன் சமாஜ் கட்சி | ||||
| சுயேச்சைகள் | ||||
| மக்கள் சக்தி கட்சி | 36 [31] [32] |
தொகுதிவாரியாக முடிவுகள் [தொகு]
அகர வரிசைப்படி தொகுதிகளின் பட்டியல்[33]:
| வரிசை எண் |
தொகுதி | முதல் கட்சி | வேட்பாளர் | இரண்டாம் கட்சி | வேட்பாளர் | வாக்கு வித்தியாசம் |
| 1 | அணைக்கட்டு | பா.ம.க | மா.கலையரசு | தே.மு.தி.க | வி. பி. வேலு | 27903 |
| 2 | அண்ணா நகர் | அ.தி.மு.க | கோகுல இந்திரா | இ.தே.கா | வி. கே. அறிவழகன் | 36590 |
| 3 | அந்தியூர் | அ.தி.மு.க | எஸ். எஸ். ரமணீதரன் | தி.மு.க | என். கே. கே. பி. ராஜா | 25254 |
| 4 | அம்பத்தூர் | அ.தி.மு.க. | எஸ். வேதாச்சலம் | தி.மு.க | ப. ரங்கநாதன் | 22717 |
| 5 | அம்பாசமுத்திரம் | அ.தி.மு.க. | இசக்கி சுப்பையா | தி.மு.க | இரா. ஆவூடையப்பன் | 24609 |
| 6 | அரக்கோணம் | அ.தி.மு.க | சு. ரவி | வி.சி | செல்லப்பாண்டியன் | 26237 |
| 7 | அரவக்குறிச்சி | தி.மு.க. | கே. சி. பழனிசாமி | அ.தி.மு.க | வி. செந்தில்நாதன் | 4541 |
| 8 | அரியலூர் | அ.தி.மு.க | துரை மணிவேல் | இ.தே.கா | பாளை தி அமரமூர்த்தி | 17820 |
| 9 | அருப்புக்கோட்டை | அ.தி.மு.க. | வைகைச் செல்வன் | தி.மு.க | சாத்தூர் ராமச்சந்திரன் | 10638 |
| 10 | அரூர் | சி.பி.எம் | டில்லிபாபு | வி.சி | பொ. மு. நந்தன் | 26503 |
| 11 | அறந்தாங்கி | அ.தி.மு.க | மு. ராஜநாயகம் | இ.தே.கா | திருநாவுக்கரசர் | 16656 |
| 12 | அவினாசி | அ.தி.மு.க | ஏ. ஏ. கருப்பசாமி | இ.தே.கா | ஏ. ஆர். நடராஜன் | 61411 |
| 13 | ஆண்டிப்பட்டி | அ.தி.மு.க. | தங்க. தமிழ்ச்செல்வன் | தி.மு.க. | எல். மூக்கையா | 21031 |
| 14 | ஆத்தூர் - சேலம் | அ.தி.மு.க | எஸ். மாதேஸ்வரன் | இ.தே.கா | அர்த்தநாரி | 29856 |
| 15 | ஆத்தூர் - திண்டுக்கல் | தி.மு.க. | இ. பெரியசாமி | தே.மு.தி.க | எஸ். ஆர். கே. பாலசுப்ரமணியன் | 53932 |
| 16 | ஆம்பூர் | ம.ம.க | அஸ்லம் பாட்ஷா | இ.தே.கா | விஜய் இளஞ்செழியன் | 5091 |
| 17 | ஆயிரம் விளக்கு | அ.தி.மு.க | பா. வளர்மதி | தி.மு.க. | அசன் முகமது ஜின்னா | 7592 |
| 18 | ஆரணி | தே.மு.தி.க | ஆர். மோகன் (எ) மோகனம் | தி.மு.க. | ஆர். சிவானந்தம் | 7966 |
| 19 | ஆற்காடு | அ.தி.மு.க | ஆர். சீனிவாசன் | பா.ம.க | இளவழகன் | 19253 |
| 20 | ஆலங்குடி | அ.தி.மு.க | கு. ப. கிருஷ்ணன் | பா.ம.க | மரு. சுப. அருள்மணி | 5127 |
| 21 | ஆலங்குளம் | அ.தி.மு.க. | பி. ஜி. ராஜேந்திரன் | தி.மு.க | பூங்கோதை ஆலடி அருணா | 299 |
| 22 | ஆலந்தூர் | தே.மு.தி.க | பண்ருட்டி இராமச்சந்திரன் | இ.தே.கா | காயத்ரி தேவி | 5754 |
| 23 | ஆவடி | அ.தி.மு.க | அப்துல் ரஹீம் | இ.தே.கா | தாமோதரன் | 43238 |
| 24 | இராசிபுரம் | அ.தி.மு.க | தனபால் | தி.மு.க | வி. பி. துரைசாமி | 24717 |
| 25 | இராஜபாளையம் | அ.தி.மு.க | கே. கோபால்சாமி | தி.மு.க | தங்கபாண்டியன் | 21432 |
| 26 | இராமநாதபுரம் | ம.ம.க | ஜவாஹிருல்லா | இ.தே.கா | கே. என். அசன் அலி | 15757 |
| 27 | இராயபுரம் | அ.தி.மு.க | டி. ஜெயக்குமார் | இ.தே.கா | மனோகர் | 21372 |
| 28 | இரிஷிவந்தியம் | தே.மு.தி.க | விஜயகாந்த் | இ.தே.கா | சிவராஜ் | 30795 |
| 29 | இலால்குடி | தி.மு.க | அ. சவுந்திரபாண்டியன் | தே.மு.தி.க | ஏ. டி. செந்துரேசுவரன் | 7155 |
| 30 | ஈரோடு கிழக்கு | தே.மு.தி.க | சந்திரகுமார் | தி.மு.க | சு.முத்துசாமி | 10644 |
| 31 | ஈரோடு மேற்கு | அ.தி.மு.க | கே. வி. ராமலிங்கம் | இ.தே.கா | யுவராஜ் | 37868 |
| 32 | உசிலம்பட்டி | பார்வார்டு பிளாக்கு | கதிரவன் | தி.மு.க. | எஸ்.ஓ.ராமசாமி | 15320 |
| 33 | உடுமலைப்பேட்டை | அ.தி.மு.க | பொள்ளாச்சி வி. ஜெயராமன் | கொ.மு.க | இளம்பரிதி | 44560 |
