ஜெ. ஜெயலலிதா
| ஜெயலலிதா ஜெயராம் | |
தமிழக முதல்வர் |
|
|
16-ஆம் தமிழக முதல்வர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 16 மே 2011 |
|
| முன்னவர் | மு. கருணாநிதி |
| தொகுதி | ஸ்ரீரங்கம் |
|
14-ஆம் தமிழக முதல்வர்
|
|
| பதவியில் 2 மார்ச் 2002 – 12 மே 2006 |
|
| முன்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
| பின்வந்தவர் | மு. கருணாநிதி |
| தொகுதி | ஆண்டிப்பட்டி |
|
தமிழக முதல்வர் (முடக்கப்பட்டது)[1]
|
|
| பதவியில் 14 மே 2001 – 21 செப்டம்பர் 2001 |
|
| முன்னவர் | மு. கருணாநிதி |
| பின்வந்தவர் | ஓ. பன்னீர்செல்வம் |
| தொகுதி | போட்டியிட இயலாது |
|
11-ஆம் தமிழக முதல்வர்
|
|
| பதவியில் 24 ஜூன் 1991 – 12 மே 1996 |
|
| முன்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்வந்தவர் | மு. கருணாநிதி |
| தொகுதி | பர்கூர் |
| அரசியல் கட்சி | அ. தி. மு. க. |
| கட்சி பொறுப்பு | பொதுச் செயளாலர் |
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 24, 1948 மேல்கோட்டை மைசூர், கர்நாடகா |
| இருப்பிடம் | சென்னை |
| சமயம் | இந்து |
ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் ஜெயலலிதாவின தாத்தா குடும்பமும். அவர் இந்த ஊர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.
இவரது அன்னை சந்தியாவும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். சென்னையில் இவரது பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் கிட்டின. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்
பின்னர், அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து [2] 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989 முதல் 1991வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார். 2011 இல் தமிழக முதல்வராக 3 வது முறையாகத் தேர்வு ஆகியுள்ளார்
[தொகு] சட்டமன்ற உறுப்பினர்
| ஆண்டு | நிலைமை | இடம் |
|---|---|---|
| 1986 | வெற்றி | போடிநாயக்கனூர் |
| 1991 | வெற்றி | பர்கூர், காங்கேயம் |
| 1996 | தோல்வி | பர்கூர் |
| 2001 | வெற்றி | ஆண்டிபட்டி |
| 2006 | வெற்றி | ஆண்டிபட்டி |
| 2011 | வெற்றி | ஸ்ரீரங்கம் |
[தொகு] முதல் அமைச்சர்
| முதல் | வரை | தேர்தல் | ||||
|---|---|---|---|---|---|---|
| 1991 | 1996 | 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | 2002 | 2006 | 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | |
| 2011 | இன்றுவரை | 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The Hindu — SC unseats Jayalalithaa as CM, Full text of the judgment from official Supreme Court site).
- ↑ தினமணி
|
||||||||||||||||||||||||||