ஜி. கே. மூப்பனார்
| ஜி. கே. மூப்பனார் | |
| அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரஸ் |
|---|---|
|
|
|
| பிறப்பு | 19-8-1930 கபிஸ்தலம், தமிழ்நாடு |
| இறப்பு | 30-8-2001 சென்னை |
| வாழ்க்கைத் துணை |
கஸ்தூரி |
| பிள்ளைகள் | 1 மகன் ஜி.கே.வாசன் , 1 மகள்உஷாராணி |
| இருப்பிடம் | சென்னை |
| ஆகஸ்ட் 30 இன் படியான தகவல், 2001 மூலம்: [1] |
|
ஜி. கே. மூப்பனார் (ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் காங்கிரசு தலைவர். இவர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் 6 பெர் - சகோதரர்கள்: ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.இவரது மகன் ஜி.கே வாசன்.தற்போதைய நடுவண் அரசின் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்
பொருளடக்கம் |
வகித்த பதவிகள் [தொகு]
- புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
- 1956-1972 வரை தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை
- 1980-2001 வரை தலைவர் திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை
- 1965-1975 வரை தலைவர் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
- 1976-1980 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
- 1980-1988 வரை பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
- 1988-1989 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
- 1989-1990 வரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழ்நாடு
- 1977-1989 வரை ராஜ்யசபா உறுப்பினர்
- 1996-2001 வரை தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்
- ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
ஈடுபாடு [தொகு]
- இசை
- அரசியல்
- பொதுத் தொண்டு
சிறப்பு பெயர் [தொகு]
இவர் மகன் ஜி.கே.வாசன் தற்போது மத்திய அமைச்சராக பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இவர் ஒருவரே. [சான்று தேவை]