| 34 | உதகமண்டலம் | அ.தி.மு.க | புத்தி சந்திரன் | இ.தே.கா | கணேஷ் | 7545 |
| 35 | உத்திரமேரூர் | அ.தி.மு.க | வாலாஜாபாத் பா. கணேசன் | தி.மு.க. | பொன். குமார் | 13766 |
| 36 | உளுந்தூர்ப்பேட்டை | அ.தி.மு.க | குமரகுரு | வி.சி | முகமது யூசுப் | 53508 |
| 37 | ஊத்தங்கரை | அ.தி.மு.க | மனோரஞ்சிதம் நாகராஜ் | வி.சி | முனியம்மாள் கனியமுதன் | 39158 |
| 38 | எடப்பாடி | அ.தி.மு.க | கே. பழனிச்சாமி | பா.ம.க. | கார்த்திக் | 34738 |
| 39 | எழும்பூர் | தே.மு.தி.க | கே. நல்லதம்பி | தி.மு.க. | பரிதி. இளம்வழுதி | 202 |
| 40 | ஏற்காடு | அ.தி.மு.க | செ. பெருமாள் | தி.மு.க. | சி.தமிழ்செல்வன் | 37582 |
| 41 | ஒட்டன்சத்திரம் | தி.மு.க. | அர.சக்கரபாணி | அ.தி.மு.க | பி. பாலசுப்பிரமணி | 14933 |
| 42 | ஒரத்தநாடு | அ.தி.மு.க | ஆர். வைத்திலிங்கம் | தி.மு.க. | மகேஷ் கிருஷ்ணசாமி | 32644 |
| 43 | ஓசூர் | இ.தே.கா | கோபிநாத் | தே.மு.தி.க | எஸ். ஜான்சன் | 14152 |
| 44 | ஓட்டப்பிடாரம் | பு.த | க. கிருஷ்ணசாமி | தி.மு.க | சி. ராஜா | 25126 |
| 45 | ஓமலூர் | அ.தி.மு.க | பல்பாக்கி கிருஷ்ணன் | பா.ம.க. | தமிழரசு | 46544 |
| 46 | கங்கவள்ளி | தே.மு.தி.க | ஆர். சுபா | தி.மு.க. | சின்னத்துரை | 13465 |
| 47 | கடலூர் | அ.தி.மு.க | மு. சி. சம்பத் | தி.மு.க. | இள. புகழேந்தி | 33678 |
| 48 | கடையநல்லூர் | அ.தி.மு.க | பி. செந்தூர்பாண்டியன் | இ.தே.கா | பீட்டர் அல்போன்ஸ் | 16086 |
| 49 | கந்தர்வக்கோட்டை | அ.தி.மு.க | ந. சுப்பிரமணியன் | தி.மு.க | கவிதைப்பித்தன் | 19699 |
| 50 | கன்னியாகுமரி | அ.தி.மு.க. | கே. டி. பச்சைமால் | தி.மு.க | என்.சுரேஷ் ராஜன் | 17804 |
| 51 | கம்பம் | தி.மு.க. | என்.ராமகிருஷ்ணன் | தே.மு.தி.க | முருகேசன் | 12168 |
| 52 | கரூர் | அ.தி.மு.க | வி. செந்தில்பாலாஜி | இ.தே.கா | ஜோதிமணி | 44145 |
| 53 | கலசப்பாக்கம் | அ.தி.மு.க | அக்ரி கிருஷ்ணமூர்த்தி | இ.தே.கா | விஜயக்குமார் | 38234 |
| 54 | கள்ளக்குறிச்சி | அ.தி.மு.க | பா. அழகுவேல் | வி.சி | பாவரசு | 59998 |
| 55 | கவுண்டம்பாளையம் | அ.தி.மு.க | ஆறுக்குட்டி | தி.மு.க | டி. பி. சுப்ரமணியன் | 69260 |
| 56 | காங்கேயம் | அ.தி.மு.க | எஸ். எஸ். என். நடராஜ் | இ.தே.கா | விடியல் எஸ் சேகர் | 41765 |
| 57 | காஞ்சிபுரம் | அ.தி.மு.க | வி. சோமசுந்தரம் | பா.ம.க. | உலகரட்சகன் | 25717 |
| 58 | காட்டுமன்னார்கோயில் | அ.தி.மு.க | என். முருகுமாறன் | வி.சி | டி. ரவிக்குமார் | 31725 |
| 59 | காட்பாடி | தி.மு.க | துரைமுருகன் | அ.தி.மு.க | அப்பு (எ) ராதாகிருஷ்ணன் | 2973 |
| 60 | காரைக்குடி | அ.தி.மு.க | சோழன் சித. பழனிச்சாமி | இ.தே.கா | கே.ஆர். ராமசாமி | 18900 |
| 61 | கிணத்துக்கடவு | அ.தி.மு.க | செ. தாமோதரன் | தி.மு.க | மு. கண்ணப்பன் | 30266 |
| 62 | கிருஷ்ணகிரி | அ.தி.மு.க | கே. பி. முனுசாமி | இ.தே.கா | சையத் கியாஸ் உல்ஹக் | 29097 |
| 63 | கிருஷ்ணராயபுரம் | அ.தி.மு.க | எஸ். காமராஜ் | தி.மு.க. | பெ. காமராஜ் | 22509 |
| 64 | கிள்ளியூர் | இ.தே.கா | ஜான் ஜேக்கப் | பா.ஜ.க | டி. சந்திரகுமார் | 24486 |
| 65 | கீழ்பெண்ணாத்தூர் | அ.தி.மு.க | அரங்கநாதன் | தி.மு.க | கு. பிச்சாண்டி | 4081 |
| 66 | கீழ்வேளூர் | சி.பி.எம் | நாகை மாலி | தி.மு.க. | உ. மதிவாணன் | 724 |
| 67 | கீழ்வைத்தனன் குப்பம் | இ.கு.க | சே. கு. தமிழரசன் | தி.மு.க | கே. சீத்தாராமன் | 9760 |
| 68 | குடியாத்தம் | சி.பி.ஐ | கு. லிங்கமுத்து | தி.மு.க | க. ராஜமார்த்தாண்டன் | 5842 |
| 69 | குன்னம் | தி.மு.க. | எஸ். எஸ். சிவசங்கர் | தே.மு.தி.க | துரை காமராஜ் | 22957 |
