தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971
| ‹ 1967 |
||||
| தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 | ||||
|---|---|---|---|---|
| தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||
| மார்ச் 1971 | ||||
| முதல் கட்சி | இரண்டாம் கட்சி | |||
| தலைவர் | மு. கருணாநிதி | காமராஜர் | ||
| கட்சி | திமுக | காங்கிரசு (ஓ) | ||
| தலைவரின் தொகுதி | சைதாப்பேட்டை | போட்டியிடவில்லை | ||
| வென்ற தொகுதிகள் | 205 | 21 | ||
| மாற்றம் | +26 | -50 | ||
| மொத்த வாக்குகள் | 8,506,078 | 5,579,039 | ||
| விழுக்காடு | 54.30% | 37.94% | ||
| மாற்றம் | +1.71% | -3.16% | ||
|
முந்தைய தமிழ்நாட்டு முதல்வர் |
||||
தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற்று, மு. கருணாநிதி மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார்.
பொருளடக்கம் |
தொகுதிகள் [தொகு]
1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
கட்சிகள் [தொகு]
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. இந்திய தேசிய காங்கிரசு 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. சி. சுப்ரமணியத்தின் தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சி, மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக வுடனான உறவை முறித்துக் கொண்டது.. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், ஃபார்வார்டு ப்ளாக், சி. பா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசுக் கட்சி, பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2][3][4][5]
அரசியல் நிலவரம் [தொகு]
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு பதவி விலகி தேர்தலை சந்தித்தது. திமுகவின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு ஆதரவளித்த இந்திரா காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.[3][5][2]
தேர்தல் முடிவுகள் [தொகு]
தேர்தல் தேதி – 03 ஜனவரி 1971 ; மொத்தம் 71 % வாக்குகள் பதிவாகின. கட்சிகள் பெற்ற வாக்குகளும் வென்ற இடங்களும்:[6]
| கூட்டணி | கட்சி | வாக்குகள் | வாக்கு % | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | மாற்றம் |
|---|---|---|---|---|---|---|
| முற்போக்கு முன்னணி இடங்கள்: 205 மாற்றம்:+26 வாக்குகள்: 8,506,078 வாக்கு %: 54.30% |
திமுக | 7,654,935 | 48.58% | 203 | 184 | +47 |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 364,803 | 2.32% | 10 | 8 | +6 | |
| ஃபார்வார்ட் ப்ளாக் | 268,721 | 1.71% | 9 | 7 | +6 | |
| பிரஜா சோஷ்யலிஸ்ட் | 147,985 | 0.94% | 4 | 4 | — | |
| முஸ்லிம் லீக் | 69,634 | 0.44% | 2 | 2 | -1 | |
| ஜனநாயக முன்னணி இடங்கள்: 21 மாற்றம்: -50 வாக்குகள்: 6,016,530 வாக்கு %: 38.18% |
நிறுவன காங்கிரசு | 5,513,894 | 34.99% | 201 | 15 | -36 |
| சுதந்திராக் கட்சி | 465,145 | 2.95% | 19 | 6 | -14 | |
| சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி | 37,491 | 0.24% | 2 | 0 | — | |
| மற்றவர்கள் இடங்கள்: 8 மாற்றம்: வாக்குகள்: 1,234,193 வாக்கு %: 7.52% |
சுயேட்சைகள் | 965,379 | 6.13% | 256 | 8 | |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | 259,298 | 1.65% | 37 | 0 | -11 | |
| ஜன சங்கம் | 9,516 | 0.06% | 5 | 0 | — | |
| மொத்தம் | 11 கட்சிகள் | 15,756,801 | 100% | — | 234 | — |
ஆட்சி அமைப்பு [தொகு]
இத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, மு. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 1971 இல் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள்.[7]
| அமைச்சர் | துறை |
|---|---|
| மு. கருணாநிதி | முதல்வர் |
| இரா. நெடுஞ்செழியன் | கல்வி, வருவாய் |
| கே. ராஜாராம் | பிற்படுத்தப்பட்டோர் |
| க. அன்பழகன் | சுகாதாரம் |
| அன்பில் தர்மலிங்கம் | விவசாயம் |
| எஸ். ஜே. சாதிக் பாட்சா | பொதுப்பணிகள் |
| சத்தியவாணி முத்து | அரிஜனர் நலம் |
| எம். கண்ணப்பன் | அற நிலையங்கள் |
| எஸ். மாதவன் | தொழில் |
| என். வி. நடராஜன் | தொழிலாளர் நலம் |
| ஓ. பி. ராமன் | மின்சாரம் |
| சி. பா. ஆதித்தனார் | கூட்டுறவு |
| பண்ருட்டி இராமச்சந்திரன் | போக்குவரத்து |
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
- ↑ 2.0 2.1 Krishna, Sankaran (1999). Postcolonial insecurities: India, Sri Lanka, and the question of nationhood. University of Minnesota Press. pp. 87. http://books.google.com/books?id=__6PDx2CyLkC&lpg=PA87&ots=nmaB6vHA2J&dq=dmk%20alliance%201967&pg=PA87#v=onepage&q=&f=false.
- ↑ 3.0 3.1 S. Devasam Pillai (1976). Aspects of Changing India. pp. 116–119. ISBN 8171541577.
- ↑ Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545.
- ↑ 5.0 5.1 Mitra, Subrata Kumar (2006). The puzzle of India's governance: culture, context and comparative theory. Routledge. pp. 118–20. ISBN 0415348617, ISBN 9780415348614. http://books.google.com/books?id=dnoW56MhJZMC&pg=P118.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India accessed August 16, 2010
- ↑ Careers digest, Volume 8. 1971. pp. 447. http://books.google.com/books?client=firefox-a&id=pYHNAAAAMAAJ&dq=K.+Rajaram+tamil+nadu+food+minister&q=K.+Rajaram#search_anchor.
வெளி இணைப்பு [தொகு]
1971 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
|
|||||||||||||||||