| 70 | குன்னூர் | தி.மு.க. | கா. ராமச்சந்திரன் | சி.பி.ஐ | ஏ. பெள்ளி | 9292 |
| 71 | குமாரபாளையம் | அ.தி.மு.க | பி. தங்கமணி | தி.மு.க | செல்வராஜ் | 26887 |
| 72 | கும்பகோணம் | தி.மு.க | க. அன்பழகன் | அ.தி.மு.க | இராம. ராமநாதன் | 1272 |
| 73 | கும்மிடிப்பூண்டி | தே.மு.தி.க | சி. எச். சேகர் | பா.ம.க | கே. என். சேகர் | 29101 |
| 74 | குறிஞ்சிப்பாடி | அ.தி.மு.க | சொரத்தூர் இராஜேந்திரன் | தி.மு.க. | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | 23848 |
| 75 | குளச்சல் | இ.தே.கா | ஜே. ஜி. பிரின்ஸ் | அ.தி.மு.க | பி. லாரன்ஸ் | 11821 |
| 76 | குளித்தலை | அ.தி.மு.க | பாப்பா சுந்தரம் | தி.மு.க. | இரா. மாணிக்கம் | 22473 |
| 77 | கூடலூர் | தே.மு.தி.க | எஸ். செல்வராஜ் | தி.மு.க | திராவிடமணி | 27374 |
| 78 | கொளத்தூர் | தி.மு.க. | மு. க. ஸ்டாலின் | அ.தி.மு.க | சைதை துரைசாமி | 2819 |
| 79 | கோபிச்செட்டிப்பாளையம் | அ.தி.மு.க | கே. ஏ. செங்கோட்டையன் | கொ.மு.க | சிவராஜ் | 41912 |
| 80 | கோயம்புத்தூர் தெற்கு | அ.தி.மு.க | சேலஞ்சர் துரை | தி.மு.க. | பொங்கலூர் நா.பழனிசாமி | 27796 |
| 81 | கோயம்புத்தூர் வடக்கு | அ.தி.மு.க | தா. மலரவன் | தி.மு.க. | எம். வீரகோபால் | 2879 |
| 82 | கோவில்பட்டி | அ.தி.மு.க | கடம்பூர் செ. ராஜு | பா.ம.க | கே. ராமசந்திரன் | 26480 |
| 83 | சங்ககிரி | அ.தி.மு.க | விஜயலட்சுமி பழனிச்சாமி | தி.மு.க | வீரபாண்டி ஆறுமுகம் | 35079 |
| 84 | சங்கரன்கோவில் | அ.தி.மு.க | சொ. கருப்பசாமி | தி.மு.க | மு. உமாமகேஸ்வரி | 10395 |
| 85 | சங்கராபுரம் | அ.தி.மு.க | ப. மோகன் | தி.மு.க. | தா. உதயசூரியன் | 12198 |
| 86 | சாத்தூர் | அ.தி.மு.க | ஆர். பி. உதயக்குமார் | தி.மு.க | அ. கடற்கரை ராஜ் | 29345 |
| 87 | சிங்காநல்லூர் | அ.தி.மு.க | ஆர். சின்னச்சாமி | இ.தே.கா | மயூரா ஜெயக்குமார் | 66972 |
| 88 | சிதம்பரம் | சி.பி.எம் | கே. பாலகிருஷ்ணன் | மு.மூ.க | ஸ்ரீதர் வாண்டையார் | 2879 |
| 89 | சிவகங்கை | சி.பி.ஐ | எஸ். குணசேகரன் | இ.தே.கா | வி. ராஜசேகரன் | 4382 |
| 90 | சிவகாசி | அ.தி.மு.க. | கே. டி. ராஜேந்திர பாலாஜி | தி.மு.க | வனராஜா | 35334 |
| 91 | சீர்காழி | அ.தி.மு.க | ம. சக்தி | வி.சி | உஞ்சை அரசன் | 27379 |
| 92 | சூலூர் | தே.மு.தி.க | கே. தினகரன் | கொ. மு. க | ஈ. ஆர். ஈஸ்வரன் | 27532 |
| 93 | செங்கம் | தே.மு.தி.க | டி. சுரேஷ் குமார் | இ.தே.கா | செல்வப்பெருந்தகை | 11497 |
| 94 | செங்கல்பட்டு | தே.மு.தி.க | டி. முருகேசன் | பா.ம.க | வி. கே. ரங்கசாமி | 291 |
| 95 | செஞ்சி | பா.ம.க. | கணேஷ் குமார் | தே.மு.தி.க | சிவலிங்கம் | 1811 |
| 96 | செய்யாறு | அ.தி.மு.க | முக்கூர் சுப்பிரமணியன் | இ.தே.கா | விஷ்ணு பிரசாத் | 25463 |
| 97 | செய்யூர் | அ.தி.மு.க | வி. எஸ். ராஜி | வி.சி | பார்வேந்தன் | 26584 |
| 98 | சேந்தமங்கலம் | தே.மு.தி.க | சாந்தி ராஜமாணிக்கம் | தி.மு.க | பொன்னுச்சாமி | 2805 |
| 99 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | தி.மு.க | ஜெ. அன்பழகன் | ம.ம.க | எம். தமிமுன் அன்சாரி | 9203 |
| 100 | சேலம்-தெற்கு | அ.தி.மு.க | செல்வராஜ் | தி.மு.க | எஸ். ஆர். சிவலிங்கம் | 60215 |
| 101 | சேலம்-மேற்கு | அ.தி.மு.க | ஜி. வெங்கடாஜலம் | தி.மு.க | இரா. ராஜேந்திரன் | 27661 |
| 102 | சேலம்-வடக்கு | தே.மு.தி.க | மோகன்ராஜ் | இ.தே.கா | ஜெய் பிரகாஷ் | 29365 |
| 103 | சைதாப்பேட்டை | அ.தி.மு.க. | ஜி. செந்தமிழன் | தி.மு.க | மு. முகேஷ்குமார் | 12071 |
| 104 | சோளிங்கநல்லூர் | அ.தி.மு.க | கே. பி. கந்தன் | வி.சி | எஸ். எஸ். பாலாஜி | 66972 |
| 105 | சோளிங்கர் | தே.மு.தி.க | பி. ஆர். மனோகர் | சுயேச்சை | முனிரத்தினம் | 9038 |
| 106 | சோழவந்தான் | அ.தி.மு.க | எம். வி. கருப்பையா | பா.ம.க | எம். இளஞ்செழியன் | 36608 |
| 107 | ஜெயங்கொண்டம் | பா.ம.க. | செ. குரு | அ.தி.மு.க | பா. இளவழகன் | 15138 |
| 108 | ஜோலார் பேட்டை | அ.தி.மு.க | கே. சி. வீரமணி | பா.ம.க | பொன்னுசாமி | 22936 |
| 109 | தஞ்சாவூர் | அ.தி.மு.க | ரங்கசாமி | தி.மு.க. | எஸ். என். எம். உபயதுல்லா | 7329 |
| 110 | தர்மபுரி | தே.மு.தி.க | ஏ. பாஸ்கர் | பா.ம.க. | பி.சந்தானமூர்த்தி | 4043 |
| 111 | தளி | சி.பி.ஐ | டி. ராமச்சந்திரன் | தி.மு.க | ஒய். பிரகாஷ் | 6435 |
| 112 | தாம்பரம் | அ.தி.மு.க | டி. கே. எம். சின்னையா | தி.மு.க | எஸ். ஆர். ராஜா | 13984 |
| 113 | தாராபுரம் | அ.தி.மு.க | கே. பொன்னுச்சாமி | தி.மு.க | ரா. ஜெயந்தி | 15025 |
| 114 | திட்டக்குடி | தே.மு.தி.க | தமிழழகன் | வி.சி | சிந்தனைச் செல்வன் | 12642 |
| 115 | திண்டிவனம் | அ.தி.மு.க | அரிதாஸ் | பா.ம.க | சங்கர் | 15537 |
| 116 | திண்டுக்கல் | சி.பி.எம் | கே. பாலபாரதி | பா.ம.க | பால் பாஸ்கர் | 39115 |
| 117 | தியாகராய நகர் | அ.தி.மு.க | வி. பி. கலைராஜன் | இ.தே.கா | செல்லக்குமார் | 32462 |
| 118 | திரு.வி.க நகர் | அ.தி.மு.க | வ. நீலகண்டன் | இ.தே.கா | நடேசன் | 29341 |
| 119 | திருக்கோயிலூர் | தே.மு.தி.க | எல். வெங்கடேசன் | தி.மு.க | மு. தங்கம் | 8791 |
| 120 | திருச்சிராப்பள்ளி கிழக்கு | அ.தி.மு.க | ஆர். மனோகரன் | தி.மு.க | அன்பில் பெரியசாமி | 20626 |
| 121 | திருச்சிராப்பள்ளி மேற்கு | அ.தி.மு.க | மரியம்பிச்சை | தி.மு.க | கே. என். நேரு | 7179 |
| 122 | திருச்சுழி | தி.மு.க | தங்கம் தென்னரசு | அ.தி.மு.க | இசக்கி முத்து | 19952 |
| 123 | திருச்செங்கோடு | தே.மு.தி.க | சம்பத் குமார் | இ.தே.கா | சுந்தரம் | 23945 |
| 124 | திருச்செந்தூர் | தி.மு.க | அனிதா ராதாகிருஷ்ணன் | அ.தி.மு.க | பி. ஆர். மனோகரன் | 640 |
| 125 | திருத்தணி | தே.மு.தி.க | அருண் சுப்ரமணியம் | இ.தே.கா | இ. எஸ். எஸ். ராமன் | 23930 |
| 126 | திருத்துறைப்பூண்டி | சி.பி.ஐ | கே. உலகநாதன் | இ.தே.கா | செல்லத்துரை | 22287 |
| 127 | திருநெல்வேலி | அ.தி.மு.க | நயினார் நாகேந்திரன் | தி.மு.க | ஏ. எல். எஸ். லட்சுமணன் | 38491 |
| 128 | திருப்பத்தூர் | அ.தி.மு.க | கே. ஜி. ரமேஷ் | தி.மு.க | எஸ். ராஜேந்திரன் | 21792 |
| 129 | திருப்பத்தூர்,சிவகங்கை | தி.மு.க | கே. என். பெரியகருப்பன் | அ.தி.மு.க | ஆர். எஸ். ராஜகண்ணப்பன் | 1584 |
| 130 | திருப்பரங்குன்றம் | தே.மு.தி.க | ஏ. கே. டி. ராஜா | இ.தே.கா | சி.ஆர். சுந்தர்ராஜன் | 48502 |
| 131 | திருப்பூர் தெற்கு | சி.பி.எம் | தங்கவேல் | இ.தே.கா | கே. செந்தில்குமார் | 38303 |
| 132 | திருப்பூர் வடக்கு | அ.தி.மு.க | எம். எஸ். எம். ஆனந்தன் | தி.மு.க | கோவிந்தசாமி | 73271 |
| 133 | திருப்பெரும்புதூர் | அ.தி.மு.க | மொளச்சூர் பெருமாள் | இ.தே.கா | யசோதா. | 40932 |
| 134 | திருப்போரூர் | அ.தி.மு.க | தண்டரை கே. மனோகரன் | பா.ம.க | கே. ஆறுமுகம் | 18288 |
| 135 | திருமங்கலம் | அ.தி.மு.க | ம. முத்துராமலிங்கம் | தி.மு.க | மணிமாறன் | 26367 |
| 136 | திருமயம் | அ.தி.மு.க | பி. கே. வைரமுத்து | இ.தே.கா | ராமசுப்புராம் | 31135 |
| 137 | திருவண்ணாமலை | தி.மு.க | எ. வ. வேலு | எஸ். ராமச்சந்திரன் | அ.தி.மு.க | 5126 |
| 138 | திருவள்ளூர் | அ.தி.மு.க | ரமணா | தி.மு.க. | இ. ஏ. பி. சிவாஜி | 23648 |
| 139 | திருவாடாணை | தி.மு.க | சுப. தங்கவேலன் | தே.மு.தி.க | முஜிபூர் ரகுமான் | 927 |
| 140 | திருவாரூர் | தி.மு.க | மு. கருணாநிதி | அ.தி.மு.க | எம். ராஜேந்திரன் | 50249 |
| 141 | திருவிடைமருதூர் | தி.மு.க | கோவி. செழியன் | அ.தி.மு.க | பாண்டியராஜன் | 394 |
| 142 | திருவில்லிபுத்தூர் | சி.பி.ஐ | வி. பொன்னுப்பாண்டி | தி.மு.க | .துரை | 6228 |
| 143 | திருவெறும்பூர் | தே.மு.தி.க | செந்தில் குமார் | தி.மு.க | கே. என். சேகரன் | 4205 |
| 144 | திருவையாறு | அ.தி.மு.க | ரத்தினசாமி | தி.மு.க | அரங்கநாதன் | 12962 |
| 145 | திருவொற்றியூர் | அ.தி.மு.க. | கே. குப்பன் | தி.மு.க | கே. பி. பி. சாமி | 27291 |
| 146 | துறைமுகம் | அ.தி.மு.க | பழ. கருப்பையா | இ.யூ.மு.லீ. | அல்டாஃப் உசைன் | 20317 |
| 147 | துறையூர் | அ.தி.மு.க | டி. இந்திரா காந்தி | தி.மு.க | எஸ். பரிமளாதேவி | 10935 |
| 148 | தூத்துக்குடி | அ.தி.மு.க | செல்லபாண்டியன் | தி.மு.க | கீதா ஜீவன் | 26193 |
| 149 | தென்காசி | ச.ம.க | சரத்குமார் | தி.மு.க | வீ. கருப்பசாமி பாண்டியன் | 22967 |
| 150 | தொண்டாமுத்தூர் | அ.தி.மு.க | எஸ். பி. வேலுமணி | இ.தே.கா | கந்தசாமி | 53203 |
| 151 | நத்தம் | அ.தி.மு.க | இரா. விசுவநாதன் | தி.மு.க | விஜயன் | 53089 |
| 152 | நன்னிலம் | அ.தி.மு.க | ஆர். காமராஜ் | தி.மு.க | ஆர். இளங்கோவன் | 10404 |
| 153 | நாகப்பட்டினம் | அ.தி.மு.க | கே. ஏ. ஜெயபால் | மு.லீ | முகமது ஷேக் தாவூத் | 5743 |
| 154 | நாகர்கோயில் | அ.தி.மு.க | நாஞ்சில் ஏ. முருகேசன் | தி.மு.க | ஆர். மகேஷ் | 6727 |
| 155 | நாங்குநேரி | ச.ம.க | எர்ணாவூர் நாராயணன் | இ.தே.கா | வசந்தகுமார் | 12280 |
| 156 | நாமக்கல் | அ.தி.மு.க | கே. பி. பி பாஸ்கர் | கொ.மு.க | தேவராஜன் | 35855 |
| 157 | நிலக்கோட்டை | பு.த | இராமசாமி | இ.தே.கா | இராஜாங்கம் | 24714 |
| 158 | நெய்வேலி | அ.தி.மு.க | எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் | பா.ம.க | டி. வேல்முருகன் | 8118 |
| 159 | பட்டுக்கோட்டை | இ.தே.கா | என்.ஆர்.ரங்கராஜன் | தே.மு.தி.க | செந்தில்குமார் | 8779 |
| 160 | பண்ருட்டி | தே.மு.தி.க | சிவகொழுந்து | தி.மு.க | சபா. ராஜேந்திரன் | 10716 |
| 161 | பத்மனாபபுரம் | தி.மு.க | டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் | தே.மு.தி.க | எஸ். ஆஸ்டின் | 19321 |
| 162 | பரமக்குடி | அ.தி.மு.க | எஸ். சுந்தர்ராஜ் | இ.தே.கா | ராம்பிரபு | 34606 |
| 163 | பரமத்தி-வேலூர் | த.கொ.இ.பே | தனியரசு | பா.ம.க. | வடிவேல் கவுண்டர் | 31018 |
| 164 | பர்கூர் | அ.தி.மு.க | கிருஷ்ணமூர்த்தி | பா.ம.க. | தி. க. ராசா | 29440 |
| 165 | பல்லடம் | அ.தி.மு.க | கே. பி. பரமசிவம் | கொ.மு.க | பாலசுப்ரமணியன் | 69776 |
| 166 | பல்லாவரம் | அ.தி.மு.க | ப. தன்சிங் | தி.மு.க | தா. மோ. அன்பரசன் | 17374 |
| 167 | பழநி | அ.தி.மு.க | கே. எஸ். என். வேணுகோபாலு | திமுக | இ. பெ. செந்தில்குமார் | 1754 |
| 168 | பவானி | அ.தி.மு.க | பி. ஜி. நாராயணன் | பா.ம.க | மகேந்திரன் | 28041 |
| 169 | பவானிசாகர் | சி.பி.ஐ | பி. எல். சுந்தரம் | தி.மு.க | லோகேஸ்வரி | 19403 |
| 170 | பாபநாசம் | அ.தி.மு.க | துரைக்கண்ணு | இ.தே.கா | ராம்குமார் | 18007 |
| 171 | பாப்பிரெட்டிபட்டி | அ.தி.மு.க | பி. பழனியப்பன் | தி.மு.க | முல்லை வேந்தன் | 10489 |
| 172 | பாலக்கோடு | அ.தி.மு.க | கே. பி. அன்பழகன் | பா.ம.க. | பாடி செல்வன் | 43213 |
| 173 | பாளையங்கோட்டை | தி.மு.க | மைதீன்கான் | சி.பி.எம் | பழனி | 605 |
| 174 | புதுக்கோட்டை | சி.பி.ஐ | எஸ். பி. முத்துக்குமரன் | தி.மு.க | பெரியண்ணன் அரசு | 3101 |
| 175 | புவனகிரி | அ.தி.மு.க | செல்வி ராமஜெயம் | பா.ம.க | தமிழ்செல்வன் | 13117 |
| 176 | பூம்புகார் | அ.தி.மு.க | பவுன்ராஜ் | பா.ம.க | அகோரம் | 11373 |
| 177 | பூவிருந்தவல்லி | அ.தி.மு.க | மணிமாறன் | இ.தே.கா | ஜி. வி. மதியழகன் | 41419 |
| 178 | பெண்ணாகரம் | சி.பி.ஐ | ந. நஞ்சப்பன் | தி.மு.க | இன்பசேகரன் | 11543 |
| 179 | பெரம்பலூர் | அ.தி.மு.க | இரா. தமிழ்ச்செல்வன் | தி.மு.க | எம். பிரபாகரன் | 19079 |
| 180 | பெரம்பூர் | சி.பி.எம் | ஏ. சுந்தரராஜன் | பெ.ம.க. | என். ஆர். தனபாலன் | 17423 |
| 181 | பெரியகுளம் | சி.பி.எம் | ஏ. லாசர் | தி.மு.க | வீ. அன்பழகன் | 5641 |
| 182 | பெருந்துறை | அ.தி.மு.க | தோப்பு வெங்கடாச்சலம் | கொ.மு.க. | கே. கே. சி. பாலசுப்ரமணியம் | 42167 |
| 183 | பேராவூரணி | தே.மு.தி.க | சி. அருண்பாண்டியன் | இ.தே.கா | கே.மகேந்திரன் | 7194 |
| 184 | பொன்னேரி | அ.தி.மு.க. | பொன். ராஜா | தி.மு.க | அ. மணிமேகலை | 31073 |
| 185 | பொள்ளாச்சி | அ.தி.மு.க | முத்துக்கருப்பண்ணசாமி | கொ.மு.க | நித்யானந்தம் | 30308 |
| 186 | போடிநாயக்கனூர் | அ.தி.மு.க. | ஓ. பன்னீர்செல்வம் | தி.மு.க. | எஸ்.லெட்சுமணன் | 29906 |
| 187 | போளூர் | அ.தி.மு.க | ஜெயசுதா லட்சுமிகாந்தன் | பா.ம.க | எதிரொலி மணியன் | 28545 |
| 188 | மடத்துக்குளம் | அ.தி.மு.க | சி. சண்முகவேலு | தி.மு.க | சாமிநாதன் | 19669 |
| 189 | மணப்பாறை | அ.தி.மு.க | ஆர். சந்திரசேகர் | சுயேச்சை | பொன்னுசாமி | 28299 |
| 190 | மண்ணச்சநல்லூர் | அ.தி.மு.க | டி. பி. பூனாட்சி | தி.மு.க | என். செல்வராஜ் | 19190 |
| 191 | மதுரவாயல் | சி.பி.எம் | கே. பீமாராவ் | பா.ம.க | கே. செல்வம் | 24011 |
| 192 | மதுராந்தகம் | அ.தி.மு.க | கணிதா சம்பத் | இ.தே.கா | ஜெயக்குமார் | 18494 |
| 193 | மதுரை கிழக்கு | அ.தி.மு.க | கே. தமிழரசன் | தி.மு.க | பி. மூர்த்தி | 28755 |
| 194 | மதுரை தெற்கு | சி.பி.எம் | அண்ணாதுரை | இ.தே.கா | வரதராஜன் | 45451 |
| 195 | மதுரை மத்தி | தே.மு.தி.க | ஆர். சுந்தரராஜன் | தி.மு.க | எஸ். எஸ். கெளஸ் பாட்ஷா | 19560 |
| 196 | மதுரை மேற்கு | அ.தி.மு.க | செல்லூர் கே. ராஜு | தி.மு.க | கோ. தளபதி | 38761 |
| 197 | மதுரை வடக்கு | அ.தி.மு.க | ஏ. கே. போஸ் | இ.தே.கா | ராஜேந்திரன் | 46400 |
| 198 | மன்னார்குடி | தி.மு.க | டி. ஆர். பா. ராஜா | அ.தி.மு.க | சிவா. ராஜமாணிக்கம் | 3982 |
| 199 | மயிலம் | அ.தி.மு.க | கே. பி. நாகராஜன் | பா.ம.க. | ரா. பிரகாஷ் | 20081 |
| 200 | மயிலாடுதுறை | தே.மு.தி.க | ஏ. ஆர். பால அருட்செல்வம் | இ.தே.கா | ராஜ்குமார் | 3017 |
| 201 | மாதவரம் | அ.தி.மு.க. | வி. மூர்த்தி | தி.மு.க | டாக்டர் கனிமொழி | 34765 |
| 202 | மானாமதுரை | அ.தி.மு.க | ம. குணசேகரன் | தி.மு.க | தமிழரசி | 14020 |
| 203 | முசிறி | அ.தி.மு.க | என். ஆர். சிவபதி | இ.தே.கா | ராஜசேகரன் | 43791 |
| 204 | முதுகுளத்தூர் | அ.தி.மு.க | மு. முருகன் | தி.மு.க | சத்தியமூர்த்தி | 20089 |
| 205 | மேட்டுப்பாளையம் | அ.தி.மு.க | ஓ. கே. சின்னராஜ் | தி.மு.க | அருண் குமார் | 25775 |
| 206 | மேட்டூர் | தே.மு.தி.க | எஸ். ஆர். பார்த்திபன் | பா.ம.க | ஜி. கே. மணி | 2594 |
| 207 | மேலூர் | அ.தி.மு.க | ஆர். சாமி | தி.மு.க | ராணி ராஜமாணிக்கம் | 24462 |
| 208 | மைலாப்பூர் | அ.தி.மு.க | ராஜலட்சுமி | இ.தே.கா | கே.வி.தங்கபாலு | 29204 |
| 209 | மொடக்குறிச்சி | அ.தி.மு.க | ஆர். என். கிட்டுச்சாமி | இ.தே.கா | பழனிச்சாமி | 40162 |
| 210 | ராணிப்பேட்டை | அ.தி.மு.க | முஹம்மத்ஜான் | தி. மு. க | ஆர். காந்தி | 14201 |
| 211 | ராதாகிருஷ்ணன் நகர் | அ.தி.மு.க. | பி. வெற்றிவேல் | திமுக | பி. கே. சேகர் பாபு | 31255 |
| 212 | ராதாபுரம் | தே.மு.தி.க | மைக்கேல் ராயப்பன் | இ.தே.கா | வேல்துரை | 21475 |
| 213 | வந்தவாசி | அ.தி.மு.க | செய்யாமூர் குணசீலன் | தி.மு.க | எஸ். பி. ஜெ. கமலக்கண்ணன் | 12296 |
| 214 | வாசுதேவநல்லூர் | அ.தி.மு.க | எஸ். துரையப்பா | இ.தே.கா | கணேசன் | 28090 |
| 215 | வாணியம்பாடி | அ.தி.மு.க | கோவி. சம்பத்குமார் | முலீ | அப்துல் பாசித் | 18225 |
| 216 | வானூர் | அ.தி.மு.க | ஜானகிராமன் | தி.மு.க | செ. புஷ்பராஜ் | 25138 |
| 217 | வால்பாறை | சி.பி.ஐ | எம். ஆறுமுகம் | இ.தே.கா | கோவை தங்கம் | 3421 |
| 218 | விக்கிரவாண்டி | சி.பி.எம் | ராமமூர்த்தி | தி.மு.க | கு. ராதாமணி | 14897 |
| 219 | விராலிமலை | அ.தி.மு.க | சி. விஜயபாஸ்கர் | தி.மு.க | எஸ். ரகுபதி | 39309 |
| 220 | விருகம்பாக்கம் | தே.மு.தி.க. | பார்த்தசாரதி | தி.மு.க | கே. தனசேகரன் | 14094 |
| 221 | விருதுநகர் | தே.மு.தி.க | பாண்டியராஜன் | இ.தே.கா | நவீன் ஆம்ஸ்ட்ராங் | 21286 |
| 222 | விருத்தாச்சலம் | தே.மு.தி.க | பி. வி. பி. முத்துக்குமார் | இ.தே.கா | நீதி ராஜன் | 13641 |
| 223 | வில்லிவாக்கம் | அ.தி.மு.க | ஜே. சி. டி. பிரபாகரன் | தி.மு.க | க. அன்பழகன் | 10782 |
| 224 | விளவங்கோடு | இ.தே.கா | விஜய தரணி | சி.பி.எம் | லீமா ரோஸ் | 23789 |
| 225 | விளாத்திகுளம் | அ.தி.மு.க | ஜி. வி. மார்க்கண்டேயன் | இ.தே.கா | பெருமாள் சாமி | 22597 |
| 226 | விழுப்புரம் | அ.தி.மு.க | சி. வி. சண்முகம் | தி.மு.க | கே. பொன்முடி | 12097 |
| 227 | வீரபாண்டி | அ.தி.மு.க | எஸ். கே. செல்வம் | தி.மு.க | வீரபாண்டி ஆ. இராஜேந்திரன் | 26498 |
| 228 | வேடசந்தூர் | அ.தி.மு.க | ச. பழனிச்சாமி | இ.தே.கா | தண்டபாணி | 50712 |
| 229 | வேதாரண்யம் | அ.தி.மு.க | என். வி. காமராஜ் | சுயேட்சை | எஸ். கே. வேதரத்தினம் | 10928 |
| 230 | வேப்பனஹள்ளி | தி.மு.க | டி. செங்குட்டுவன் | தே.மு.தி.க | எஸ். எம். முருகேசன் | 7604 |
| 231 | வேலூர் | அ.தி.மு.க | வி. எஸ். விஜய் | இ.தே.கா | ஞானசேகரன் | 15176 |
| 232 | வேளச்சேரி | அ.தி.மு.க | எம். கே. அசோக் | பா.ம.க. | ஜெயராமன். | 31720 |
| 233 | ஸ்ரீரங்கம் | அ.தி.மு.க | ஜெ. ஜெயலலிதா | தி.மு.க. | என். ஆனந்த் | 41848 |
| 234 | ஸ்ரீவைகுண்டம் | அ.தி.மு.க | எஸ். பி. சண்முகநாதன் | இ.தே.கா | எம். பி. சுடலையாண்டி | 21122 |
நிறக்குறிப்புகள்:
| * | பழங்குடியினருக்கு (எஸ். டி) ஒதுக்கப்பட்ட தொகுதிகள் |
| * | தாழ்த்தப்பட்டவருக்கு (எஸ். சி - பட்டியல் சாதிகள்) ஒதுக்கப்பட்ட தொகுதிகள் |
- குறிப்பு: பின்வரும் பட்டியலில் திமுக கூட்டணி என்ற செங்குத்து வரிசையில் திமுக கூட்டணிக் கட்சிகளும், அதிமுக கூட்டணி என்ற செங்குத்து வரிசையில் அதிமுக கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
கட்சி பெயர்கள் விரிவாக்கம்
- அஇஅதிமுக/அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- அஇபாபி - அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
- மூமுக - மூவேந்தர் முன்னணிக் கழகம்
- அஇநாமக- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
- பாஜக - பாரதிய ஜனதா கட்சி
- இபொக - இந்திய பொதுவுடமைக் கட்சி
- இ.பொ.க (மா)- இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
- தேமுதிக - தேசிய முற்போக்கு திராவிட கழகம்
- திமுக - திராவிட முன்னேற்றக் கழகம்
- இதேகா - இந்திய தேசிய காங்கிரசு
- இஒமுலீ/இயூமுலீக் - இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கு
- கொமுக - கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
- மூமுக - மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- மூமுமு - மூவேந்தர் முன்னேற்ற முன்னணி
- மமக - மனிதநேய மக்கள் கட்சி
- பாமக - பாட்டாளி மக்கள் கட்சி
- புத - புதிய தமிழகம்
- பெமக - பெருந்தலைவர் மக்கள் கட்சி
- இகுக - இந்தியக் குடியரசுக் கட்சி
- சமக - சமத்துவ மக்கள் கட்சி
- தகொஇபே - தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
- விசி - விடுதலைச் சிறுத்தைகள்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Challenge is to conduct peaceful polls in West Bengal: CEC". சிஃபி. 4 பெப்ரவரி 2011. http://www.sify.com/news/challenge-is-to-conduct-peaceful-polls-in-west-bengal-cec-news-national-lcerknbbchc.html. Retrieved 27 பெப்ரவரி 2011.
- ↑ "As polls near, Karuna dumps retirement plan". The Times of India. 27 February 2011. http://timesofindia.indiatimes.com/india/As-polls-near-Karuna-dumps-retirement-plan/articleshow/7584245.cms. Retrieved 27 February 2011.
- ↑ "Jun 1969 - Orissa. - Report on Inquiry into Corruption Charges against Former Ministers". Keesing's Record of World Events. 1 June 1969. http://www.keesings.com/search?kssp_selected_tab=article&kssp_a_id=23416n01ind. Retrieved 1 March 2011.
- ↑ http://timesofindia.indiatimes.com/city/chennai/AIADMK-list-out-Jaya-to-enter-fray-from-Srirangam/articleshow/7724607.cms
- ↑ "Karunanidhi to contest from Tiruvarur". The Hindu. 17 March 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1547644.ece. Retrieved 18 March 2011.
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
- ↑ மதிமுக அதிமுக உறவு இல்லை, 2011 தேர்தலில் மதிமுக போட்டியில்லை
- ↑ polling in Tamil Nadu
- ↑ அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
- ↑ அதிமுக 160 வேட்பாளர்கள் அறிவிப்பு தட்ஸ்தமிழ் செய்தி
- ↑ 11.0 11.1 பொதுவுடமை கட்சிகளுடன் உடன்பாடு
- ↑ சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள் - தட்ஸ்தமிழ்
- ↑ தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதி - தட்ஸ்தமிழ்
- ↑ திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிப்பு
- ↑ காங்கிரசுக்கு 63 தொகுதிகள்-பாமகவுக்கு 1 இடம் குறைப்பு
- ↑ {http://www.dinamalar.com/News_Detail.asp?Id=206938 திமுக போட்டியிடும் தொகுதிகள் தினமலர்]
- ↑ திமுக போட்டியிடும் தொகுதிகள் நக்கீரன்
- ↑ திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
- ↑ காங்கிரசுக்கான தொகுதிகள் அறிவிப்பு
- ↑ பாமகவுக்கான தொகுதிகள் அறிவிப்பு
- ↑ விசி க்கான தொகுதிகள் அறிவிப்பு
- ↑ கொமுக போட்டியிடும் தொகுதிகள்
- ↑ 23.0 23.1 23.2 திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்The three-day battle of nerves ends
- ↑ முலீக்குக்கான தொகுதிகள் அறிவிப்பு 3 தொகுதிகளில் போட்டி - கருணாநிதி தாராளம்
- ↑ மூமுக போட்டியிடும் தொகுதி
- ↑ திமுகவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி-ஒரு சீட் ஒதுக்கீடு
- ↑ பெமக போட்டியிடும் தொகுதி
- ↑ BJP in poll pact with Janata Party
- ↑ 'சசிகலா குடும்பத்தினரின் பிடியில் ஜெயலலிதா': சுப்பிரமணிய சாமி
- ↑ ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் ஐந்து தொகுதிகள்
- ↑ மக்கள் சக்கி கட்சி போட்டியிடும் தொகுதிகள்
- ↑ மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பெயர் & தொகுதி
- ↑ தேர்தல் ஆணையத்தின் முடிவு இணையத்தின் வாயிலாக
இதனையும் பார்க்கவும் [தொகு]
தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||
|
|||||||||||||||||